(வேதநாயகம் தபேந்திரன்)
1977 பொதுத் தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 5/6 பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைத்தது. அப்போது கொழும்பு அரசின் உயர் பதவிகள் பலவற்றைத் தமிழர்களே வகித்தனர். தமிழர்கள் AR ( Administration Regulations – நிர்வாக ஒழுங்கு முறைகள் ), FR ( Financial Regulations – நிதிப் பிரமாணங்கள் ) முறைகளை அச்சொட்டாகக் கடைப்பிடித்து அரசாங்கத்தை வினைத் திறமை உள்ளதாக நடத்தினார்கள்.