(Bazeer Seyed)
புலிகள் இருபது வருடத்திற்கு முன்பிருந்தே தமது மதவிரோத செயற்பாட்டின் தொடராக முஸ்லிம்களை மட்டுமல்ல சிங்கள மக்களையும் வட கிழக்கில் மட்டுமல்ல அதற்கு அப்பாலும் மே 14 ம் திகதி 1985ல் அனுராதபுர ஸ்ரீ மஹாபோதி விகாரை அனுராதாபுர பேரூந்து தரிப்பு நிலையம் ஆகியவற்றில் சிங்கள அப்பாவி மக்கள் வழிபாட்டில் ஈடுபடிருந்த புத்த பிக்குகள் பிக்குனிகள் உட்பட 146 பேரை கொன்றது தொடக்கம் தமது அந்திம காலத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் வரை மாத்தறை அகுரஸ்ஸை கொடபிட்டிய எனுமிடத்தில் போர்வை முஸ்லிம் ஜூம்ஆப் பள்ளிவாசல் தாக்குதல் வரை (10.03.2009) ஏன் அதற்கு சற்று முன்னரான, வாகரை கோவில் பூசாரி வரை எண்ணற்ற கொலைகளை மிலேச்சத்தனமாக செய்துள்ளனர். அது தவிர ஆயிரக்கனக்கான சிங்கள, தமிழ், முஸ்லிம் பொது மக்களை, அரசியல் வாதிகளை, கல்விமான்களை அரச அலுவலகர்களை என்று ஆயிரக்கணக்கனோரை ஈவிரக்கமின்றி கொன்று குவித்துள்ளனர். அப்போதெல்லாம் புலிகளின் கொடூரங்களை தமிழர் தலைமகன் கன்டு கொள்ளவேயில்லை.
Sutharsan Saravanamuthu: புலிகள் எங்கள் சகோதரர்கள் ஆன இஸ்லாமியருக்கு செய்த கொடுமைகள் கொஞ்சமல்ல, ஆனாலும் புலிகளின் பெரும் படுகொலைகளில் அந்த காத்தன்குடி பள்ளிவாசல் படுகொலை, தொழுகையிலிருந்த அந்த இஸ்லாமியர் மீதான படுகொலை பெரும் ரத்த அடையாளம், அவர்களின் மிக கொடூரமான வெறிக்கு பெரும் சாட்சி. 1983ல் கொழும்பில் தமிழரை சிங்களவன் அடித்து கொன்றதற்கும், 1990ல் புலிகள் இஸ்லாமியரை கொன்று விரட்டி தமிழர் தூய்மை செய்ததற்கும் என்ன வித்தியாசம்? சிங்களவன் யாழ்பாண நூலகத்தை எரித்தற்கும், இந்த புலிகளின் பள்ளிவாசல் கொலைகளுக்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்? மனித தன்மையுள்ளோர் இதனை ஏற்க முடியுமா? இச்சம்பவத்தில் 3 வயது குழந்தையினை புலிகள் கொன்ற கோரமும் உண்டு, 10 வயதிற்குட்பட்ட 30 சிறுவர்கள் சுட்டுகொல்லபட்டனர், இதனை எல்லாம் கடந்துவிட்டா பாலசந்திரனின் படத்தினை பிடித்து போராட முடியும்?..!!!
Mohamed Rafeeq: 1990மே22 எனது தம்பி அக்ரம் ரிழா கொடூரப் புலிகளினால் கடத்தப்பட்டார்.முதல்நாள் புலிகளின் கல்முனை க் கேம்பிலும்,அடுத்தநாள் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்குப்பக்கத்திலிருந்த கேம்பிற்கும் மாற்றப்பட்டார்.எனது தாயார் உம்றாவுக்கு தம்பி அத்னானுடன் சென்றிருந்தார்.நானும் எனது சகோதரிகளும் மட்டக்களப்புக்குச் சென்று நியூட்டன்,கரிகாலன்,கருணா போன்றவர்களின் காலில் விழுந்து கெஞ்சினோம்,கதறினோம்.விசாரித்துவிட்டு அனுப்புவதாகச் சொன்னார்கள்.வாப்பா அப்துல் மஜீத் மௌலவி அவர்கள் அந்தப்பயங்கர சூழலில் ஒவ்வொரு நாளும் மட்டக்களப்புக்கு அலைந்து கொண்டிருந்தார்கள்.அந்தோ! 1990ஜூலை12போன வாப்பா வரவில்லை.குருக்கள்மடத்தில் வைத்து பெண்கள் குழந்தைகள் உட்பட ஹாஜிமாருடன் கடத்தப்பட்ட208 முஸ்லிம்களில் எங்கள் ஆருயிர் வாப்பாவும் ஒருவர்.மக்காவிலிருந்து உம்றாவுடன் ஹஜ்ஜையும் முடித்துக்கொண்டு எனது தம்பி முபாறக் மௌலவி(உலமா கட்சித் தலைவர்)யுடன் தனது மக்கா அனுபவங்களை கணவரிடமும்,பிள்ளைகளிடமும் பகிர்ந்துகொள்ள ஊருக்கு ஓடோடி வந்த அன்புத் தாயிடம் அவரது கணவனையும்,மகனையும் புலிகள் சாப்பிட்டுவிட்ட செய்தியை சொல்வதற்கு நாங்கள் எப்படி மாய்ந்திருப்போம்.கொடூரப்புலிகள் நாசமாகிவிட்டார்கள்.ஆனால் அவர்களுக்காக இன்னும் வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கும் வால்களுக்கும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு முஸ்லீமின் பிரார்த்தனையும் சாவுமணி அடித்துக் கொண்டே இருக்கும்.
Siva Easwaramoorthy: புலிகள் எங்கள் முஸ்லீம் சகோதரர்களுக்கு வடக்கில் செய்த இனச்சுத்திகரிப்பும் கிழக்கில் செய்த படுகொலைகளுக்குமாக சிலுவைகளை நாமும் சுமக்கின்றோம். இந்தக் கொலைகளை நாம் செய்யவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை மௌனமாக பார்த்துக் கொண்டும் இருக்கவில்லை. ஆனாலும் தமிழ் மக்கள் எமக்கு செய்துவிட்டார்கள் என்ற முஸ்லீம் சகோதர்களின் வலிகளுக்கான பாவச்சுமைக்கு நாமும் சிலுவை சுமக்கின்றோம் இது அனுராதபுரத்தில் புலிகளால் கொலை செய்யப்பட்டசிங்கள் மக்களுக்கும் நாம் அரச மரத்தின் கீழ் இருந்து பாவமன்னிப்பு செய்யவும் எம்மை தள்ளியே உள்ளது.