
தோழர் சுதன் EPRLF இன் ஆரம்பகால பிரச்சார ,இராணுவ நடவடிக்கைகளில் பிதான பாத்திரம் வகித்தவர். இரானுவத்தினரின் சுற்றிவளைப்பு தேடுதல்களுக்கு மத்தியில்
தோழர் றொபேட்டுடன் இனைந்து வடகிழக்கில் பிரதான வேலைத்திட்டங்களில் ஆரவாரமின்றியும் உறுதுனையாகவும் கருமமாற்றியவர். அவரிடம் எத்தகைய சந்தர்ப்பத்திலும் பதட்டத்தையோ அச்சத்தையோ காணமுடியாது . இவர் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் தோழர் றொபேட் தோழர், ரமேஸ், தோழர் மோகன், தோழர் குமார்(வோல்ட்டன்) போன்றவர்களுடன் இனைந்து பணியாற்றியுள்ளார் .தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்துவந்த அவர் நீரிழிவு நோயின் பாதிப்பால் 25.07.2013 அன்று எம்மைவிட்டுப் பிரிந்தார். அவருக்கு எமது அஞ்சலிகள்.