ஆளுக்கொரு கட்சி கட்டிக்கொண்டு பதினைந்து இருபது மந்தைகள் தமக்குள்ளேயே ஒரு பருமட்டான ஐக்கியத்தையே எட்டமுடியாமல் தவிப்பவர்கள் சர்வதேச பிரச்சனைக்கு விலக்குதீற்க தகுதியாக எண்ணி ஊடகங்களில் பேசுவது எள்ளிநகையாடத் தோன்றுகிறது.
கடந்த ஆண்டு பிற்பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் பிரபாகன் படம் காணப்பட்டது தொடர்பில் சில மாணவர் கைது இடம்பெற்று பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் தற்போது அவர்கள் மீது மீண்டும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன எனவும் இது தொடர்பில் யாழில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து வைத்திருந்தார்.
கைதை கண்டிப்பது அவர்கள் விடுதலைக்கு உதவுவது தலமைகளின் தார்மீகக் கடமை என்பது ஏற்பார்களா? விடுவார்களா? அவர்கள் இயல்பு தெரியும். அது ஒருபுறமிருக்க . . . . . . .
பேட்டியின் போது இவருடைய சிறுபிள்ளை தனமான பேச்சும் குறுகிய அரசியல் ஞானமும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
* பிரபாகரன் படம் எத்தனையோ பத்திரிகைகளில் வருகிறது. அதே படத்தை மாணவர்கள் வைத்திருப்பது எப்படி குற்றமாகும்? என்ன அறிவு பூர்வமான விவாதம்? . . . . . ஏன் ஹிட்லர் பற்றிய கட்டுரைகளின் போதும் அவன் படங்கள் வரத்தான் செய்யும். ஆனால் ஜெர்மனியிலும் பல உலக நாடுகளிலும் அவன் தடை செய்யப்பட்ட உலகப்பயங்கரவாதி! அவன் பெயரை(பிள்ளைகளுக்கோ, வீதிகளுக்கோ . . . . . . சூட்டுவது), படம் வைத்திருப்பது . . . . . எல்லாமே தண்டனைக்குரிய குற்றங்கள்.(நூறாண்டுகள் கடந்தும்)
*அரசைப் பொறுத்தவரை பிரபாகரன் ஒரு பயங்கரவாதியாக இருக்கலாம்? தமிழ் மக்கள் யாருமே அவனை பயங்கரவாதி எனச் சொன்னது கிடையாது என வலியுறுத்தி சொல்கிறார் இந்த அறிவுக்கொழுந்து என்றால் எங்கிருந்து கிடைத்த உரிமை? பேச்சில் குறைந்தபட்ச நாகரீகமாவது வேண்டாமா ?
*ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அதிகமான நாடுகள் இன்னும் தடை எடுக்காமல் வைத்திருக்கும் பாசிசப் பயங்கரவாதி பிரபாகரன் என்ற வரலாற்றை சுரேஷால் சுலபமாக மறைக்கமுடியுமா?
*உலக வரலாறோ, புரட்சியாளர்களின் தரமோ தெரியாத படுமுட்டாள் தனமான ஒரு கேள்வியை அரசிடம் கேட்கிறார்.
*”சேகுவேரா” வின் புகைப் படங்கள் பொறித்த T.சேட் களை சிங்கள இளைஞர்கள் அணிகிறார்களே? அமெரிக்காவை பொறுத்தமட்டில் “சே” யும் பயங்கரவாதி தானே அப்போ அவர்களை? இந்த அரசு கைது செய்யுமா?
*தோழர் “சே” யின் கீர்த்தி உலகறிந்தது சில எருமைகள் அறியாதது அவர்கள் குறையே. மாபெரும் புரட்சியாளன், பொலிவியாவுக்கு மட்டுமல்ல தென்னமெரிக்க நாடுகள் பலவற்றிலும் முழுமையான அர்ப்பணிப்போடு செயல்பட்ட தோழர்! கியூப விடுதலையின் வெற்றிக்கு காஸ்ரோ வுடன் தோளோடு தோள் கொடுத்து உதவியவர். கியூப பொருளாதாரத்தை கொடிய அமெரிக்க பொருளாதாரத் தடைகளையும் மீறிக் கட்டியெழுப்புவதில் பங்காற்றியவர்.
ஊனமுற்ற சொந்த இயக்கப் போராளிகளையே பஸ் ஸில் ஏற்றி குண்டு வைத்து கொன்ற கொடியவன் பிரபாகரன் போலல்ல . . . . . . . எதிரிப்(அமெரிக்க) படையில் காயமுற்றவர்களையும் மருத்துவம் பார்த்து உயிர்காத்த மனிதநேயமிக்க மருத்துவன்.
தொழுநோய் கண்ட ஆபிரிக்க நாடெல்லாம் நோயாளர்களை தொட்டு ஆதரவாக வைத்தியம் செய்தவன்.
கைதாகி கொல்லப்படும் தருவாயில் கூட கழுத்தில் தொங்கிய சையனயிட்டு குப்பியை வைத்துக்கொண்டே சரணடைந்த வெட்கம்கெட்டவனல்ல எங்கள் தோழர் “சே”
“சே” யை கொல்ல . . . கைகள் கட்டி கொண்டுவரப்பட்ட போது சில ராணுவ அதிகாரிகள் மறுத்தனர் ஒருவன் மட்டும் பொறுப்பெடுக்கிறான். அவனுக்கே கைகள் நடுங்குகின்றன. அவன் ஒன்பது ரவைகளை செலவு செய்தும் ஒரேயொரு ரவை மட்டும் நெஞ்சை துளைக்க நின்றபடி தரையில் சாய்ந்தது புரட்சியின் விருட்ஷம் . . . . . . . . .
கேவலமான ஒரு கொலைகாரப் பாசிஸ்ட்டோடு திவ்விய புரட்சியாளனை “சே” யை ஒப்பிடலாமா?????
……………………………………………………………………………………………………………………
* இது தவிர சிறீதரன்,சுமந்திரன், பிரேமச்சந்திரன் உட்பட தமிழ் அரசியல்வாதிகளிடம் “சீன எதிர்ப்பு” என்ற வைரஸ் தொற்று அலை மோதுகிறது . . . . . . . .
அதன்படி சீனா இலங்கைக்கு செய்த உதவிகள், அபிவிருத்தி எல்லாமே தேவை அற்றவை. அவை சீன நலன்களில் மேல்கட்டப்படுவனவே அதில் சீனா மிக கவனமாக காய் நகர்த்துகிறது என்றும் . . . . .
எந்த ஒப்பந்தங்களையும் சீனாவுக்கு வழங்கக் கூடாது என்றும் . . . . . . . . . .
130 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியா . . . . . . சீனா வுக்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல என்றார் (ஆயுத பலம், பொருளாதாரம், கல்வி, கலாச்சார மேம்பாடு . . . . . . . . ) சகல துறையிலும் முதலிடத்தில் நிற்கும் ஒரு நாடாய் இருக்கும் சீனாவை பட்டினிச் சாவு, ஊழல், கொலை, கொள்ளை, லஞ்சம் . . . . . . . அத்தனை சமூகத்துக்கு வேண்டாத சாக்கடைகளையும் நுகர்ந்து தவிக்கும் இந்தியா ஒரு நாடு?????
அதோடு 29 கி.மீ கடல் தொலைவில் இருக்கும் நாடு எனவே இலங்கையால் செய்யமுடியாத எல்லா ஒப்பந்தங்களும் (பருத்தித்துறை மீன்பிடி துறைமுகம் உட்பட) இந்தியாவுக்கே கொடுக்கப்படவேண்டும் என்றும் முன்மொழிவல்ல கட்டளைப் பாணியில் கருத்திட்டு பேட்டியை நிறைவு செய்தார்!
அயலில் இருக்கின்ற சிறிய, பெரிய எந்த நாட்டுடனாவது இந்திய நலன் சாராத எந்த விடயத்திலாவது இந்தியா அக்கறை காட்டிய வரலாறு இந்த அரசியல் மேதாவிகளால் கோடிட்டுக் காட்ட முடியுமா?
தங்கள் தேவைக்கு இயக்கங்களை உருக்கொடுத்து இலங்கைக்குள் விட்டதும் தங்கள் தேவை கருதியே புலிகளை அழிப்பதில் கூடுதல் பங்கெடுத்ததும் இந்தியா என்பது உள்ளங்கை நெல்லிக் கனி போல வழங்கியும் இந்தியாவை ஆதரித்து கருத்து வைப்பது இவர்கள் வர்க்க நலனா? ஏதும் வாங்குகிறார்களா?
தீவு பகுதியும், யாழ் மாவட்டமும் பெற இருந்த நல்ல வாய்ப்புகள் அறிவிலி அரசியல்வாதிகளின் தலையீட்டில் ஊசாடிக்கொண்டு நிற்கின்றன.