Road to Nandikadal

என் நட்பு வட்டத்தில் இருக்கும் புலி ஆதரவாளர்கள் எல்லாம் என்னை ஒரு துரோகி என்று சித்தரித்துக்கொண்டு திரிவார்கள். அப்படியானவர்களுக்கான ஒரு சிறிய பதிவு. கமால் குணரட்ண தனது புத்தகத்தில் பிரபாகரனை புகழ்ந்துள்ளார் என்று புலி ஆதரவாளர்கள் அனைவரும் புகழந்து வருகிறார்கள் சிங்களவனே புகழ்ந்துள்ளான் என்று செய்திகளும் பதிவுகளும் கணக்கற்று கிடக்கிறது.

அந்த புத்தகம் அது மட்டும் சொல்லவில்லை. அது தெளிவாக தனது மக்களையே கொன்றது, உலகிலையே மோசமானதாக கருதப்படும் தற்கொலை படை தாக்குதல், கடுமையான தண்டனைகள் என அனைத்தையும் விபரிக்கின்றது. ஒருவரின் சுயசரிதை என்ற அந்தஸ்த்தில் இருக்கவேண்டும் என்பதற்காகவே பிரபாகரன் குடித்து கும்மாளமடித்தார் என்று பிரச்சாரம் செய்தவர்களே இப்படி ஒரு கூற்றையும் கூறுகிறார்கள் அதுவும் படம் இல்லை என்ற தொனியுடன் நிறுத்துவிடுகிறார்கள்..

இந்த புத்தகத்தின் ஊடாக புலிகளின் மேல் மூன்றாம் தரப்பினர் வைத்துள்ள நல்ல எண்ணங்களை அழகாக உடைக்கிறார்கள். புலி ஆதரவாளர்களுக்கு அதை கூட புரிந்துகொள்ள முடியாமல் எதிரியே பாராட்டிட்டான் என்று மகிழ்ந்துகொள்கிறார்கள்.

அந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது அதனை படிக்கின்ற ஒருவன் எண்ணம் எப்படியாக இருக்கும் அந்த புத்தகத்தால் புலிக்கோ அல்லது பிரபாகரனுக்கோ நன்மதிப்பை பெற்றுத்தருமா என்றெல்லாம் 99 விகித புலி ஆதரவாளர்கள் சிந்திக்கவே இல்லை. வெறும் உணர்வால் கட்டுண்டு பிரபாகரனை புகழ்ந்ததை பெரிதா பேசிக்கொண்டு இருக்கிறார்கள்

இவர்களால் என்றுமே எதையும் உருப்படியாக ஆராயமுடியாது. உணர்வாளர்களை மட்டுமே புலிவாதம் உருவாக்கிக்கொண்டு இருந்தது, இருக்கிறது, இருக்கப்போகிறது இதனால் நன்மை என்று எதுவுமே வந்துவிடாது பிரதிகூலங்கள் மட்டுமே நம்மை சேரும்.

இப்படியான ஒரு கொள்கை நம் மண்ணில் என்று அழிகிறதோ அல்லது தளர்ந்து போகிறதோ அன்று தான் ஒவ்வொருவனும் சிந்திப்பான் அன்று தான் இந்த சமூகம் முன் நோக்கி நகர ஆரம்பிக்கும்..

இதனாலையே புலி கொள்கையையே நான் ஏற்பதில்லை, இதனை எப்படி எல்லாமோ பலருக்கு சொல்லு பார்த்திருக்கிறேன் யாருமே என்ன சொல்கிறேன் என்று புரிந்துகொள்ளவில்லை இந்த சம்பவம் புரியவைப்பதற்கான நல்லதொரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது என்றே கருதுகிறேன்..

இந்த பதிவை படிக்கும் புலிவாத ஆதரவாளரா நீங்கள் ?? கமால் குணரட்ண கூற்றை வைத்து நீங்கள் பெருமை பட்டு பதிவு போட்டீர்களா ?கண்டிப்பாக ஓம் என்று தான் சொல்வீர்கள். நீங்கள் இந்த பதிவை படிக்கும் முதல் வரை அந்த புத்தகம் ஊடாக புலிவாதம் மீதி அந்த புத்தகம் எப்படியான ஒரு தாக்கத்தை ஏட்படுத்தும், நான் ஏன் கமால் குணரட்ண சொன்னதுக்கு பெருமை படவேண்டும் அல்லது பதிவிடவேண்டும் என்று சிந்தித்தீர்களா?? கண்டிப்பாக இல்லை.. ஏன் அதை சிந்திக்க மறந்தீர்கள் ?? ஒரு புத்தகம் எத்தகைய தாக்கத்தை ஏட்படுத்தும் என்பதை கூட உங்களால் சிந்திக்க முடியாமல் போனதற்கான காரணம் என்ன ?? எது என் சிந்தனையை தடுத்தது என சிந்தித்து பாருங்கள். நான் சொல்வது விளங்கினாலும் விளங்கலாம்.

(Vinoth)