(வல்வை ந.நகுலசிகாமணி)
(இந்தத் தமிழரசுக்கட்சியின் வழித்தோன்றல்கள்தான் புலிகளும் அவர்களால் உருவாக்கபபட் தமிழ் தேசியக் கூட்டமைப்பும். முள்ளிவாய்கால் அவலங்களுக்கு இவர்கள் யாபேரது பங்களிப்பு சமனாக இருந்ததே உண்மை – ஆர்)
1947ல் நடைபெற்ற தேர்தலில் தமிழரின் உரிமைக்குரலாக இனங்காட்டிய தமிழ்க் காங்கிரஸ் பின்னர் சலுகை அரசியலில் நாட்டம் காட்டியவேளையில் தமிழ்த் தேசியத்தின் காவலனாக அதன் கேடயமாக தந்தை செல்வா தலைமையில் எழுச்சிபெற்ற தமிழினத்தின் விடிவெள்ளியாக 1949ல் ஆரம்பித்ததுதான் இந்தப்பேரியக்கம். கல்லடியும் சொல்லடியும் பொல்லடியும் பெற்று செங்குருதி சிந்தி, சிறை நிரப்பி வடகிழக்கு என்ற பேதம்களைந்து தமிழர்களை ஒருங்கிணைத்த பேரியக்கம் தமிழரசுக்கட்சி.
செல்வா தலைமையில் கு. வன்னியசிங்கம், இ.மு.வி. நாகநாதன்,வி.ஏ.கந்தையா,அமரர்.ஏகாம்பரம், சி.மூ. இராசமாணிக்கம்,செ.இராசதுரை, அ.அமிர்தலிங்கம், மசூர்மௌலானா,போன்றவர்கள்தங்களைத் தியாகம்செய்து 65 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாகச்செய்ததியாகத்தினால்தான் தமிழ்த்தேசியமும்நிலமும் தமிழரசுகட்சியால் பாதுகாக்கப்பட் டது. இல்லையேல் தமிழினம் எப்போதோ அழிந்திருக்கும். இதுதான்உண்மை.
வல்வையில் தமிழர் ஒற்றுமைமாநாட்டில் (1971,பெப்ரவரி 2ல்) நான்குகட்சிகள்ஒன்றுபட்டுதமிழர் விடுதலைக் கூட்டணியாக பின்நாளில் உருவாகியது.தந்தை செல்வா தலமையில், தலைவர் திரு,அமிர்தலிங்கம், பின்னர் திரு.ஆனந்தசங்கரி பின் இரா.சம்பந் தன் ஐயா தலைமையிலும், அவர்கள்பின் வழிவந்த தமிழீழவிடுதலைப் புலிகளின் போராட்டத்தின், மக்களின் தியாகத்தின் பங்களிப்பினால்,இன்று,தமிழர்பிரச்சினை,ஐக்கியநாடுகள்வரை,சென்று,நியாயவழியில்தீர்க்கும்,பாரியபொறுப்பு,சர்வதேசத்திடம் விழுந்துள்ளது. இன்று தமிழ்தேசியகூட்டமைப்பு (தமிரசுக்கட்சி) நிதானமாக சம்பந்தர் தலைமையில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. (தமிழர்விடுதலைக் கூட்டணியை யாரும், யாருக்கும் கொடுப்பதற்கு உரிமை இல்லை.)
ஜனாதிபதி ஜெயவர்தனா நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக பதவி வகித்து திரு.அமிர்தலிங்கம் எதிர்கட்சியாக இருந்தவேளையில் வவுனியா தமிழ்ப் பகுதி யுடன், மதவாச்சிப்பகுதியிலுள்ள சில சிங்கள கிராமங்களை பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைவாக்குகளால் இணைக்கப்பட்டது.தமிழர்விடுதலைக் கூட்டணி இந்தஇணைப்பை எதிர்த்து பாராளுமன்றத்தை ஐந்துமாதங்கள் தொடர்ச்சியாக திரு. சம்பந்தர் உட்பட ஒற்றுமையாக பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். பின்னர் ஜே.ஆர். ஜெயவர்த் தனா இதற்கு பணிந்துதனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த இணைப்பைரத்து செய்யப்பட்டு,மீண்டும் பாராளுமன்றம் சென் றனர்.
தனிநாடு கோருவதற்கு நாம் ஆதரவளிக்கமாட்டோம் என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுக்கமறுத்து அமிரிதலிங்கம் தலைமையில் எல்லோரும் பதவியைத் துறந்தனர். இன்று வடமாகாணசபைத் தேர்தலின் பின்பு ஐந்து இடங்களில் சத்தியப்பிரமாணம் செய்தவேளையில் திரு.விக்கினேஸ்வரன் ஐயா அவர்கள் தனியாகச்சென்று ஜனாதிபதி ராஜபக்ஷ முன்னிலையில் தனது உறவினர் திரு,வாசுதேவா குடும்பத்தினருடன் சத்தியப்பிராமாணம் செய்தார். மீண்டும் பாராளுமன்றத்தில் இப்போது (2015ல்) வரவ செலவு தீர்மானத்திற்கு எதிராக கட்சிக்கட்டுப்பாட்டை மீறி ஒருசிலர் வாக்களித்தனர். இதைவிடவேறுபல சம்பவங்களும் நடந்துள்ளன. இந்தநிலமை யில் கட் சியை எப்படி பதிவுசெய்வது?
அன்று தந்தை செல்வாவிற்ம்கும் பின்னர் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களுக்கும் எல்லோரும் கட்டுப்பட்டிருந்தார்கள். விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்ட தனி நபர் கட்சிகள்யாவும், தற்போது பிரதிநிதிகளுக்காக தேர்தலில் வெற்றிபெற்றவுடன் இவர்கள் யாவரும் தாம்யார் என்பதை மறந்துவிட்டார்கள்.தாமும் ஒரு பா.உ என ஒவ்வொரு பத்திரிகை மாநாடு கூட்டுகின்றார்கள். முன்னர் வடக்குகிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழரசுகட்சி, தமிழர்விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் பொதுச்சபை கூடித்தான் ஏதேனும் முடிவெடுப்பார்கள். இன்று அந்தநிலமைக்கு கொண்டுவந்தவர்கள் தனிநபர் கட்சிகளால்தான். அன்று ஜனநாயகக் கட்டமைப்பு உடைத்துவிட்டு இப்போது தமிழ்தேசியஅமைப்புக்கு கட்டமைப்பு இல்லை, என்று உரக்கச் சத்தம் போடுகிறார்கள். தங்கள் பா.உ இருப்பிடத்தைப் பலப்படுத்த கட்சியாக பதிவுசெய்ய கோருகிறார்கள்.
தமிழரசுக்கட்சி பாரம்பரிய 60 வருடம் கடந்த ஜனநாயக கட்டமைப்பு. தமிழ்நாட்டில் (தி.மு.க, அ.தி.மு.க.வில்) தேர்தலின்போது சிலகட்சிகள் இணையும் பின்னர் பிரியும். கடைசிநேரத்திலும் களட்டிவிட்டு பெரியகட்சிகள் தனியாகவும் கேட்கும். அதுபோல் இவர்களையும் களட்டிவிட வேண்டியதுதான். உ+ம்: திரு.சுரேஷ் பிறேமச்சந்திரன் இரண்டு வேட்பாளர்கள் கேட்டு இரண்டாவது ஆளை போடுவதற்கு யாழ்மாவட்டதத்தில் அவரிடம் ஆள் இல்லை என்ற காரணத்தால் முதலில் தமிழரசுகட்சி திருமதி. அனந்தியைப் போட்டு, பின்னர் வேறு புதியவரைப் போட்டார்.
அன்று தமிழ் அரசுக் கட்சியின் மூளையாகச் செயற்பட்டவர் வ. நவரத்தினம். அடையாள அட்டை மசோதாவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கட்சிக்கட்டுப்பாடு களை மீறி வாக்களித்தன் காரணமாக அவரைக் கட்சி நீக்கியது. பின்னர் அவர் புதிய கட்சி ஆரம்பித்தார். ஆனால் அவரையும் அவரது கட்சியையும் மக்கள் நிராகரித் தனர். இப்படி இதற்குபல நீண்ட பட்டியல் உண்டு.
திரு.சம்பந்தன்,புதியவர்களையும்,திறமையானவர்களையும்,கொண்டுவரும்,நோக்கில்,மாகாணசபைக்கும்,நகரசபைக்கும்,பிரதேசசபைக்கும்,பல,இளைஞர்களையும் திரு. விக்கினேஸ்வரன், திரு.சுமந்திரன் போன்றவர்களையும் இணைத்து வலுவானஅமைப்பை உண்டாக்கிவரும் வேளையில்தான் பிரச்சனை ஆரம்பமாகியது.
திரு,சுமந்திரன் அவர்களின் சட்டத்திறமையும், மும்மொழி பேச்சாற்றலும் குறுகியகாலத்தில் வெளிவந்தது. அத்தோடு சம்பந்தன்ஐயா அவர்களுக்கு பலவழிகளிலும் உறுதுணையாகவும் திரு. சுமந்திரன் இருந்துவருகிறார். இந்தவேளையில் திரு.சம்பந்தன் ஐயாவின் காலத்தில் எமது இனத்திற்கு தீர்வுகிடைக்கும் என எதிர்பார்க்கும்நேரத்தில் திரு.சுமந்திரன் அவர்களுக்கு தலைமைப்பதவி கிடைத்துவிடும் என்று ஒரு சிலருக்கு கலக்கம், குழப்பம் எழுந்தது. புதிய தேர்தலும் 2015ல் வந்தது, மாற்றத்திற்கான குரலும் புலம்பெயர்ந்த நாடுகளில் மட்டும் ஒங்கி ஒலித்தது. திரு.சம்பந்தன் அவர்கள் புதிய அரசைக் கொண்டு வருவதற்காக திரு.ரணில், திருமதி.சந்திரிகா ஆகியோருடன் ஆரம்பத்திலிருந்தே இயங்கினார்.
ஒரு தடவை திரு.ரணில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு திடமான மறுப் பையும் தெரிவித்திருந்தார். தேர்தல் நேரத்தில் திரு.சம்பந்தன் நேரடியாக யாழ்ப்பாணத்தில் கூடியகவனம் எடுத்து திரு.சுமந்திரன் அவர்களைஆதரிக்குமாறு விசேடவேண்டு கோளைவிடுத்திருந்தார். யாழ்மாவட்ட மக்கள் கலக்கம், குழப்பம் செய்தவர்களை தெரிவுசெய்யாது ஒதுக்கினர். இதன் தொடர்ச்சியாக தங்கள்முயற்சி ஒன்றுமே சரிவராத பட்சத்தில்தான் ‘மக்கள்பேரவை’ ஆரம்பம். இதில் தோற்கடிக்கப்பட்டவர்களும் விரக்த்தி யடைந்தவர்களும் சேர்ந்துள்ளனர். இதற்கு இன்றுவரை ஆதரவாக….. பொதுமக்கள் யாரும் பச்சைக்கொடி காட்ட வில்லை. புதிய வருடத்தில் 83ம் வயதில் காலடிவைக்கும் தமிழ்தேசிய அமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களும், பல வருடங்கள் சிறைசென்று தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு.மாவை.சேனாதிராசா அவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.