பெண்களின்
உரிமைக்கு எதிரான தாக்குதலுக்கெதிராக
கேரள பெண்கள் சமூகம்
சாதி மதம் பாராமல் திரண்620 கிமீ நீளம்…
அதாவது – 385 மைல்கள்….
கேரளாவின் வடகோடி காஸர்கோட்டில் –
கேரள சுகாதார அமைச்சர்
கே.கே.ஷைலஜா
முதல் பெண்ணாக நிற்க…
தென்திசை மாவட்டம் திருவனந்தபுரத்தில் –
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத்
கடைசிப் பெண்மணியாக நிற்க….
ஒருவரல்ல…இருவரல்ல…
50 லட்சம் பெண்கள்…
620 கிமீ. .நீளத்துக்கு….
சுவர்போல வரிசையாக
அணிவகுத்து நின்றனர்.
பெண்ணுரிமை காப்போம் என
‘சபத முழக்க’மெழுப்பினர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன்
துவக்கிவைத்த இந்நிகழ்வின்
இறுதியில் பொதுக்கூட்டத்திலும்
அவர் பங்கேற்றார். பிருந்தா காரத்,
இந்திய மாதர் தேசிய சம்மேளன பொதுச்செயலாளர் ஆனிராஜா,
பிற மகளிர் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள்.
ஹரியானாவின் சமூக செயல்பாட்டாளர் சுவாமி அக்னிவேஷ் கொச்சியில்
‘வனிதா மதில் ‘நிகழ்ச்சிக்கு வருகை தந்து
வாழ்த்தினார்.
திரைப்பட நடிகை ரீமா கல்லிங்கல் பங்கேற்றதை நான் சொல்லாதிருந்தால்
சரியாகுமா ?
———————————————————————————–
இந்த வரலாற்றுக் காட்சியை
ரெண்டே நிமிட
விடியோவாகப் பாருங்கள்…..
https://www.facebook.com/jeeva.subramaniyan.98/videos/788026518209994/
விடியோவைப் பகிர்ந்த
ஜீவா சுப்பிரமணியனுக்கு
Jeeva Subramaniyan
நன்றி.