இது மத்திய மைய்ய அரசிலிருந்து மாகாண மட்டத்திலான அரசிற்கான அதிகாரப் பரவலாக்கம் என்ற வகையில் அமைந்த சட்ட மூலமாகும்
இதனை ஒரு ஆரம்ப புள்ளியாக கொண்டு நாம் முன்னோக்கி நகரவேண்டும் என்ற தீர்க்கதரிசனமான முடிவை எடுத்து செயற்பட்ட பத்மநாபாவும், அவர்களின் தோழர்களும் 1990 ஜுன் மாதம் 19ம் நாள் தமிழ் நாட்டின் கோடம்பாக்கத்தில் வைத்து கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை செய்தவரகள் தமிழீழ விடுதலைப் புலிகள்.
தமிழ் மக்களுக்கான சட்ட மூல தீர்வை ஜனநாயக வழிமுறையில் செயற்படுத்த முற்பட்ட போது அவர்களுக்கு கிடைத்த பரிசு இது. இந் நாளை அவ் அமைப்பினர் இன்று வரை 30 வது தடவையாக போராளிகளை நினைவு கூரும் தினமாக தியாகிகள் தினம் என்று செயற்படுத்தி வருகின்றனர்.
ஈழவிடுதலைப் போராட்டத்திற்காகவும் மனித குல விடுதலைக்காகவும் தம்மை அர்பணித்த அனைத்து போராளிகள,; பொதுமக்களையும் நினைவு கூர்ந்து இந் நிகழ்வு நடைபெறுகின்றது. இது உலகம் பூராகவும் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றது. இவர்களின் இத்தினம் சம்மந்தமான சுரரொட்டிகள் வெளியீடுகளில் சகல போராளிகளையும் மதித்து வணக்கம் செலுத்தும் பன்முகத் தன்மையை அவதானிக்க முடியும்.
மக்கள் இல்லாத மண்ணை நாம் நேசிக்கவில்லை மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம். நாம் ஆயுதங்களில் மோகம் கொண்ட மன நோயளிகள் அல்ல, மாறாக எதிரிகளால் நாம் ஆயுதம் ஏந்த நிர்பந்திக்கப்பட்டோம். ஜனநாயகத்தை மீட்டெடுக்க எமது உயிரையும் தியாகம் செய்யத் தயார். நாம் வாழ்வதற்காகவே போராடுகின்றோம். ஐக்கியமே எமக்கு முக்கியம்