(தோழர் ஜேம்ஸ்)
தனது மதுரக் குரலால் தமிழ் இளைஞர்களை தட்டி எழுப்பியது இன்னமும் கண் முன்னே இருக்கின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் 1983 இற்கு பின்னர் தமிழ் நாட்டில் அஞ்ஞாத வாசம் செய்த போது அவ்வப் போது அமிர் அண்ணனை சந்திக்க செல்லும் போதெல்லாம் இன்முகத்துடன் விருந்தோம்பல் செய்வது கண் முன்னே வந்து செல்கின்றது. எமக்குள் பல அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் அமிர்தலிங்கத்தின் கொலையை நாம் என்றும் ஏற்கவில்லை இவரின் மரணச் சடங்கை செய்ய யாவரும் பயந்திருந்த வேளை அவ்வேளை இணைந்த வடக்கு கிழக்கு மாகாண அரசை ஆட்சி செய்த ஈபிஆர்எல்எவ் இனர் வடக்கு கிழக்கு எங்கும் அமிரின் பூத உடலை எடுத்துச் சென்று உரிய மரியாதையுடன் அடகம் செய்த போது இறுதியாக இவரை சந்தித்தது மட்டும் ஞாபகம். அமிருடன் இணைந்து செயற்பட்ட ஒரு வலிமையான பெண்மணி.. மனது கனக்கின்றது.
தைரியமாக பெண்களையும் வீதிக்கு இறக்கி சத்தியாக்கிரகம் என்ற சாத்வீகப் போராட்டத்தில் ஆண்களுக்கு சமனாக சமராடிய உன்னத செயற்பாடு என்னை இவர்பால் விமர்சனங்களுக்கு அப்பால் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இடதுசாரியத்திற்கு எதிரான இவர்களின் நிலைப்பாடு என்னை எப்போதும் இவர்கள் மீது முரண்பாட்டை ஏற்படுத்தினாலும் தமிழ் மக்களுக்கான தேசிய அடையாளத்தை சர்வதேச அரங்கில் ஏற்படுத்திய உழைப்பில் அமிர் அண்ணாவுடன் தோள் கொடுத்து செயற்பட்டது வரலாற்றில் இடம்பெற்றுத்தான இருக்கப்போகின்றது. முரண்பாடுகளை பேசும் ஒரு வகை அலைவரிசையை இந்தத்தம்பதியினர் கொண்டிருந்ததும் வேறு எந்த மிதவாதத் தலைவர்களிடமும் இல்லாத சிறப்பு அம்சம்ஆழ்ந்த வருத்தங்கள் அமிருடன் அவரின் சகாத்தம் முடிந்துவிட்டது என்ற ஆதங்கங்களும் உண்டு.