ஈழவிடுதலையும் ராஜீவ் காந்தியும் பத்மநாபாவும்

நான் அறிந்த வரையில் பேரறிவாளன் ஒரு அப்பாவியே , ஆனால் அவரோடு பிடிபட்டவர்களில் சிலர் பெரும் கொலைகாரர்கள்,அவர்கள் தான் தலைவர் பத்மனாபாவையும் அவருடன் சேர்த்து ஏனைய தோழர்களையும் மூன்றே மூன்று நிமிடத்தில் கொன்றார்கள், ஆனால் ராஜீவ் காந்தியை கொன்றுவிட்டு இப்போது தப்ப முடியாமல் சிறையில் உள்ளனர், இந்த உண்மை எத்தனை பேருக்கு
தெரியும்?புலிகளால் பத்மநாபாவுக்கு ஆபத்து உண்டு என்று தெரிந்தும் இந்திய மத்திய அரசும் ,கிழடன் கருணாநிதியும் அதனை கண்டு கொள்ளவில்லை, கிழடன் கருணாநிதி அப்பவே இந்த கொலைகாரர்களை கைது செய்திருந்தால் இப்போது இவர்கள் உள்ளே இருந்து அழ வேண்டிய அவசியம் இல்லை,அத்துடன் இருபெரும் தலைவர்கலை காப்பாற்றி இருக்க முடியும்.


பேரறிவாளன் என்ற இளைஞன் அநியாயமாக கைது செய்யப்பட்டார். இப்போது அவர் விடிவுக்கு எவ்வளவோ ஒப்பாரி ஆனால் பிரபாகரன் நினைத்திருந்தால் அவரை ஒரே ஒரு அறிக்கையின் மூலம் காப்பாற்றி இருக்க முடியும். அவர் அப்பாவி என்பதை உலகுக்கு சொல்லியிருக்க முடியும். ஆனால் எத்தனையோ ஆண்டுகள் கழித்தும் பிரபாகரனுக்கு அந்த மனம் வரவில்லை. ஒத்துவராத யாரையும் கொலை செய்வதுதான் தனது போராட்டத்தின் முக்கிய அம்சம் என்ற கொள்கையில் வெறியோடு இருந்த பிரபாகரனுக்கு ராஜீவ்வோடு சேர்த்து தான் புதைத்தது ஈழக்கனவையும்தான் என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை. அதை அவர் பெருமையாகக் கூட அப்போது எண்ணியிருக்கக் கூடும். அதனால்தான் பல்லாண்டுகள் கழித்து ராஜீவ் கொலையைப் பற்றிக் கேட்டபோதுகூட ‘துன்பியல் சம்பவம்’ என சொல்லிவிட்டு அவரால் எளிதாக கடந்துபோக முடிந்தது.

ராஜீவ் மீது அப்போது போஃபர்ஸ் ஊழல் புகார் இருந்தது. அடுத்த தேர்தலில் அவர் தோற்க வாய்ப்பிருந்தது. அடுத்த ஆட்சி ஈழ ஆதரவாக கூட அமைந்திருக்கலாம். தேவையே இல்லாமல் ராஜீவைக் கொன்று தன் மீதும், தன் மக்களின் மீதும் மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டார் பிரபாகரன். இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பெரிய தலைவர் ஒருவரை கொடூரமாக கொன்றுவிட்டு ஈழம் வாங்கிவிட முடியும் என நினைத்ததெல்லாம் பிரபாகரனுக்கு ஆறாவது அறிவு என ஏதாவது இருந்ததா என்பதையே சந்தேகிக்க வைக்கிறது. ஆண்டன் பாலசிங்கம் ஆரம்பத்தில் இருந்தே இதை எதிர்த்ததாகவும் சொல்கிறார்கள்.

எது எப்படியோ, ராஜீவ்வுடன் அன்று அப்பாவிகள் எத்தனையோ பேர் இறந்தார்கள். அதில் தமிழர்கள் ஏனையோர். ராஜீவ்வைக் கொல்லும்போது உடன் சாகும் குழந்தைகளை உள்ளடக்கிய அப்பாவிகளைப் பற்றி பிரபாகரன் கவலைப்படவில்லை. 18 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபாகரனைக் கொல்லும்போது உடன் சாகும் அப்பாவிகளைப் பற்றி ராஜபக்சே கவலைப்படவில்லை. (பிரபாகரனும் கவலைப்படவில்லை என்பது ஐநா அறிக்கை)

ஒருவேளை தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் தோழர் பத்மநாபா அவர்களும் தொடர்ந்தும் ஒன்றாக இருந்திருந்தால், பத்மநாபா அவர்களை புலிகள் நெருங்க டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இடம் கொடுத்திருக்காமல் அவரைப் பாதுகாத்திருப்பார் என்ற கருத்து இன்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர்களிடையே நிலவுகின்றது. இறுதிக் காலங்களில் தோழர் பத்மநாபாவுடன் இருக்க முடியாவிட்டாலும் அவரின் இழப்பு இன்னும் மிகுந்த வேதனைக்குரியதாகவே இருப்பதாக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பல தடவைகள் கூறியிருக்கின்றார்.

இறுதியாக அமரர் பத்மநாபா அவரது வழிகாட்டு மொழிகளில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

* தியாகிகளின் சமாதியே..! எமது ஆராதனைக்குரிய தேவாலயங்கள்.

* தோழர்களே! மக்களிடம் செல்லுங்கள், மக்களோடு இணையுங்கள். மக்களிடமிருந்தே கற்றுக் கொள்ளுங்கள் கற்றதை மக்களோடு பகிருங்கள்.

* கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது சக்தியாக உருவெடுக்கும்.

* இன்று சகோதர யுத்தத்தை நடத்துவோரை நீங்கள் தேடி அழிக்க வேண்டியதில்லை அவர்கள் தம்மைத்தாமே அழித்துக் கொள்வார்கள்.

* மாணவர்களே! கற்பதற்காய் போராடுங்கள் கற்றுக் கொண்டே போராடுங்கள்.

* தோழர்கள் ஸ்தாபன வேலை நிமித்தம் மக்கள் சந்திப்பிற்கென வீடுகளுக்குச் செல்லும் பொழுதில் அந்த வீட்டார் அனுமதியில்லாமல் ஒரு குண்டூசியைக் கூட எடுக்கக்கூடாது.

* ஒரு ஜனநாயக அமைப்பில் தோழர்கள் உள்ளே வருவார்கள் வெளியே போவார்கள். அது தனிமனித உரிமை அதற்காக அமைப்பு உடைந்து விட்டதென்று அர்த்தப்படாது.

* நாம் மரணத்தை கண்டு அஞ்சவில்லை ஒரு அடிமையாய் அனாதையாய்
தெருக்களில் மரணித்துப் போவதைத்தான் வெறுக்கிறோம்.

* நாம் மக்களுக்காக போராடுவது எம்மீதான கடமையே தவிர எமக்கு வழங்கப்பட்ட அதிகாரம் அல்ல.

* இந்தியா ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடாய் இருக்கும் வரையில் அது எமக்கு என்றும் நட்பு நாடு என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

* நாங்கள் நடத்துவது விடுதலைப் போராட்டம். எமது போராட்டத்தில் எதிரி யார்? நண்பன் யார்? என்பதில் தெளிவான சிந்தனை இருக்க வேண்டும்.

* மக்களில்லாத மண்ணை நாம் நேசிக்கவில்லை மக்களுக்காகவே மண்ணை நேசிக்கிறோம்.

* திட்டமிடுதலுக்கு நிதி அவசியமில்லை. ஆதலால் திட்டமிடுதலை உடனே தொடங்குங்கள். நிதி கிடைத்தபின் விரைந்து செயல்பட அது உதவும்.

* விடுதலை போராட்டத்தில் போதைபொருள் கடத்தலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இன்னொரு சமூகத்தின் சீரழிவில் எமது சமூகம் விடுதலை பெற வேண்டியதில்லை.
இதில் ஏதாவது ஒன்றை புலிகள் ஏற்றுக்கொண்டார்களா?
இப்போது சற்று சிந்தியுங்கள் இப்படிப்பட்ட மாபெரும் தலைவன் பத்மநாபாவை கொலை செய்ய எப்படி மனம் வந்தது ?கொலை செய்தவர்களை எப்படி மன்னிக்க முடியும்? எப்படி மறக்க முடியும்?

(Sutharsan Saravanamuthu)

..