{இன்னும் சில தினங்களில் வரப்போவது ஜனவரி 1 புத்தாண்டு தினமா? சித்திரை 1 முட்டாள்கள் தினமா?
//பொட்டு அம்மான் அவர்கள் இறுதிநேரத்தில் வலிந்த தாக்குதல் ஒன்றினை நடாத்தி முல்லைத்தீவுக் கடற்பரப்பில்வைத்து அமெரிக்க இராணுவத்தின் உதவி யுடன் அவரும் பலநூறு போராளி களும் தப்பிச்சென்றுள்ளனர் என்கின்ற விடயம் 06ஆண்டுகளுக்குப் பின்னர் கசிந்துள்ளமையானது உலக வல்லரசுகள் மத்தியிலும் இலங்கையிலும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.//- _George RC}
தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்டு 06 ஆண்டுகளைக்கடந்து ஏழாவது ஆண்டினை அண்மித்திருக்கும் இந்நேரத்தில் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்கள் எரித்தெரியாவில் தங்கியிருப்பது இலங்கை அரசிற்கு பெரும் நெருக்கடியான நிலைமையைத் தோற்றுவித்துள்ளது. 30வருடகாலப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகளுடைய புலனாய்வுப் பிரிவானது அரசாங்கத்திற்கு மாத்திரமல்லாது, சர்வதேசத்திற்கும் சிம்மசொப்பணமாகத் திகழ்ந்தது. மாவிலாறில் ஆரம்பித்த யுத்தம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது பொட்டு அம்மான் அவர்கள் இறுதிநேரத்தில் வலிந்த தாக்குதல் ஒன்றினை நடாத்தி முல்லைத்தீவுக் கடற்பரப்பில்வைத்து அமெரிக்க இராணுவத்தின் உதவி யுடன் அவரும் பலநூறு போராளி களும் தப்பிச்சென்றுள்ளனர் என்கின்ற விடயம் 06ஆண்டுகளுக்குப் பின்னர் கசிந்துள்ளமையானது உலக வல்லரசுகள் மத்தியிலும் இலங்கையிலும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மிகத்துல்லியமாகத் தாக்குதல்களை நடாத்தி அதில் வெற்றி கண்டவர் பொட்டு அம்மான். அதில் குறிப்பாக இலங்கை மத்தியவங்கி, கொலன்னாவ, சர்வதேச கட்டுநாயக்கா விமான நிலையம் போன்ற தாக்குதல்களும் உள்ளடக்கப்படும். இதில் விமான நிலை யத் தாக்குதலையடுத்தே விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் திரும்பியது. வடகிழக்குப் பகுதியில் 90 வீதமானநிலப்பரப்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதற்கு முக்கிய காரணம் பொட்டு அம்மான் அவர்களது புலனாய்வுக் கட்டமைப்பானது மிக வும் பலமாக இருந்தமையேயாகும். இவ்வாறிருக்க சமாதான பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதும் இப்பேச்சுக்கள் அனைத்தும் தோல்வி யடைய மீண்டும் இலங்கையில் 2005-2009 வரையான காலப்பகுதிகளில் யுத்தம் மீளவும் ஆரம்பித்தது.
சர்வதேசப் புலனாய்விற்கும், ஆயுத விநியோக செயற்பாட்டிற்கும் பொறுப்பாக விடுதலைப்புலிகளின் கேபி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் செயற்பட்டுவந்தார். அதே நேரம் மாவிலாறிலிருந்து விடுதலைப் புலிகளுக்கெதிராக யுத்தத்தை முடுக்கிவிட்டிருந்தது இலங்கையரசு. இதனால் படிப்படியாக ஆரம்பித்த போர் உக்கிரமடைந்திருந்த நிலையில் சர்வதேசத்திற்கு பொறுப்பாயிருந்த கேபியின் பதவி பறிக்கப்பட்டு பொட்டு அம்மானின் கைகளுக்கு இப்பதவிகள் மாற்றப்பட்டிருந்தது. சர்வதேசத்தின் வட்டாரங்களை முழுமையாக அறிந்திருந்த கேபி அவர்கள் புலனாய்வு செயற்பாடுகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டதால், அதன் பின்னர் இச்செயற்பாடுகளுக்குப் பொறுப்பாகவிருந்த பொட்டு அம்மான் அவர்களால் புலனாய்வுக்கட்டமைப்பை சீராக இயக்கிக்கொள்ளமுடியவில்லை. காரணம் என்னவென்றால் சர்வதேச வட்டாரங்கள், அதனது தன்மைகள் தொடர்பாக நன்கு அறிந்தவர் தான் இந்தக் கேபி. ஆனால் பொட்டு அம்மான் அவ்வாறாக அறிந்திருக்கவில்லை. சோமாலியா, யூக்கஸ்லாவியா, செக் குடியரசு, தாய்லாந்து, எரித்தெரியா, கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்பிவைத்தவரும் கேபியே. இலங்கையில் இருந்து பொட்டு அம்மான் அவர்கள்; செயற்பட்டபோது விடுதலைப்புலிகளின் 08 ஆயுதக்கப்பல்கள் இலங்கை இராணு வத்தினரால் மூழ்கடிக்கப்பட்டது. இதன் காரணமாக விடுதலைப்புலிகளின் போராட்டம் பின்னடைவைக் கண்டது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் சர்வதேச நாடுகள் அனைத்தும் இணைந்து விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கவேண்டும் என்பதில் திடசங்கற்பம் பூண்டு அவர்களுடனான யுத்தம் தீவிரமாக கட்ட விழ்த்துவிடப்பட்டது. படிப்படியாக விடுதலைப்புலிகள் வசமிருந்த பகுதிகள் இராணுவத்தினரின் வசமா னது. விடுதலைப்புலிகளின் புலனாய்வு காட்டிக்கொடுக்கப்பட்டுவிட்டது என்பதை நன்கு அறிந்த பொட்டு அம்மான் அவர்கள் தனது முக்கிய சகாக்களான ரொபின்சன், நியூட்டன், ரஞ்சன், வடிவேல், லக்ஷ்மன் போன்றோரின் உதவியுடன் புலனாய்வுக் கட்டமைப்பின் வியூகங்களை வேறுவித மாக மாற்றியமைத்தார்.
ஏற்கனவே சர்வதேச புலனாய்வின் கட்டமைப்பில் பொட்டு அம்மானினது சகாக்கள் இருந்தமையின் காரணமாக இலங்கையில் யுத்தம் நடை பெற்றுக்கொண்டிருந்தவேளையில் சர்வ தேச கடற்பரப்பின் ஊடாக பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தனர். சர்வதேசத்தின் தலையீடுகளினால் எமது விடுதலைப்போராட்டம் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும் என்பதை அறிந்துகொண்ட பொட்டு அம்மான் இப்போராட்டத்திலிருந்து சற்று பின்வாங்கியதுடன், தமிழ் மக்களுக்கான தீர்வுகளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெற்றுக்கொடுக்காவிட்டால் மீண்டுமொரு யுத்தத்தை சர்வதேசத்திலிருந்து ஆரம் பிப்பதே அவரின் திட்டமாகும்.
இதனை மையமாகக்கொண்டே வியூகங்களை வகுத்த பொட்டு அம்மான் அவர்கள் எரித்தெரியாவிற்குச் செல்வதான முடிவுகளை மேற் கொண்டார். விடுதலைப்புலிகள் தமது பாதுகாப்புக்கென 25 நிலக்கீழ் பதுங்குகுழிகளைத் தயார்படுத்தினர். இவற்றில் 03, 02, 01 என்ற முறைப்படியே தங்கியிருந்து உயிர்வாழமுடியும். இவற்றில் பெரும்பாலானவை கடல் பிரதேசங்களை அண்டியே அமைக்கப்பட்டது. அதன் சுரங்கப்பாதைகளும் சிறம்பம்சமாகும். இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்க கணிசமானளவு புலனாய்வுப் பிரிவினை நாட்டைவிட்டு வெளி யேற்றிக்கொண்டிருந்தார் பொட்டு அம்மான்.
இறுதிநேரத்தில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது. இதற்கான காரணம் என்னவென்றால் தொடர்பு சாதனத்தில் பேசுகின்ற இரகசிய குறியீடுகளை இராணுவம் ஒட்டுக்கேட்க ஆரம்பித்த நிலை யிலேயே இவ்வுரையாடல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. மிகவும் சாதுரிய மான முறையில் தேசியத்தலைவர் பிரபா கரனையும் அவர் அழைத்துச்சென்றதாகக் கூறப்படுகின்றது. இவ்விடயம் உண்மைத் தன்மையற்றதாகவிருந்தாலும் பொட்டு அம்மான் அவர்கள் தப்பிச்செல்லும் அளவிற்கு வாய்ப்பிருந்ததாக இருந்தால் நிச்சயம் பிரபாகரனும் தப்பிச்சென்றமைக்கான வாய்ப்புக்கள் இருந்திருக்கும் என்பதேயாகும். விடுதலைப்புலிகளின் ஆரம்பநிலை போராளியாக செயற்பட்ட பொட்டு அம்மான் அவர்கள் இப்போராட்டத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர்.
இவருடைய திறமையான செயற்பாடுகளின் காரணமாகவே தேசியத்தலைவர் அவர்களினால் விடுதலைப்புலிகளின் புலனாய்வான டெசி என்ற பிரிவுக்கான பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. இறுதி யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது புதுக் குடியிருப்பு, விஸ்வமடு, முள்ளிவாய்க்கால், பொக்கனை போன்ற பகுதிகளில் இராணுவத்தினருக்கு கணிசமானளவு உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி, அவரும் அவரது சகாக்களும் ஊடறுத்து சமர் ஒன்றினை மேற்கொண்டு இறுதியாக தப்பிச்சென்றனர். இது இவ்வாறிருக்க எரித்தெரியாவில் விடுதலைப்புலிகள் தங்கியிருப்பதற்கு அவ்வரசாங்கம் அனு மதி வழங்கியிருக்கின்றதா? என்கின்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது. எரித்தெரியா நாடானது ஆயுதக் குழுக்களுக்கு அடைக்கலம் வழங்கும் ஒரு நாடாகவே திகழ்கின்றது. இங்கு சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியில் உள்ளவர்களும் தலைமறைவாக உள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்கனவே எரித்தெரியாவுடன் நெருங்கிய நட்புறவினை பேணி வந்ததன் காரணமாக அவர்களுடைய ஆயுத தொடர்புகளும் அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இறுதியாக இரணைமடுப் பகுதியில் விமானத் தாக்குதலை நடாத்துவதற்காக எரித்தெரியாவில் இருந்து புறப்படத் தயாராகவிருந்த மிக் ரக விமானங்களை இந்தியாவினது ரோ காட்டிக்கொடுத்ததன் விளைவாக அத்திட்டங்களும் கைவிடப் பட்டது.
இந்நிலையில் தேசியத்தலைவர் பிரபா கரனின் உடலைக் கண்டுபிடித்ததாகக் கூறும் இராணுவம் பொட்டு அம்மானின் உடலைக் கண்டுபிடிக்கவில்லை. ஒரு நாட்டின் முதுகெலும்பாக இருப்பவர்கள் இந்த புலனாய்வுப் பிரிவினர். புலனாய்வுக் கட்டமைப்பிலுள்ளவர்கள் இலகுவில் யாராலும் இனங்காணப்படமாட்டார்கள். அவ்வாறே தமது நிலைகளை பலப் படுத்திக்கொண்டு செயற்படுவார்கள். ஆரம்பநிலைப் போராளியாக தேசியத் தலைவருடன் இணைந்து செயற்பட்டு வந்த பொட்டு அம்மான் அவர்கள் தேசியத்தலைவருக்கு அடுத்தநிலையில் வைத்துப்பார்க்கும் அளவுக்கு திற மையாகச் செயற்பட்டவர். நிச்சயமாக அவர் தப்பித்து எரித்தெரியாவிற்குச் சென்றிருக்கும் நிலையில் எவ்வாறான திட்டங்களுடனும் சென்றிருப்பார் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
இறுதி நேரத்தாக்குதல் திட்டம் அமைக்கப்பட்டது எவ்வாறு? பொட்டு அம்மான் அவர்கள் கரையான் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் தனது சகாக்களுடன் நிலைகொண்டிருந்தார். போதியளவு ஆயுதங்கள் இல்லாமையின் காரணமாக தம் கையிருப்பில் இருக்கக்கூடிய ஆயுதங்களைக்கொண்டு தாக்குதல்களை நடாத்திக்கொண்டிருந்த அவர் 53,57,58வது படைப்பிரிவுகளுடன் பாரிய எதிர்ப்புச் சமர் ஒன்றினை ஏற்படுத்தியிருந்தார். இதில் பலநூறு போராளிகள் கொல்லப்பட்டதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பலியாகியுமிருந்தனர். இறுதி நேரத்தில் இலங்கை இராணுவத்தினருடன் இணைந்த சிலர் காட்டிக்கொடுக்கவும் ஆரம்பித்தனர். இதனையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்ட பொட்டு அம்மான் அவர்கள் தனது உட லில் வெடிமருந்துகளைக் கட்டிக்கொண்டு போர்க்களத்தில் நின்றார். 2009இன் 05ஆம் மாத ஆரம்பப் பகுதிகளில் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் இருவரையும் சர்வதேச நாடொன்றின் உதவியுடன் சர ணடையுமாறு பணிக்கப்பட்டிருந்தவேளை அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த பொட்டு அம்மான் போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுப்போம் அல்லது அதற்கான மாற்றுவழிகளை ஏற்படுத்துவோம் எனவும் பதில் அனுப்பினார். ஏற்கனவே தேசியத்தலைவர் சரணடைய மறுப்பு தெரிவித்திருந்தமையின் காரணமாக தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்ட பொட்டு அம்மான் அவர்கள் இங்கிருந்து தமது ஆயுத நிலைகளை பலப்படுத்தாது விட்டால் தற்கொலைப்படைகளாக மாறு வதே அவர்களது திட்டமாக இருந்தது. இலங்கைத்தீவிலிருந்து வேறு நாட்டிற்கு தப்பிச்செல்லும் வியூகங்கள் ஏற்கனவே பொட்டு அம்மானால் ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும் அது சாத்தியமற்றுப்போனால் கரும்புலிகளாக வெடித்துச்சிதறுவதுமே இவர்களது முக்கியத்திட்டம்.
ஏற்கனவே விடுதலைப்புலிகளது நீர்மூழ்கிப் கப்பல்கள் 03 தயாராக இருந்த நிலையில் சர்வதேச மட்டத்தில் அமெரிக்காவும் இவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. அமெரிக்காவின் நயவஞ்சகத்தனத்தை அறிந்துகொண்ட பொட்டு அம்மான் அவர்கள் தமது தன்னிச்சையான முடி வினை எடுத்துக்கொண்டார். ஏற்கனவே எரித்தெரியாவில் விடுதலைப்புலிகளின் இரகசியமான முகாம்கள் இருந்த மைக்கான ஆதாரங்களும் உள்ளன. இவை ஒருபுறமிருக்க அவ்வாறு விடுதலைப்புலிகள் எரித்தெரியாவில் இருந்தால் இத்தனை காலங்களில் ஏன் அவர்கள் மீண்டும் இலங்கை வந்திருக்கக்கூடாது என்கின்ற கேள்வியும் எழுகின்றது. அரசியல் ரீதியில் சமரச தீர்விற்கான முன்னெடுப்புக்களை கொண்டுசெல்லும் இக்காலகட்டத்தில் திடீரென்று ஒரு போராட்டத்தை ஆரம்பித்துவிட்டால் அது தமிழ் மக்களுக்கு பாதகத்தன்மையைத் தோற்றுவிக்கும். ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்கள் அனைத்தும் தோல்வியடைந்ததுடன், விடுதலைப் புலிகளின் போராட்டம் இன்னமும் இருக்கின்றது எனக்கூறி ஒரு இன அழிப்பினை மேற்கொண்டனர். மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்படக்கூடாது என்கின்ற காரணத்தினால் பொட்டு அம்மான் அவர்கள் மிக நிதானத்துடன் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகக் கூறப் படுகின்றது. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களுக்கான சரியான தீர்வுகள் எட்டப்படாதபோது அடுத்தகட்ட நகர்வுகள் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்களால் எவ்வாறு காய்நகர்த்தப்படும். எவ்வாறிருப்பனும் மைத்திரி-ரணிலி னது கூட்டரசு எதிர்வரும் காலங்களில் பல்வேறு விதமான சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை மைகள் இருப்பதைக் காணக் கூடியதாகவிருக்கின்றது.
(இரணியன்)(தினப்புயல்)