யார் இந்த “Patient 31”? தென் கொரியா சீனாவை அடுத்து இவ் வைரஸ் வேகமாகப் பரவிய நாடாகும். ஆனால் அதற்கு ஒரு காரணம் உண்டு. அந்தக் காரணம் தான் இந்த “Patient 31” கதை.
பெப்ரவரி 18 வரை நாளைக்கு ஓர் இரண்டு நோயாளிகளை இனங்கண்டு வந்த தென் கொரியாவின் நோயாளிகளின் எண்ணிக்கை 30ஆக காணப்பட்டது. Daeguவில் 61 வயதுடைய பெண் 31வது நபராக Corona positive ஆகின்றார்.
கதை அங்கு தான் ஆரம்பிக்கின்றது. பெப்ரவரி 28 அன்று 18ஆக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை 1000ஐ தாண்டுகிறது. 31வது நோயாளியின் வரலாற்றை எடுத்துப் பார்க்கும் போது தான் உண்மை வெளிவருகிறது.
இந்தப் பெண் 6ம் திகதி வாகன விபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார். அதன் பின் 7ம் திகதி வைத்தியசாலையில் இருந்து discharge ஆகியதன் பின் அவருக்கு மிகவும் பிடித்த Shincheonji தேவாலயத்திற்கு சென்றுள்ளார். காய்ச்சலுடன் தலைவலியும் இவருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதனை அவ்வளவு கவனிக்கவில்லை. காய்ச்சல் கூடியதும் வைத்தியர்கள் அவரை ஓய்வு பெறுமாறு கூறியுள்ளனர். ஆனால் அதனையும் கேற்கவில்லை. பெப்ரவரி 15 Corona Test ஐ மேற்கொள்ளுமாறு கூறினாலும் அதனையும் பொருட்படுத்தவில்லை. சாதாரண காய்ச்சல் என எண்ணி அன்று அவரது நண்பருடன் ஒரு ஹோட்டலில் மதிய உணவை உண்டுவிட்டு Shincheonji தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்காக காய்ச்சலுடனே சென்றுள்ளார். ஏனென்றால் அந்த தேவாலயம் கிறிஸ்துவ தேவாலயமாக இருந்தாலும் வேறொரு பிரிவைச் சேர்ந்ததாகும். அந்த தேவாலயத்தின் நிறுவனரின் படி “நோய் என்பது பிரார்த்தனையில் கலந்துகொள்ளாது இருப்பதற்கு காரணமல்ல” என்பதாகும். அன்று 15ம் திகதி Corona Testஐ நிராகரிக்கப்பதற்கும் அந்த தேவாலயத்தின் விதிமுறை தான் காரணமாக இருக்க வேண்டும்.
இவர் கடவுள் நம்பிக்கை மிகுந்த பெண். எனவே 16ம் திகதியும் சென்றுள்ளார். அன்று அந்த தேவாலயத்திற்கு சுமார் 9000 பேர் வருகை தந்திருந்தனர். பிரார்த்தனை இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்றுள்ளது. பிரார்த்தனை முடிந்தவுடன் இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதும் வழக்கமாக இருந்தது.
பெப்ரவரி 17ம் திகதி இவருக்கு காய்ச்சல் அதிகரித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். 18ம் திகதி Corona என கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின் ஒவ்வொரு நாளும் நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரித்துக்கொண்டே சென்றது. அந்தப் பிரார்த்தனையில் கலந்துகொண்ட 1200 பேருக்கு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டது. அந்த தேவாலயத்திற்கு வந்த எதிர்ப்பினால் தேவாலயம் மூடப்பட்டது. தேவாலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் பெயர் விபரங்களை எடுத்து வெவ்வேறாக Corona Testஐ மேற்கொண்ட போது Patient 31 மூலமாக தொற்றப்பட்ட நோயாளிகள் நாளுக்கு நாள் கண்டறியப் பட்டனர்.
இந்த சம்பவம் கவனக்குறைவு மற்றும் பிடிவாதத்திற்கு எடுத்துக்காட்டாகும். இலங்கை நாட்டில் இதுபோன்ற மனிதர்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர். மனதிற்கு நிவாரணம் என்னவென்றால் இன்னும் இலங்கையில் அறியக் கிடைப்பது கந்தகாடு தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து சில நோயாளிகளும் வெளியே இனங்காணப்பட்ட நோயாளிகளின் மூலம் பரவியதாக கூறப்படும் மூன்று பேர் போன்ற குறைவான எண்ணிக்கை ஆக இருப்பதாகும்.
ஆனால் இத்தாலியில் இருந்து வந்து தனிமைப்படுத்தப் படாமல் பொய்யான தகவல்களை வழங்கி ஒளிந்திருக்கும் ஒருவராவது Patient 31 போன்றவராக இருந்தால் இலங்கை மிகவும் பெரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடும். அவ்வாறு நடைபெறக் கூடாது என்று பிரார்த்திப்பதுடன் இன்னொறு விடயத்தையும் கூறுகின்றேன்.
பாடசாலை முன்கூட்டியே விடுமுறை வழங்கியது, 16ம் திகதி விடுமுறை வழங்கியதெல்லாம் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு அல்ல. எமது தனிப்பட்ட கடமைகளை நிறைவேற்ற அவசியமான காலம் இதுவாகும். எமது கவனக் குறைவின் காரணமாக Patient 31 போன்ற ஒருவர் இருக்கும் இடத்தில் ஒன்று கூடினால் அது இலங்கை நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும். Patient 31 கதையைக் கூறியது யாரையும் பயமுறுத்துவதற்கு அல்ல. மாறாக இதிலுள்ள ஆபத்தை எடுத்துக்காட்டுவத்ற்காகும். ஏனென்றால் அவ்வாறு நோய் பரவ ஆரம்பித்தால் பெயர் விபரங்களை பெற்றுக்கொள்ள கூட வழியிருக்காது.
அதனால் இலங்கையர்கள் என்ற ரீதியில் நோய் பரவுவதை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி :-Dr.குணாளன்