அமெரிக்காவில் ஆர்எஸ்எஸ்

இந்துத்துவா அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களை கொண்டு பாஜக ஆளும் இந்தியாவிற்கு சாதகமான கொள்கை களை உருவாக்க அமெரிக்க நிர்வாகத்தை நிர்பந்திக் கும் மோசடி பேரக் குழுக்களை (Lobbying groups) உருவாக்கவும், இவைகளில் அமெரிக்காவில் செயல் படும் யூதக் குழுக்களின் வழிகளை பின்பற்றவும் தனது அமைப்பினருக்கு ஆர்எஸ்எஸ் ஏற்கனவே வழிகாட்டி யிருந்தது. அமெரிக்க நிர்வாகத்தின் பல துறைகளில் ஊடுருவி செயல்படவும் தாங்கள் விரும்பும் அரசியல் பொருளாதார கொள்கைகளை உருவாக்கிக்கொள்ள வும் இந்த ‘லாபி’ குழுக்கள் செயல்பட்டன. யூத அமெ ரிக்க மற்றும் இந்து அமெரிக்க தலைமைகளுக்கு இடையே வலுவான அரசியல் தொடர்புகளை வளர்ப்ப தில் யூத குழுக்கள் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வரு கின்றன. இப்புரிதலின் தொடர்ச்சியில் யூத லாபிகள், இந்திய லாபிகளின் உருவாக்கம் மற்றும் வெற்றிக்கு தீவிரமாக ஆதரவளித்தன.

முறைகேடான ‘லாபியிங்’ வேலைகள்

பல்வேறு இனங்களில் அமெரிக்கக் கொள்கை களில் செல்வாக்கு செலுத்தும் இப்படிப்பட்ட லாபிக் குழுக்களுக்கு 2017 மற்றும் 2020-இன் இடைப்பட்ட காலத்திற்கு மட்டும் அதிகபட்ச சராசரியாக தலா ஒரு குழுவிற்கு ரூ.44.98 லட்சம் வரை நரேந்திர மோடியின் அரசு அளித்து வந்துள்ளது. அதேபோல கலிபோர்னி யா மாநிலத்தின் பொதுப் பள்ளி வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் இந்து மதத்தைப் பற்றிய பாடப் பதிவு களில் திருத்தங்களை (இந்தியாவில் பள்ளி பாடப் புத்தகங்களில் வரலாற்றை உல்டா செய்து பாஜக மாநி லங்களில் திருத்தியது போல) கொண்டு வருவதற்கு 2012-2016 காலகட்டத்தில் 1,42,000 டாலர்களை ஹிந்து சுயம்சேவக் சங்கம் செலவழித்தது.

இந்துத்துவாவின் அமெரிக்க நிர்வாக ஊடுருவல்களில் இந்து அமெ ரிக்க லாபியிங் மற்றும் அதன் ஒத்திசைவு வேலை களில் அமெரிக்க நிர்வாகத்தில் காவி ஆதரவு ஆட்கள் இருந்தனர். (அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்க ளும் எச்.எஸ்.எஸ் ஆட்களுமான ராஜாகிருஷ்ண மூர்த்தி, துளசி கப்பாட், ரோஹித்கன்னா உள்பட). இவர்களைப் போன்ற ஆதரவு ஆட்கள் மற்றும் இந்துத் துவா பிருகஸ்பதிகளின் கைங்கர்யத்தால் இந்து சுவயம்சேவக் சங்கம் பல சலுகைகளை அமெரிக்கா வில் பெற்றது. அமெரிக்க சட்டத் தொகுப்பு 26 இன் பிரிவு 501(c)(3) இன் கீழ் எச்.எஸ்.எஸ் இலாப நோக்கற்ற தொண்டு அமைப்பாக அறிவிக்கப்பட்டு வருமான வரியிலிருந்து விலக்கு பெற்றதும் இதில் ஒன்றாகும்.

இதன் காரணமாக அமெரிக்க காவி அமைப்புகளு க்கு அங்கீகாரமும் ஏராளமான நிதியும் குவியத் தொ டங்கியது. வருமான வரி கணக்குகளின்படி (எச்.எஸ். எஸ்.ஆல் காட்டப்பட்ட வருவாய் மட்டும்) 2019 ஆம் ஆண்டில் மட்டும் மொத்த வருவாய் 18,99,282 டாலர். 2001-2019 க்கு இடையில், கிடைக்கக்கூடிய வரி அறிக்கைகளின்படி, அகில இந்திய இயக்கம் (AIM), அமெரிக்காவின் ஏகல் வித்யாலயா அறக்கட்டளை, இந்திய வளர்ச்சி மற்றும் நிவாரண நிதி, பரம் சக்தி பிஒய்பி (PYP) யோகா அறக்கட்டளை, அமெரிக்க விஷ்வ ஹிந்து பரிஷத் (AVHP) மற்றும் சேவா இன்டர் நேஷனல் ஆகிய ஏழு காவி அமைப்புகள் குறைந்த மதிப்பீட்டில் 158.9 மில்லியன் டாலர்களை (ரூ.1,231.6 கோடிகள்) திரட்டி அதில் பெரும்பகுதியை இந்தியாவில் உள்ள இந்துத்துவா குழுக்களுக்கு அனுப்பின.

நவீன பாசிசத்தின் வரலாற்று முரண்

இச்சூழ்நிலைகளின் தொடர்ச்சியில்தான் -அமெ ரிக்க இந்து மற்றும் அமெரிக்க இஸ்ரேலிய- குழுக்கள் இடையில் ஒற்றுமையும் ஒன்றிணைந்து செயல்படும் சூழலும் உருவானது. அமெரிக்க இந்திய தொலை நோக்கு உறவை ஆதரிக்கும் இந்தியா மற்றும் இந்திய புலம்பெயர்ந்தோருக்கான அறக்கட்டளை (Foundation For India And Indian Diaspora Studies FIIDS) என்னும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட அமைப்பு, வட கலிபோர்னியா சிலிகான் நகரில் ஜுலை 2017- இல் இந்திய- இஸ்ரேல் உறவு கள் என்னும் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

அதில் பேசிய யூத கூட்டமைப்பின் இயக்குனர் டயான் ஃபிஷர் இந்தியாவும் இஸ்ரேலும் சிறந்த எதிர் காலத்தை நோக்கி உலகை வழிநடத்தும் என்று கூறி னார். இந்து ஸ்வயம்சேவக் சங்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் சௌமித்ரா கோகலே, இஸ் ரேல்- இந்தியா ஆகிய நாடுகள் மிகவும் பழமையான கலாச்சாரங்கள் கொண்ட ஜனநாயக நாடுகள் என்று உண்மைக்கு புறம்பாக வரலாற்றுக் கூச்சமின்றி கூறி னார்.

அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகளுக்கு ஆதரவான கியூபா-சீனா-பாலஸ்தீனத்திற்கு எதிரான உணர்வு நிலையை அமெரிக்காவில் உருவாக்கும் வேலையை அமெரிக்க யூத- அமெரிக்க இந்துத்துவா சக்திகள் உரு வாக்கி வருவதையும் இதன் தொடர்ச்சியாகவே அமெரிக்கா-இஸ்ரேல்-இடையிலான உறவுகள் ஆழ மாகிக் கொண்டிருப்பதையும் காணமுடியும். இதன் தொலைநோக்கு வளர்ச்சியாக இந்தியா-இஸ்ரேல்-அமெரிக்கா-ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளை உள்ளடக்கிய ‘ஐ2யு2’ அணி எனப்படும் ‘இந்தோ-ஆபிரகாமிக்’ கூட்டணியாகும்.

மத்திய கிழக்கு மேற்காசிய-கிழக்காசிய பிராந்தியங்களுக்கும் இந்த கூட்டணி விரிவடையவிருப்பதாகவும் அதன் இப்போ தைய நகர்வுகள் புலப்படுத்துகின்றன. இக்கூட்டணி உள்மறையில் சீனத்திற்கு எதிரான ‘நாற்கர பாது காப்பு கூட்டணி’ எனப்படும் (குவாட்-QUAD) ஆஸ்தி ரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான தொலைநோக்கு (மலபார் கடற்படை பயிற்சி உள்பட) கூட்டணியின் மற்றொரு பதிப்புதான் என்பதில் சந்தேகமில்லை.

இந்த உறவுகளுக்கிடையே செல்லும் ராஜதந்திர பிணைப்புக் கயிற்றின் ஒரு முனை நாக்பூர் என இத்தரு ணத்தில் உறுதியாக நாம் கூறலாம். நாஜி கோட்பாடு களின்படி, ஜெர்மானியர்களும் பிற வட ஐரோப்பியர்க ளும் “ஆரியர்கள்” – ஒரு உயர்ந்த இனமாகவும், மற்ற அனைத்து தேசிய இனங்களும் தாழ்ந்த இனங்களாக வும் கருதப்பட்டன; யூதர்கள் முற்றிலும் ஆரியர்களின் கொடிய எதிரிகளாகவும் காணப்பட்டனர்.

எனவேதான் 1935-களிலும் அதற்கு பின்பும் ஜெர்மனியில் இனத் தூய்மை (Racial purity) செய்வதற்காக லட்சோப லட்சம் ஐரோப்பிய யூதர்களை ஹிட்லர் படுகொலை செய்தான். மார்க்சிசம், கம்யூனிசம், ஜனநாயகம் போன்ற வார்த்தைகள் மற்றும் அதன் இயக்கங்கள் தேசியவாதத்திற்கு எதிரானவை என்றும், அவை அழிக்கப்பட வேண்டிய ஆபத்தான, இன அடிப்படை யிலான யூத “ஆவியை” பிரதிபலிப்பதாகவும் நாஜிக்கள் கருதினர். கூட்டிக் கழித்துப் பார்த்தால் யூதர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள்தான் தங்களின் தீர்மானகர மான எதிரிகளாக நாஜிகள் கருதினர். ஆர்எஸ்எஸ்- இன் பிதாமகர்களான கே.பி. ஹெட்கேவார்,

பி.எஸ். மூஞ்சே ஆகியோர் இனத்தூய்மை மற்றும் ஆரியத்தின் பெருமை பேசும் உயர் இன வெறி கொண்ட ஹிட்லரை தங்களது தத்துவார்த்த முன்மாதிரியாக கண்ட னர். ஆனால் அவர்களின் இன்றைய வாரிசுகள் அமெரிக்க யூதக் குழுக்களோடு இணைந்து அமெரிக்க நிழலில் செயல்படுவது வரலாற்றின் விநோதம் என்ப தோடு சர்வதேச அமைதியின்மையை உருவாக்கும் புதிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. சீனத்திற்கு எதிராக தனது சர்வ தேச நாட்டாண்மையை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள ஜீவ மரண போராட்டம் நடத்தும் அமெரிக்காவுடனும் அதன் நெருங்கிய முதல் கூட்டாளியான இஸ்ரேலுடனும் ஆர்எஸ்எஸ் முழுமையாக கைகோர்த் துள்ளது. இதன் தொடர்ச்சியில்தான் அமெரிக்க ஜனாதி பதித் தேர்தல்களில் இந்து யூத அமைப்புகளின் பங்களிப்புகள் இருந்தன.

இந்துத்துவாவின் தந்திர வியூகம்

எச்.எஸ்.எஸ்சின் முக்கிய சூழ்ச்சிகளில் முதன்மை யாக இந்துக்கள் உள்பட அமெரிக்க மக்களை மனத ளவில் கட்டிப்போடும் கலாச்சாரம், பண்பாடு, மதம் பற்றிய இந்துத்துவா சூழ்ச்சி அரசியலின் முதல் அத்தி யாயக் கூட்டங்களை தொடர்ந்து நடத்துவது. சூரிய நமஸ்காரம், யோகா, தியானம் பயிற்சிகளை இந்துத் துவா கண்ணோட்டத்துடன் நடத்துவது, இலவச இந்திய முறை உணவு விநியோகம் மற்றும் சிறு சிறு தொண்டூழி யங்களின் மூலம் இந்துத்துவா ஒரு வாழ்வியல் முறை என்றும் எச்.எஸ்.எஸ் நலதர்ம வாழ்விற்கான தொண்டு நிறுவனமே என்னும் மாய்மால தோற்றத்தை உரு வாக்கிக் கொண்டு தனது கிளைகளின் (ஷாகாஸ்) மூலம் அமெரிக்காவில் தனது கால்களை பரப்பி, நிமிர முயற்சித்து வருகிறது.

பிரிட்டன், ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளில் இந்து சுயம்சேவக் சங் தனது கிளைகளை கொண்டிருந்தாலும் அமெ ரிக்காவையே மிக முக்கிய தளமாக கொண்டி ருப்பதுதான் மனிதநேய பத்திரிகையாளர்கள், மனித உரிமை போராளிகள், கல்வியாளர்கள் போன்றோரை அச்சத்துடன் கவனிக்க வைத்துள்ளது. ஆனால் அதே வேளையில் ஆர்எஸ்எஸ் , எச்எஸ்எஸ்-க்கு எதிராக வலிமையான எதிர்ப்புகள் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சிலும் உருவாகி வருகின்றன.

தொடரும்….

-Theekkathir