மே ஏழாம்தேதி ஸ்டாலின்
முதல்வராகப் பொறுப்பெடுத்தார்.
இன்றுடன் – 23 நாள்.
இருபத்தி மூணே நாள்.
என்ன செய்தார் ஸ்டாலின்?
கொஞ்சம் பார்ப்போம்.
பதவியேற்கும் முன்னமே
மே 4.
‘கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் – மழை – வெயில் – என்று பாராமல், உயிரைப் பணயம் வைத்து செய்தித்தாள்கள், காட்சி – ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்ற ஊடகத் துறையினர் அனைவருமே தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர். முன்களப் பணியாளர்களுக்குரிய உரிமைகள் – சலுகைகள் அவர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்படும்!’ என்று அறிவிப்பு!
மே 5.
மருத்துவ அவசரநிலை அளவுக்கு கொரோனா தொற்றின் தீவிரம் இருப்பதால், உடனடியாகக் கட்டளை மையம் (War Room) ஒன்றை திறந்திட வேண்டும் என தலைமைச் செயலாளரிடம் வேண்டுகோள்!
மே 7.
முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் –
கொரோனா நிவாரணத்தொகையாக – ரேஷன் அரிசி அட்டைதார்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்கப்படும். அதன் முதல் கட்டமாக இம்மாதமே 2000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் உள்ள நகரப் பேருந்துகளில், அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பு!
ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைக்கப்படும்! இது மே 16 முதல் அமலுக்கு வரும் என்ற அறிவிப்பு’
அரசு மருத்துவமனைகளின் இட நெருக்கடியால், தனியார் மருத்துமனைகளிலும் எளியமக்கள் சிகிச்சை பெற எதுவாக, அந்த மருத்துவ கட்டணத்தினையும் தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டம் மூலமாக அரசே ஏற்றுக்கொள்ளும் என்கிற ஆணை!
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்துக்கு புதிய துறை, அதை நிறைவேற்ற தனியாக ஓர் இந்திய ஆட்சிப்பணி அலுவலர்!
- என்று ஐந்து கோப்புகளில் கையெழுத்து.
மே 8.
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கை எடுக்க
தனி அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் நியமனம் !
மே 9.
முதல் அமைச்சரவைக் கூட்டம்!
கொரோனா தொற்று அதிகம் உள்ள 14 மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி- பணிகளை முழுமையாக மேற்கொள்ள மாவட்ட வாரி பொறுப்பாளர்களாக தனித் தனி அமைச்சர்கள் நியமன அறிவிப்பு!
மே 10.
2.07 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.4000 வழங்கப்படும் என அளித்திருந்த தேர்தல் வாக்குறுதியின்படி – முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்படும் நிகழ்வு தொடக்கம்.
மே 12.
மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள 13 லட்சம் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை என்பதால், தேவையான தடுப்பூசிகளை உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி மூலம் அரசே இறக்குமதி செய்து குறுகிய காலத்திற்குள் அனைவருக்கும் செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு !
கொரோனா தடுப்பு சேவையின்போது உயிரிழந்த 43 மருத்துவர்கள் குடும்பங்களுக்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு! மருத்துவர் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைப் பணியாளர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிப்பு!
மே 15.
தமிழகத்தில் படுக்கைகள் – மருந்து கையிருப்பு – ஆக்சிஜன் ஆகிய அனைத்தையும் கண்காணித்து ஒழுங்கு செய்யும் கொரோனா கட்டளை மையம் திறப்பு!
மே 16.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு வழிமுறைகள் – ஆலோசனைகளை வழங்கிட அனைத்து சட்டமன்றக் கட்சிகளையும் உள்ளடக்கிய ஆலோசனைக் குழு அமைப்பு!
மே 18.
தமிழகம் தன்னிறைவு அடையும் நோக்குடன், ஆக்சிஜன் , ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருந்துகள், மருத்துவக் கருவிகள் மற்றும் தடுப்பூசிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ,தனியார் நிறுவனங்களுடன் இணைந்து உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்! தயாராக உள்ள நிறுவனங்களிடமிருந்து TIDCO நிறுவனம் மூலம் விருப்பக் கருத்துகளைப் பெற்று ஆலைகளை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படுமென்று அறிவிப்பு!
மே 19.
மக்கள் நெரிசலைத் தடுக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அரசே ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் திட்டத்தின்கீழ் பதிவு செய்திருந்த
343 தனியார் மருத்துவமனைகளில் முதல் கட்டமாக 25 மருத்துவமனைகளுக்கு 960 மருந்துக் குப்பிகள் வழங்கல் !
மே 20.
சட்டம் ஒழுங்கு- போக்குவரத்து காவல்துறையினர் 84 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சட்டம் ஒழுங்கு- போக்குவரத்து காவல்துறையினர் 84 பேரில் 13 பேரின் வாரிசுகளுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது போன்று, மேலும் 36 குடும்பங்களுக்கு வழங்கிட உத்தரவு!
மே 21.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த இடைக்கால அறிக்கை பெறப்பட்ட ஒருவார காலத்திலேயே வழக்குகளைத் திரும்பப் பெறவும் – கைது செய்யப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை, தடையில்லாச் சான்று அளித்திடவும் உத்தரவு!
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகள் மற்றும் படுகாயமுற்றவர்கள் 17 பேருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி நியமன ஆணை !
மே 22.
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கோவிட் முகாம் சென்னையில் உருவாக்கம்.
மே 23.
RTPCR கிட்கள் வாங்கிட ரூ. 50 கோடி ஒதுக்கீடு !
சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 130 படுக்கைகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையம் திறப்பு!
மே 25.
செங்கல்பட்டு HLLbiotech நிறுவனத்தின் ஆய்வகத்தை நேரில் ஆய்வு செய்து உடனடியாகத் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கிடும் முயற்சிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவு.
அரசே ஏற்று நடத்துமென்று அறிவிப்பு!
மே 26.
அரசு அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்கள் செய்தியாளர்கள்-புகைப்படக்காரர்கள்-ஒளிப்பதிவாளர்கள் தொற்றால் உயிரிழக்க நேர்ந்தால் அவர்தம் வாரிசுதாரருக்கு ரூ.10 இலட்சம் வழங்கப்படும் என்று அரசு அறிவிப்பு! அவர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகையை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க ஆணை!
சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1400 ஆக்சிஜன் உருளைகள், மருத்துவக் கருவிகள் தேவைப்படும் மாவட்டங்களுக்கு பகிர்ந்து அனுப்பப்பட்டன.
மே 27
முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்கான மறு பணி வழங்குவதற்கான கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடைபெறும் என்று அறிவிப்பு!
மே 28.
மருந்துகள் வாங்குவதற்கும், ஆக்சிஜன் தேவைகளுக்காகவும் ஏற்கனவே ரூ.100 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் ஆக்சிஜன் உருளைகள்- செறிவூட்டிகள், மருத்துவக் கருவிகள் வாங்குவதற்காக ரூ 41.40 கோடி ஒதுக்கீடு அறிவிப்பு.
Vaccine For All என்ற இலக்கில் இந்த ஒரு நாளில் மட்டும் 2.58 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
மே 29.
‘கொரோனா தாக்குதலில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் வைப்பீடு! அவர்களது 15 வயது நிறைவில் வட்டியுடன் வழங்கப்படும்.
அவர்களது பட்டப்படிப்பு வரை கல்விக்கட்டணம் – விடுதிக்கட்டணம் அனைத்தையும் அரசே ஏற்கும்! இவர்களுக்கு அரசு உதவித்திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும்!
தாய் அல்லது தந்தை ஒருவரை இழந்த குழந்தையின் உடனிருக்கும் தாய் அல்லது தந்தைக்கு உடனடி நிவாரணத்தொகை 3 லட்சம் வழங்கப்படும்.
உறவினர், பாதுகாவலருடன் ஆதரவில் வாழும் குழந்தைகளுக்கு மாதம் 3ஆயிரம் ரூபாய் உதவித்தொகை – அவர்களது 18 வயதுவரை வழங்கப்படும் ‘ என்ற அறிவிப்பு!
மே 30.
திருப்பூரில் கோவிட் சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதிகள். தற்காலிகப் பணியாளர் நியமனத்திற்கான ஆணைகள் வழங்கல்.
கார் ஆம்புலன்ஸ் சேவை வசதி தொடக்கம்.
மே 31
அனைத்து கோயில் அர்ச்சகர்கள், பூசாரிகள், கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000.அவர்களுக்கு 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருள்கள் வழங்கும் அறிவிப்பு!
இன்னும் …
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் !
அரசு மருத்துவமனைகளின் சேவையே மேம்படுத்தும் வகையில் இரண்டாயிரம் மருத்துவர்கள், 6000 செவிலியர்கள், 2000 தொழில் நுட்ப பணியாளர்களை நியமிக்கும் உத்தரவு…
ஏப்ரல் மே ஜூன் மூன்று மாதங்களுக்கு, மருத்துவர்களுக்கு 30,000 ரூபாயும், செவிலியர்களுக்கு 20,000 ரூபாயும், இதர பணியாளருக்கு 15,000 ரூபாயும், பட்ட மேற்படிப்பு மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20,000 ரூபாயும் ஊக்கத் தொகை !
இன்னும் இன்னும் ….
சென்னை நந்தம்பாக்கம் வணிக மையத்தில் 900 படுக்கைகளுடனான கொரோனா சிகிச்சை மையம்,
டான் பாஸ்கோ பள்ளியில் தடுப்பூசி மையம்,
கரூர் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்துடன் இணைந்து அமைத்துள்ள 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் ,
திருச்சியில் கூடுதலாக 400 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம்.
மதுரை, தோப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கைகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையம் ,
திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி முகாம் திறப்பு.
சேலத்தில் அனைத்து வசதிகளுடன் 500 படுக்கைகள் கொண்ட புதிய மையம் திறப்பு. அதில் மேலும் 500 படுக்கைகள் அமைக்கும் முடிவு .
கோயம்புத்தூரில் உள்ள கதிரி மில்ஸ் வளாகத்தில் 306 படுக்கைளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் ,
சென்னை ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப் பள்ளியில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 130 படுக்கைகள் கொண்ட சிறப்புச் சிகிச்சை மையம் .
ஸ்டான்லி மருத்துவமனையின் உதவியுடன் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையம் .
சென்னை மீனம்பாக்கத்தில் முதல் கொரோனா சிகிச்சை சிறப்பு மையத்தைத் தொடர்ந்து, 70 படுக்கைகளுடன் கூடிய இரண்டாவது மையம் திறப்பு…..
இது போக….
புதிய கல்விக்கொள்கை, நீட், ஜிஎஸ்டி. போன்ற விவகாரங்களில் தமிழக அரசின் தனித்த
கொள்கை முடிவுகள், நிலைப்பாடுகள்…..
COME ON STALIN
COME ON STALIN