இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் கருத்தியல் ஏதெச்சேகாரப் போக்கு தமிழரசுக் கட்சியின் தோற்றத்திற்கு ஊற்று வாய்காலை ஏற்படுத்தியிரந்தது. ஆரம்பத்தில் இந்த ஏதேச்சேகாரத்தை எதிர்த்து உருவாக்கப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சி தனது தொடக்க காலத்தில் பன்முகத் தன்மையை ஏற்றும் பலரின் கருத்துகளை செவிமடுக்கும் செயற்பாட்டடைக் தன்னகத்தே கொண்டிருந்தாலும் அதுவும் கால ஓட்டத்தில் அதே ஏதேச்சேகாரத்தை கடைப்பிடிக்கும் கட்சியாக குறுகிய காலத்திற்குள் மாற்றிக் கொண்டது.
அதனை இன்ற வரை கடைப்பிடித்து
செயற்பட்டுவருகின்றது. இதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரந்துபட்ட
கட்சி இணைப்பை பலமாக்கி தேர்தலின் பின்பு பயணிக்க முடியாமல் போனதற்கு
காரணமாக அமைந்தது.
ஆனால் வெற்றி மமதையில் இருந்து தமிழ் காங்கிரஸ்
கட்சி தமிழரசுக் கட்சியின் உருவாக்கமும் அதற்கு கிடைத்த மக்கள் ஆதரவும்
தனக்கான ஆதரவுத் தளத்தையும் தேர்தல் தோல்விகளை சந்திக்க வாய்பை
ஏற்படுத்தியது. இது 40 வருடங்களுக்கு முந்திய அரசியல் நிலவரம்.
முதலில் வெற்றிப பாதையில் ஆரம்பித்த தமிழரசுக் கட்சியின் பாதை அதே ஏதேச்சேகாரப் போக்கினாலும் தேர்தல் வெற்றியினால் ஏற்பட்ட மமதையும் தொடர்ந்து வந்த காலங்களில் தேர்தல் தோல்விகளை சந்திக் வே;ணடிய நிலமைகளை எற்படுத்தியது.
இவ்விரு கட்சிகளுக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்விகளில் தம்மை மீட்டெடுக்க அப்போது தமிழ் மக்கள் சிறுபான்மையினர் என்ற வகையில் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் தமது உரிமையை வேண்டி நிற்கும் நிலையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிiயின் உருவாக்கத்திற்கான தேவையை ஏற்படுத்தியருந்தது.
இதன் மூலமே தமது தேர்தல் வெற்றிகளை மீண்டும் உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற வகையில் ‘தனி நாடு” என்ற கோசத்துடன் வட்டுக் கோட்டைத் மகாநாட்டை நடாத்தியது.
வடக்கு கிழக்கு மலையகம் என்று இங்க செயற்படும் முக்கிய மூன்று கட்சிகளின் தலமைகளும் இணைந்து உருவான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தனக்குள் இருக்கும் ஐக்கியம் என்ற சொல்லை இன்று வரை ஓரளவு கடைப்பிடித்துவரும் செயற்பாட்டாளராக பயணிக்க வைத்திருக்கின்றது.
பாராளுமன்றப் பாதையை மறுத்த ஆயுத இயக்கங்களின் எழுச்சிம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை பின் தள்ளிய நிலையில் கூட அண்ணன் அமிர் அவர்கள் ஆயதம் தாங்கிய இளைஞர்களின் செயற்பாட்டை மறுத்த ஏக போக தன்மையை தனக்குள் கொண்டிருக்டகவில்லை. ஒருவகையில் அவ்வாறு செயற்பட முடியாத நிலையிலும் இருந்தார் என்பதுவும் உண்மை.
ஆனாலும் இவர்களும் இவர்களுக்கு முன்பிருந்த தமிழ் காங்கிரஸ் தமிழரசுக் கட்சியினரும் பல் குழல் துப்பாக்கி போல் இடதுசாரிகளுக்கு எதிரானக ஒன்றாக செயற்பட்டனர். இதனை அந் நாட்களில் அவர.களின் மேடைப் பேச்சுகளிலும் சாதி மறுப்பு போராட்டங்கள் கோவில் பிரவேசம் போன்ற போராட்டங்களில் நன்கு காணக் கூடியதாக இருந்தன. இடதுசாரிகள் மத்தியில் இருந்த பன்முகத் தன்மையும் ஐக்கியப்பட்ட செயற்பாட்டிற்கு எதிரான ஏதேச்சேகாரக் கொள்கை செயற்பாடாகவே இதனைப் பார்க்க முடியும்.
இது ‘சங்காயாக மாறும் சங்கானை” என்ற பிரபல்ய பேச்சுகளில் நன்கு புலப்பட்டன. கூடவே யாழ் முற்ற வெளியில் நடைபெற்ற ஈழ மாணவர் பொது மன்றக் மேதினக் கூட்டத்திற்கு எதிராக யாழ் வீரசிங்க மண்டபத்தில் பேசிய ‘….தம்பிமார் சிலர் சிவப்பு புத்தகங்களை இறக்குமதி செய்து செயற்படுகின்றார்கள்…” என்ற வசைபாடலிலும் இவை அறியப்பட்டன. இவை அன்றைய காலகட்டத்தில் பிரபல்யமாக பேசப்பட்ட விடயங்கள்.
இந்த செயற்பாட்டைத்
தொடர்ந்த அமிர்தலிங்கத்திற்கு கிடைத்த பரிசுதான் புலிகளின் ஏக போக
சிந்தனையினால் வழங்கப்பட்ட தண்டனைதான் கொழும்பில் வைத்து படுகொலை
செய்யப்பட்ட சம்பவம் ஆகும். தான் வளர்த கடாய் தன் மீது பாய்ந்த விடயமாக
பார்கப்படுகின்றது.
இதன் இன்னொரு பக்கத்தில் ஈழவிடுதலை
அமைப்பபுகளிடையே ஐக்கிய முன்னணியின் பிதாமகன் பத்மநாபா என்றால் அவரை
எதிரியாக பார்த்தவர்கள் கூட மறுக்க முடியாது அவரின் இந்த செயற்பாட்டிற்கு
புலிகள் வழங்கிய தண்டனை கோடம்பாக்கத்தில் வைத்து செய்யப்பட்ட பத்மநாபா
உட்பட்ட 13 பேரின் கொலையாகும்.
2000ம் ஆண்டுகளில் புலிகளால் இழுத்து வரப்பட்டு உருவாகப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு பரந்து பட்ட பல்வேறு கட்சிகளை தமக்குள் கொண்டு உருவாகப்பட்ட ஐக்கிய முன்ணியாக சிலரால் பார்க்கப்பட்டாலும் அது அவ்வாறு இருக்கவில்லை என்பதே யதார்த்தம்.
பெயர் அளவில் கூட்டமைப்பு என்றாலும் அங்குள்ள பலதரப்பினரும் தங்கள் கருத்துகளை பரிமாறி பன்முகத் தன்மையுடன் செயற்படும் சூழல் அங்கு இருக்கவில்லை. புலிகளின் அரசியல் துறைப் பொறுபாளரின் ஒற்றைச் சொல் கட்டளையை எற்றுச் செயற்படும் நிலமையே அங்கு நிலவியது. இதற்கு மாறுபட்டு சரியான செயற்பாட்டை துணிவாக எடுக்க முற்பட்டவர் அன்றை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி ஐயா அவரகள்.
இதன் தொடர்ச்சியாகத்தான் சட்டரீதியாக தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்ணியை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இவர்களின் ஏவலாளிகளான புலிகளும் கைப்பற்ற முடியாத நிலையில் அதனை நிராகரித்து தள்ளி வைத்து தூசி தட்டி முன்னுக்கு கொண்டு வரப்பட்டது தமிழரசுக் கட்சியும் அதன் வீடு சின்னமும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரை முன்நிறுத்தி மீண்டும் ஏகபோக தமிழரசுக் கட்சி புலிகளின் கட்டளைப்படி செயற்பட்டது. புலிகளின் இல்லாத சூழல் 2009 மே மாதத்திற்கு பின்பு ஏற்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் செல்வன் இல்லாத ஏகபோக தலமையை தொடர முற்பட்டது. இதற்கான தலமையை தமிழரசுக் கட்சி கையில் எடுத்துக் கொண்டது. இதுவே அதன் உடைவு ஆரம்பமானதிற்கான முக்கியமாக காரணியாக அமைந்தது.
ஆனால் பரபரப்பு இல்லாமல் மறுபடியும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தனது பரந்து பட்ட ஐக்கிய முன்னணி என்ற பன்முகத் தன்மையை கொண்டு பயணித்தது. ஆனால் இவர்களை துரோகிகள் ஆக்கி மக்களிடம் இருந்து தள்ளி வைக்கும் செயற்பாட்டை புலிகளும் இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ந்தது ஆனால் பன்முகத் தன்மையை ஏற்கவேண்டும் என்ற செயற்பாட்டை கொண்டிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சிறப்பாக ஆனந்த சங்கரியின் தலமையில் பணயம் தொடர்கின்றது இன்றவரை சில விமர்சனங்கள் இருந்தாலும்.
இங்க தமிழர் அரசியல் வரலாற்றை பார்த்தால் பன்முகத் தன்மையை கடைபிடிக்க முயன்றவர்கள் துரோகிகளாகவும் ஏகபோகத்தை கடைப்பிடிப்பவர்கள் விடுதலை வீரர்களாக மக்கள் மீட்போராகவும் தொடரந்தும் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அது இன்று தமிழ் தேசியக் கூட்டடைபின் வெடிப்பில் உருவான விக்னேஸ்வரன் கட்சி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சி, சம்மந்தர் தலமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்றிலும் அவதானிக்க முடியும்.
தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் இந்த பன்முகப்படுதப்பட்ட தன்மையிலான சிந்தனைப் போக்கே இணைந்த வட்கு கிழக்கு மாகாணசபையில் நேரடியாக அவர்கள் பங்களித்து செயற்படாவிட்டாலும் இதனை எதிர்காமல் ஒருவகையில் மௌன அங்கீகாரத்தை வழங்கினர்.
கூடவே செல்லன் கந்தையன் காலத்து யாழ் மாநகரசபை தமிழர் விடுதலைக் கூட்ணியின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் பன் முகத்தன்மையை எற்றுக்கொண்ட செயற்பாடே பத்மநாபா ஈபிஆர்எல்எவ் சுபத்திரன் போன்றவர்களின் பலமான பின்புலச் செயற்பாடுகளை அனுமதித்தது.
அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யாழ் நூலத்தின் மீளுருவாக்கம் தொடர்ந்த அதன் செயற்பாடும் அமைவதற்கு ஏதுவாக அமைந்தது. அந்த யாழ் மாநகர சபை ஆட்சியின் தலமையை தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தன்னகத்தே கொண்டிருந்தாலும் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் உம் புளொட்டும் இன்று சில சுயேட்சை உறுப்பினர்களும் இணைந்த பன்முகத் தன்மையுடைய செயற்பாடுதான் அந்த காலத்து மாநகர சபையின் வெற்றிக்கான காரணியாக அமைந்தன. இதற்கான முழு வரலாற்றையும் இன்றும் எம்முடன் வாழும் ஆனந்தசங்கரி ஐயா தெரிந்தே வைத்திருக்கின்றார்.
இதன் தொடர்ச்சியாகதான் இன்று தமிழ் பிரதேசம் எங்கும் ஒரு பரந்துபட்ட ஒரு ஐக்கிய செயற்பாட்டை உருவாக்குவதற்கான பொறிமுறையை அவர்கள் கண்டிருக்கின்றார்கள். அது இந்த பாராளுமன்றத் தேர்தலில் வெளிப்பட்டிருக்கின்றது. அது வடக்கு கிழக்கு என்று எங்கும் வியாபித்திருக்கின்றது.
மாறாக தமிழ் தேசியத் கூட்டமைபின் ஏகபோக செயற்பாட்டின் உடைவு அதாவது பன்முகத் தன்மைய மறத்த செயற்பாட்டினால் ஏற்பட்ட முரண்பாட்டினால் உருவான விகனேஸ்வரன் அணியாக இருக்கட்டு கஜேந்திரன பொன்னம்பலத்தின் அணியாக இருக்கட்டும் இவர்களும் மீண்டும் ஓரு ஏகபோக தலமையை சிந்தனையை வளர்க்கும் செயற்பாட்டையையே தமக்குள் கொணடிருக்கின்றனர்.
இதனை அவர்களின் தேர்தல் பரப்புரையில் ஏனையவர்களை முழுமையாக நிராகரிக்கும் கருத்து வெளிப்பாட்டையும் தமக்குள் ‘தேசியம்” என்று கூறினாலும் குறைந்த பட்சம் ஐக்கியப்பட முடியாமல் போனதற்கு காரணமாக அமைகின்றது.
மறு புறத்தில் பிரேமதாசவுடன் இணக்க அரசியல் ஆரம்பித்து இன்றவரை அவ்வாறு செயற்படுபவர்களும் அதே ஏகபோகத்தை தமக்குள்ளும் வெளியேயும் கடந்த 40 வருடங்களாக பயணிப்பதை அவதானிக்க முடியும். சிறப்பாக தமிழர் உரிமை சம்மந்தமாக இலங்கை அரசுடனான பேச்சு வார்த்தைகளில் முடிந்தளவில் பல கட்சிகளையும் இணைத்து பன்முகத்தன்மையுடன் செயற்படாமல் ‘மறிப்பு’ கட்டும் செயற்பாட்யே கொண்டிருப்பதனாலேயே இதவரை இணக்க அரசியல் மூலமும் எந்த பெறுமானத்தையும் தமிழர் உரிமை சார்ந்து பெறமுடியாமல் போய்விட்டது. இதில் அவர்களின் தனித் தவிலை அவதானிக்க முடியும்.
இங்கு தேசியம் பேசி எதிர்பு அரசியல் செய்பவர்களும், தமிழ் நாட்டின் திராவிட கட்சிகளின் கோசமான ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி” என்று இணக்க அரசியல் செய்பவர்களும் பன்முகத் தன்மையை தன்னகத்தே உடைய கட்சிகள் பலம் பெறுவதற்கு எதிராக பல் குழல் துப்பாகியாக செயற்பட்டு தமது ஏகபோக தலமையை சிந்தனையை செயற்பாட்டை செயற்படுத்துவதை அவதானிக்க முடியும்.
இம்முறை தேர்தலில் ஒரு மாற்றுத் தலமை புதிய தெரிவு என்பது பன்முகப்படுத்தப்பட்ட ஒரு தலமையை உருவாக்கம் அதன்பால் உள்ள சிந்தனை செயற்பாடுகள் செயற்பாட்டாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் இதற்கானவர்கள் யார் என்தை வரலாற்றை ஆழமாக பார்த்து முடிவுகளை எடுத்து வாக்களிக்க வேண்டும்.
மாறாக தொடர்ந்தும் ஏக போக சிந்தனையை அங்கீகரிக்கும் பொதுப் போக்கு முள்ளிவாய்காலகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தி மக்களை மேலும் பலவீனமான நிலைமைக்கே கொண்டு செல்லும்.
இதற்கு அமிர்தலிங்கத்தின் கூட்டணி காலத்து சிந்தனையும் பத்மநாபாவின் ஐக்கிய முன்னணி சிந்தனையை கொண்டு செயற்படும் தமிழர் மத்தியில் சமூக ஜனநாயக செயற்பாட்டை நிலை நிறுத்த செயற்படுபவர்களை மக்கள் ஆதரித்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.