நக்கீரன் எனும் பெயரில் நடராஜா முரளீதரன் அவர்கள் ஜனவரி 24, 2018 தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 2 கோடி ரூபா பெற்றுக் கொண்டது பற்றி ஒரு பதிவினை செய்திருந்தார். அப்பதிவில் ததேகூ நா.உறுப்பினர், வேறு கட்சித் தலைவர்களுடான முரண்பாடான கருத்துக்கள் பற்றி பகர்ந்தார். அத்துடன் 2 கோடி ரூபா பற்றி மாவை. சேனாதிராஜாவினால் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் பற்றிய விபரமும் கூறினார். முன்னையதை விட, பின்னையதே எனக்கு முக்கியமாகப் பட்டது. அது பற்றி நான் சில விளக்கங்கள் கேட்டிருந்தேன். அதுவும் கீழே மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிழமையாகியும், இன்றுவரை எந்த பதிலும் நண்பர் முரளீதரனிடம் இருந்து வராததால், நான் விளங்கிக் கொண்டதை ஏனைய நண்பர்களுடன் பகிர்கிறேன்.
நண்பர் முரளீதரனின் தரவு பின்வருமாறு:
நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அனுமதிக்கப்பட்ட 2 கோடி ஒதுக்கீட்டில் மாவட்ட செயலகம் ஊடாக மேற்கொண்ட பணி விபரத்தில் மாவை. சேனாதிராஜாவினால் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் பற்றிய விபரம் பின்வருமாறு.
(1) தெல்லிப்பளை ப.நோ.கூ.சங்கம் 5 லட்சம் ,
(2) அளவெட்டி , மல்லாகம் ப.நோ.கூ.சங்கம் 5 லட்சம் ,
(3) தெல்லிப்பளை கூட்டுறவு வைத்தியசாலை 15 லட்சம்,
(4) அளவெட்டி தெற்கு கிராம செயலகம் 10 லட்சம்,
(5) அளவெட்டி மேற்கு கிராமச் செயலகம் 10 லட்சம்,
(6) அளவெட்டி மகாஜன ச.ச.நிலையம் 15 லட்சம்,
(7) தையிட்டி பராசக்தி ச.ச.நிலையம் 10 லட்சம்,
(8) அதேபோன்று மாவிட்டபுரம் கிராம அபிவிருத்திச் சங்கம் 15 லட்சம் ,
(9) மாவிட்டபுரம் முத்துமாரி அம்மன் ஆலயம் 15 லட்சம் ரூபா,
(10)நகுலேஸ்வரம் இலந்தகலட்டி வீதி , கருகம்பானை பொது நோக்கு மண்டபம் , குரும்பசிட்டி வளர்மதி ச.ச.நிலையம் மாவிட்டபுரம் பரா சக்தி ச.ச. நிலையம் , தந்தை செல்வாபுரம் கலைவாணி ச.ச.நிலையம் , பலாலி கிழக்கு முன்பள்ளி ஆகிய ஆறு அமைப்புகளிற்கும் 15 இலட்சம் விகிதம் 90 லட்சம் ரூபா
(11)வலி.வடக்கு இளைஞர் கழகங்களிற்கான விளையாட்டு உபகரணங்களிற்காக 10 லட்சம்,
(12) மாவிட்டபுரம் கிராம அபிவிருத்திச் சங்கம் 15 லட்சம்,
(13) மாவிட்டபுரம் முத்துமாரி அம்மன் ஆலயம் 15 லட்சம் ரூபா;
(14) தெல்லிப்பளை ப.நோ.கூ.சங்கம் 5 லட்சம்,
(15) அளவெட்டி , மல்லாகம் ப.நோ.கூ.சங்கம் 5 லட்சம்,
(16) தெல்லிப்பளை கூட்டுறவு வைத்தியசாலை 15 லட்சம்,
(17) அளவெட்டி தெற்கு கிராமச் செயலகம் 10 லட்சம்,
(18) அளவெட்டி மேற்கு கிராமச் செயலகம் 10 லட்சம்,
(19) அளவெட்டி மகாஜன ச.ச.நிலையம் 15 லட்சம்,
(20) தையிட்டி பராசக்தி ச.ச.நிலையம் 10 லட்சம்.
(21) நகுலேஸ்வரம் இலந்தகலட்டி வீதி , கருகம்பானை பொது நோக்கு மண்டபம் , குரும்பசிட்டி வளர்மதி ச.ச.நிலையம் மாவிட்டபுரம் பரா சக்தி ச.ச. நிலையம் , தந்தை செல்வாபுரம் கலைவாணி ச.ச.நிலையம் , பலாலி கிழக்கு முன்பள்ளி ஆகிய ஆறு அமைப்புகளிற்கும் 15 லட்சம் விகிதம் 90 லட்சம் ரூபாவும்
(22) வலி.வடக்கு இளைஞர் கழகங்களிற்கான விளையாட்டு உபகரணங்களிற்காக 10 லட்சம் என மொத்தமாக இரண்டு கோடி ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது என
நாடாளுமன்ற உறுப்பினர் எழுத்தில் கொடுத்துள்ளார்.
இதே போன்று வன்னி தேர்தல் மாவட்ட நா.உ. சிறிஸ்கந்தராசா, யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட நா.உ. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 2 கோ ரூபாவை எப்படி பல்வேறு நிறுவனங்களுக்குக் கொடுத்த விபரத்தைத் தந்துள்ளார்கள்..
பட்டியலை உற்று நோக்கினால் (1) இலிருந்து (8) வரை மறுபடி (14) இலிருந்து (20) வரை தரப்பட்டுள்ளன. (9) மறுபடி (13) இல் தரப்பட்டுள்ளது. இவ்வாறு பட்டியல் முழுவதும் ஒரே குழறுபடி. இது 2 கோடிக்கான கணக்காகவும் தெரியவில்லை, அதைப்பற்றிய விளக்கமும் தரப்படவில்லை.
நண்பர் முரளீதரன் நாடாளுமன்ற உறுப்பினர் எழுத்தில் கொடுத்துள்ளார் என்று திடமாக வேறு கூறியுள்ளார். அவ்வாறாயின் நாடாளுமன்ற உறுப்பினரான பொறுப்பான பதவிக்கு ததேகூ பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டவரின் திறமை அவ்வளவுதானா? தமிழிலா? கணக்கிலா? அல்லது இரண்டிலுமா?
இந்த நிலையில் பிரதமர் இந்த நிதியை தனது பைக்குள் இருந்து கொடுக்கவில்லை.. மக்களது வரிப்பணத்தில் இருந்துதான் ஒதுக்கினார். தமிழ்மக்களால் கொடுக்கப்படும் வரிப்பணமும் இதில் அடங்கும் என்று நண்பர் முரளீதரன் கூறுகிறார். அதுதவிர சிவசக்தி ஆனந்தன் புத்திசாலி என்றால் அவர் பிரதமருடன் பேசி இந்தப் பணத்தைப் பெற்று தனது தொகுதிமக்களுக்கு கொடுக்க வேண்டும் என சவால் வேறு விடுகின்றார்.
மக்கள்தான் அசட்டையாக இல்லாமல், வாக்காளராகிய உங்கள் உரிமையையும் பலத்தையும் சரிவரப் பயன்படுத்த வேண்டும். மக்களுக்காக, அதுவும் மக்கள் வரிப்பணத்திலிருந்தும், கொடுக்கப்படும் பணம் மக்களுக்காக சரிவரப் பயன்படுத்தப்படுகிறதா என அவதானமாக இருக்க வேண்டும்.
பின்னூட்டத்தில் எனது கருத்து:
Nadarajah Muralitharan நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்விவகாரங்கள், கணக்குகள் எல்லாம் மிகவும் அறிந்தவராகவும், ததேகூ விற்கு மிகவும் நெருங்கியவராகவும் தென்படுகிறீர்கள். முதலாவது இந்தப் பதிவில் பட்டியல் போடப்பட்டது மொத்தம் எத்தனை கோடிக்கானது என்பதனையும், யாருக்கு அல்லது எந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு, எந்தத் தொகுதிக்காக கொடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டது என்று கூறுவீர்களா? அடுத்து கொடுக்கப்பட்ட ஒவ்வொரு 2 கோடிக்கும் எந்தப் பாராளுமன்ற உறுப்பினருடையது, எந்தத் தொகுதிக்கானது என்று மதிப்பிற்குரிய மாவை சேனாதிராசா மூலமோ அல்லது வேறு உங்கள் ததேகூ தொடர்புகளைப் பயன்படுத்தியோ இது போன்ற பட்டியல்கள் போட்டு பதிவு செய்வீர்களா? பலரும் அதை அறிய ஆவலாக உள்ளார்கள். குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள பெண்கள் கடந்த காலங்களில் எதுவித அபிவிருத்தியும் இன்றி வாழ்வாதார முன்னேற்றங்கள் தடைப்பட்ட நிலையில் நிர்க்கதியாக நிற்கின்றனர். வெகு சீக்கிரம் கேட்டதை எதிர்பார்க்கிறோம். நன்றி.
நீங்கள் கூடிய சீக்கிரம் நான் கேட்டவற்றிற்கு பதிலளித்தால், அதைக்காட்டி நான் சிவசக்தி ஆனந்தனிடம் ஏன் மற்றவர்கள் போல் 2 கோடியைப் பெற்று மக்களின் நலனுக்கு செலவிடவில்லை என்று கேட்கிறேன்.
(Janaki Karthigesan Balakrishnan)