அகிம்சாவதியும் ஈழத்துக் காந்தியும் என்றழைக்கப்படும் திலீபன்……?

 

உரும்பிராய் இந்துக் கல்லூரி பின்னால் மேற்கே சட்டத்தரணி தியாகலிங்கத்தின் வீடு உள்ளது. தியாகலிங்கம் குடும்பத்தினர் இங்கிலாந்தில் வசிக்கின்றனர். ஆனால் அவர்களின் வீட்டில் மலையகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் நீண்ட காலமாக வசித்து வந்தார். அவருடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அந்த வளவிற்குள்தான் குடியிருந்தனர்.

வீடு வளவைப் பராமரிப்பது, அங்குள்ள முந்திரிகைத் தோட்டம் எல்லாவற்றையும் கோவிந்தசாமியே கவனித்து வந்தார். மிகவும் ஆடம்பரமான வீடு. தாமரைக் குளம் கூட அந்த வளவிற்குள் உண்டு. எல்லா வகைப் பழ மரங்களும் அந்த வளவிற்குள் உண்டு.அது கோவிந்தசாமியின் கடின உழைப்பு எனக்குத் தெரிந்தவரை கோவிந்தசாமிதான் அந்த வீட்டில் நீண்டகாலம் குடியிருந்தார். தியாகலிங்கம் குடும்பத்தினருக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராக கோவிந்தசாமி இருந்தார்.

புலிகளின் கொள்ளிக் கண்ணுக்கு அந்த வீடு பட்டுவிட்டது. கோவிந்தசாமி குடும்பத்தை வெளியேற்றிவிட்டு அந்த வீட்டைப் புலிகள் பலாத்காரமாகக் கையகப் படுத்திக் கொண்டனர்.
புலிகளால் வெளியேற்றப்பட்ட அந்தக் குடும்பம் எங்கே போகும். அவர்கள் கூலித் தொழில் செய்பவர்கள். இந்திய வம்சாவளியினருக்கு வேறு யாரும் காணி கொடுக்க மாட்டார்கள்.

வெறுப்புற்ற கோவிந்தசாமி இராணுவத்துக்குத் தகவல் கொடுத்துவிட்டார். அவருக்கு சிங்களம் நன்றகத் தெரியும். விளைவு படையினர் அந்த வீட்டுக்கு விமானம் மூலம் குண்டுகளை வீசி விட்டனர். கோவிந்தசாமியின் நிலைமையில் அவர் ஆத்திரமடைந்ததற்குக் காரணம் உண்டு. நீண்ட காலமாக அந்த வீட்டில் வாழ்ந்த குடுபத்தை வெளியேற்றியது புலிகளின் தவறு.
கோவிந்தசாமிதான் இராணூவத்துக்குத் தகவல் கொடுத்தார் என்பது திலீபனுக்குத் தெரிந்துவிட்டது. கோவிந்தசாமிக்கு உரும்பிரரயைச் சேர்ந்த மனோன்மணி என்ற பெண்ணுக்கும் நட்பு இருந்தது. மனோன்மணியும் கோவிந்தசாமிக்கு உதவி புரிந்தார். என்ற சந்தேகத்தில் கோவிந்தசாமியையும், மனோன்மணியையும் உரும்பிராய்ச் சந்தியில் மின்கம்பத்தில் கட்டி மரண தண்டனை வழங்கப்பட்டது.மனோன்மணிய் சுடும் போது அவாவின் மகன் மணிவண்ணனும் எங்களுடன் எதுவும் செய்யமுடியாது பார்த்துக்கொண்டு நின்று விட்டு சுடமுன் சென்று விட்டார் சிவகுமாரனின் சிலைக்கு முன் தான் இது நடந்தது.

கோவிந்த சாமியைச் சுட்டுக் கொன்றவர் அகிம்சாவதியும் ஈழத்துக் காந்தியும் என்றழைக்கப்படும் திலீபன். மிகவும் கொலை வெறியோடு கோவிந்தசாமியைச் சுட்டுக் கொன்றார். மனோன்மணியைச் சுட்டுக்கொன்றது ஒரு பெண் புலி. அந்தப் மனோன்மணியின் பிள்ளைகள் இப்போது கனடாவில் இருக்கிறார்கள்.
இந்தக் கொலைக் காட்சியைப் பலர் நேரில் பார்த்திருக்கிறார்கள். பலாலி வீதியால் வந்த வாகனங்கள் எல்லாம் உரும்பிராய்ச் சந்தியில் நிறுத்தப்பட்டு பல மக்கள் முன்னிலையில் இந்தக் கொலை அரங்கேற்றப்பட்டது.

கோவிந்தசாமி புலிகளுக்குத் துரோகியாக மாறக் காரணம் புலிகளே. ஒரு வீட்டில் நீண்டகாலம் வசித்த இருவரை அவர் குடும்பத்துடன் வெளியேற்றினால் யார்தான் ஆத்திரம் கொள்ள மாட்டார்கள். கோவிந்தசாமிக்கு உரும்பிராயில் எதிரிகள் கிடையாது. எல்லோருடனும் அன்பாகப் பழகுவார். உரும்பிராய் மக்களுக்கு அவரை நன்றாகத் தெரியும். அவர் நீண்டகாலம் வாழ்ந்த வீட்டைப் பலாத்காரமாக[ பறித்து அவரை வெளியேற்றியது புலிகள் செய்த தவறு இல்லையா?

(Rahu Rahu Kathiravelu)