கொழும்பில் துறைமுகத்தை தாக்கச் சென்றவர்கள் தாக்குதல் நடத்தாமல் திரும்பி வந்ததற்காக சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். தண்டனை தாங்கமுடியாமல் அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். தமிழினி இந்த உண்மையைக் கூறியிருக்கிறார். ஆனால் தமிழினிக்கும் தெரியாத பல இரகசிங்கள் புலிகளிடம் உண்டு. புலிகளின் புலனாய்வுத் துறையின் மோசமான நடவடிக்கைகள் புலித் தளபதிகள், உறுப்பினர்கள் எல்லோருக்கும் தெரிவதில்லை. ராஜீவ் கொலை பற்றி புலிகளின் தளபதியாக இருந்த கருணாவுக்கும் தெரிந்திருக்கவில்லை. அது சமபந்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அவர்கள் வெளியில் வரும்போது அந்த உண்மைகளைக் கூறுவார்கள்.
இந்தியப்படையுடன் புலிகள் யுத்தம் செய்தபோது இந்தியப்படையால் பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் அவர்கள் சயனைட் கடிக்காத காரணத்தால் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
தாக்குதலுக்குச் செல்பவர்கள் திரும்பி வரமுடியாது. இதை இப்போது தமிழினி கூறுகிறார். இது எப்போதோ பலருக்குத் தெரிந்த விடயம். ஆனையிறவுத் தாக்குதலுக்குச் சென்றவர்கள் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் திரும்பி வந்தால் பின்னால் நிற்கும் புலிகளால் சுட்டுக் கொல்லப்படுவார்கள். அதனால் எப்படியும் அவர்கள் தக்குதல் செய்து இறந்தேயாகவேண்டும். ஆனையிறவுத் தாக்குதலில் பல நூற்றுக்கணக்கான புலிகள் கொல்லப்பட்டிருந்தார்கள்..
வன்னியில் இறுதி யுத்தத்தின்போது தப்பியோடியவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது நாங்கள் எப்போதோ எழுதிய விடயம். அது தமிழினியின் புத்தகத்தில் இப்போது குறிப்பிடப்பட்டிருக்கிறது.
புலி உறுப்பினரான ஜெயவதனி தப்பி ஓடும்போது புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானார். அவருடைய மூக்கு, ஒரு கண் ,நாசி என்பற்றை அவர் இழந்திருக்கிறார். அவரது கணவர் ஒரு புலி உறுப்பினர். தப்பியோடியவர்களைச் சுட்டுக்கொன்றதும் அவரகள் தப்பியோட அனுமதித்த புலிகளை சுகந்திரபுரத்தில் மரத்தில் கட்டி வைத்து சுட்டுக் கொன்றதையும் தான் கண்ணால் பார்த்ததாகச் சொன்னார்.. தப்பியோடிய தமிழர்கள் கொல்லப்பட்டதையும் காயமடைந்தவர்கள் பஸ்களில் அடைத்துவைக்கப்பட்டு குண்டுவைத்துக் கொல்லப்பட்டதையும் கண்ணால் பார்த்த பல சாட்சிகளுண்டு. பாதிரியார் ஜேம்ஸ் பத்திநாதரே சாட்சி சொல்லுகிறறர்.
போர்க்குற்றத்திற்கு நீதி கேட்பவர்கள் இந்தச் சாட்சிகளைக் கணக்கில் எடுக்கவில்லை. இப்போது தமிழின் எழுதியவுடன் அது திணிக்கப்பட்டது எம்று கதையை மாற்ற முனைகிறார்கள். எப்படித்தான் அவர்கள் மாற்ற முனைந்தாலும் உண்மைகள் நிச்சயம் வெளியில் வந்தே தீரும்.
(Rahu Rahu Kathiravelu)