(Maniam Shanmugam)

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்ட மைப்பு (ஆசியான்) உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில், அமெரிக்க டாலர், யூரோ, யென் மற்றும் பவுண்டு ஆகிய நாணயங்களை நிதிப் பரிமாற்றத்திற்கு பயன்படுத்திட வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். ஆசியான் அமைப்பில் புருனேய், கம்போடி யா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளன.