அமெரிக்க தேர்தல் 2024

உலக யுத்தம் அது மூன்றாம் உலகப் போராக மாறுவதற்குரிய யுத்த முனைகளை பிரதானமாக இரு இடங்களிலும்…. அது ரஸ்யா, உக்ரேன்; இஸ்ரேல் அதனை ஒட்டிய அரேபிய நாடுகள் ஈரான், சிரியா உட்பட என்றாக

வேறு இரண்டு தளங்களில்…. அது சீனாவை மையப்படுத்திய நாடுகள் அந்தக் கடற் பகுதி நாடுகள், மேற்கு ஆபிரிக் நாடுகள் அது சகாரா பாலைவன நாடுகள் என்றாக… கொதி நிலையையும் கொண்டிருக்கும் சூழலில்….

இந்த யுத்தங்களில் நேரடியாக அமெரிக்கா ஈடுபடாவிட்டாலும் அவற்றின் பின்புலமாக அமெரிக்கா இருக்கின்றது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் உண்மை.

அது மத்திய தரைக் கடற்பகுதியில் தனது உற்ற நண்பனான இஸ்ரேலின் மேலாதிக்கத்தை தொடர்ந்தும் பேணுவது என்பதாக ஒன்றும்….

மற்றது தனக்கு எதிரணியாக செயற்பாட்டைக் கொண்டிருக்கும் ரஸ்யாவின் பலத்தைக் குறைப்பது அல்லது முது எலும்பை கோப்சேவ் காலத்திற்கு பின்னர் இன்னும் ஒரு முறை உடைத்தல் என்பதாக இரு யுத்த களங்கள் இருக்கும் சூழலில்….

இந்த இரு யுத்தங்களும் தொடர வேண்டுமா…? அல்லது நிறுத்தப்பட வேண்டுமா என்பதற்கு இந்த அமெரிக்க தேர்தல் முடிவுகள் தீர்மானத்தை எடுப்பதாக அமையலாம் என்று பலராலும் நம்பப்படும் சூழலில்….

குடியரசுக் கட்சியின்(Republican Party) ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்றம்(Donald Trump) தனது ஜனாதிபதியானால் தனது செயற்பாடுகளின் ஊடாக யுத்தத்தை நிறுத்தி ஆனால் மேற் கூறிய இரு விடயங்களையும் தொடருவார் என்று நம்பப்படும் ஒரு நிலை.

மறு வழமாக ஜனநாயகக் கட்சியின்(Democratic Party) ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிஸ்(Kamala Harris) யுத்தத்தை தொடர்ந்து மேற்கூறிய இரண்டையும் தொடருவார் என்பதாக குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என்பவற்றின் செயற்பாபாடுகளை அவதானிப்பவர் இம்முறை நம்புகின்றனர்.

ஆனால் யுத்த்திற்கான தளபாடங்களை செய்பவர்கள், றிறுவனங்கள், அது சார்ந்த நாடுகள் தமது வருவாயை தொடர்ந்தும் இதே முறையில் தொடர விரும்பும் கருத்தியல் விருப்புத்தான் இப்போது அதிகம் மேலோங்கி இருப்பதாக உணரப்படுகின்றது.

அதனால் தொடர்ந்தும் யுத்த தளபாடங்களை உற்பத்தி செய்தல் அல்லது யுத்தத்தினால் ஏற்பட்ட இடிபாடுகளை புனருத்தாரணம் செய்தல் என்பதாக கட்டுமானச் செயற்பாடுகளின் மூலம் பணம் ஈட்டுதல் என்றாகவே இவை சார்ந்த நிறுவனங்களின் சிந்தனை ஓடுகின்றது.

இதில் எதில் அதிக வருவாய் தரும் என்பதை அமெரிக்காவின் ஆட்சியில் அதிக செல்வாக்கை செலுத்தும் ஆளும் வர்க்கம் இதற்குள் இருக்கும் யூதக் கரங்கள் தீர்மானங்கள் இந்தத் தேர்தலின் வெற்றியைத் தீர்மானிக்கப் போகின்றது.

வெறுப்பு அரசிலை அமெரிக்காவின் தீவிர வெள்ளையின வலதுசாரிகளின் விருப்பத்திற்கு தீனி போட்டு தேர்தலில் வெல்வதே இலகுவானது என்பதான செயற்பாடுகளை ட்றம் கையில் எடுத்துள்ளார்.

இதற்கு அவர் எந்த எல்லைக்கும் மனித நாகரீகமற்ற சொல்லாடல்களையும் பாவிப்பதை தயங்கமாட்டார் என்ற தனி மனித சுபாபங்கள் தொடரும் நிலையை அவதானிக்க முடிகின்றது.

அமெரிக்காவில் குடியெற்றவாசிகள் மீதான வெறுப்புணர்வை சிறப்பாக ஏனைய தென், மத்திய அமெரிக்க, இஸ்லாமிய நாடுகளின் பிரஜைகள் மீதான வன்மமாக காட்டி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் நிலையில்…..

இதற்கு எதிரான நிலையில் நின்றல் என்பதாக கமலா ஹரிசின் ஜனநாகக் கட்சி தனது தேர்தல் களத்தை நகர்த்துகின்றது.

அமெரிக்க ஆண் மேலாதிக்க கனவான் சிந்தனை ஒரு பெண்ணை அமெரிக்க ஜனாதிபதியாக அனுமதிக்குமா என்பதால்தான் முன்னைய தேர்தல் ஒன்றில் ஹிலாரி கிளிங்ரன்(Hillary Clinton) தோற்கடித்த மக்கள் கமலா ஹரிசை இதன் காரணமாக தோற்கடிப்பதற்கு அப்பால் இந்திய கறுப்பினக் கலவை பெண்ணை தமது ஜனாதிபதியாக ஏற்பார்களா என்பது இன்னமும் கேள்வியாகவே இருக்கின்றது.

ஆனாலும் உலகம் முழுவதும் இந்த பாகுபடுத்திப் பார்த்தல் என்ற மனப்பான்மையில் ஏற்பட்ட மாற்றமாக…? ஓபமாவை அமெரிக்க ஜனாதிபதியாகவும் சுனக்தை(Rishi Sunak) பிரித்தானியாவின் பிரதமராகவும் ஏற்ற மன மாற்ற நிலையை இங்கு நாம் புறம் தள்ள முடியாது.

50 மாநிலங்கள் அது தரையால் முழுமையாக இணைக்கப்பட்ட அமெரிக்க நாடுகள், அதற்கு அருகாக உள்ள சில தீவுகள் என்பனவற்றில் இருந்து மொத்தம் 538 உறுப்பினர்கள் மக்கள் அவை என்றான காங்கிரஸ் அவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படுபவர்கள்.

இதனால் உருவாக்கப்படும் சபை மக்கள் பிரிநிதிகள் சபை… காங்கிரஸ் என்று மக்களால் அதிகம் அறியப்படும் சபையாகும்.

இதற்கு அடுத்தாக இந்த தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களால் அது சார்ந்த கட்சிகளினால் தெரிவு செய்யப்படும் மாநிலம் ஒன்றிற்கு தலா இருவர் என்றாக மொத்தம் நூறு பிரிநிதிகளைக் கொண்ட செனர்ரர் சபை என்று பொதுவாக அறியப்பட்ட நூறு உறுப்பினர்கள் சபை.

மாநிலம் ஒன்றிற்கு இருவர் என்பது அது சிறிய மாநிலமாக இருந்தாலும் பெரிய மாநிலமாக இருந்தாலும் மக்கள் சனத் தொகைக்கு அப்பால் மாநிலங்களை சமமாக மதிக்கும் கருதும் இரண்டு என்ற சம அளவிலான பிரதிநிதித்துவப் பார்வை இங்குள்ளது சிறப்பு.

ஆனால் காங்கிரஸ் அவைக்கான தெரிவில் மாநிலங்களின் சனத்தொகை அடிப்படையில்தான் பிரநிதித்துவம் எண்ணிக்கை கொடுக்கப்பட்டு அந்த மொத்தமான 538 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

பிரதானமான இரண்டு கட்சிகள் அது ஜனநாயகக் கட்சி குடியரசுக் கட்சி என்று தமது கட்சிகுள் நடைபெறும் ஜனநாயகப் போட்டியின் அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் இது தேர்தலின் முன்பே நடைபெறுவதால் காங்கிரஸ் அவையின் பிரதிநிதிகளால் அமையும் 538 உறுப்பினர்களில் அதிக 270 இற்கு மேலான உறுப்பினர்களை பெறும் கட்சியின் தலைவர் நாட்டின் தலைவராக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் தேர்தல் முறமைகள்.

இந்த கட்சியின் தேர்தல் தலைவராக தெரிவு செய்வதற்கான நடைமுறையே ஒரு வகையில் மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதித் தேர்தல் அளவிற்கு பரபரப்பாகும் நிகழ்வாக அமையும்.

இங்கு குடும்ப அரசியல் இல்லை…? என்றாலும் பணம் அற்றவர்கள் யாரும் தேர்தலில் அதிகம் நிற்காத மேற்குல எழுதப்படாத அமைப்பு முறைகள் இங்குள்ளது தெள்ளத் தெளிவானது.

இவை அனைத்தையும் உள்ளக்கியதே அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் ஆகும்.

அமெரிக்காவின் கிழக்கு(அத்திலாந்து சமுத்திரக் கரை) மேற்கு(பசுபிக் சமுத்திரக் கரை) மாநிலங்களில் தான் முறையே அதிகம் நிதி நிறுவனங்கள்(Financial State) இலத்திரனியல் நிறுவனங்கள்(Silicon Valley) என்றான பணக்காரக் நிறுவனங்கள் அதிகம் உள்ளன.

இந்தப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக ஜனநாயகக் கட்சி தனது ஆதரவுத் தளத்தை வைத்திருக்கின்றது.

இது மொத்தமாக குறைந்தது 18 அளவிலான மாநிலங்களை(Red state) உடைய 218 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் மாநிலங்கள்இந்த அமெரிக்க அளவிலும் உலக அளவிலும் அதிக செல்வந்த நிறுவனங்களின் ஆதரவு எப்போதும் ஜனநாயகக் கட்சியிற்குத்தான்.

இந்த நிறுவனங்களை வளர்த்துவிட்டவர்களும் இவர்கள் தான்.

ஆனால் ஒரு காலத்தில் 1970 களுக்கு முன்பு அமெரிக்காவின் பொருளாதாரத்தை அதிகம் தாங்கிப் பிடித்த தொழிற்சாலைகள், வேளாண்மை என்பனவற்றை அதிகமாக கொண்ட மேற்குகரையின் நடுப்பகுதியில் அமைந்திருந்கும் மாநிலங்களில் குடியரசுக் கட்சியிற்கே அறுதி ஆதரவாக இருக்கும் நிலமை இன்றும் தொடர்கின்றது.

இது மொத்தமாக குறைந்தது 10 மாநிலங்களாகவும்(Blue States) அவற்றின் மொத்த காங்கிரஸ் அவை உறுப்பினர்கள் 218 ஐ விடக் குறைவாகவும் இருக்கும்.

10 வரையில் உள்ள மாநிலங்கள் இந்த இரு கட்சியிற்கும் இடையே ஊசலாடும(Swing states or Purple states) மாநிலங்களாக எப்போதும் இருப்பது வழக்கம்.

இவைதான் அமெரிக்காவின் தேர்தலில் எந்த கட்சி வெல்லும் இதன் அடிப்பமையிலான ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் என்பதையும் தீர்மானிக்கும்.

அமெரிக்க பொருளாதாரம் தேசிய உற்பத்தி தொழிற்சாலை நடவடிக்கை எனறாக 1970 வரை இருந்த நிலமையை மாற்றி அமைத்து கிசிங்கரின்(Henry Kissinger) வரலாற்று புகழ் பெற்ற 1971 இல் சீனாவிற்கான விஜயமும்…அதனைத் தொடர்ந்து அமெரிக்க நிறுவனங்கள் பெரும் அளவில் தெற்காசிய நாடுகளுக்கு குறைந்த ஊதியத்தில் தமது கம்பனிகளை நடாத்தி அதிக இலாபம் ஈட்டலாம் என்ற நகர்விற்கு இடம் பெயர வைத்தத்து.

இதனால் அமெரிக்க பொருளாதாரம் இந்த நிறுவனங்களின் அதிகம் 70 விகிதம் வரை இன்று தங்கியிருக்கும் அளவிற்காக உயர்ந்து இன்று அமெரிக்க அரசை அதிகம் ஆட்டிப் படைக்கும் நிலையிற்கு இந்த கம்பனிகள் மாறியும் உள்ளன.

உள்ளுர் தொழிற்சாலைகள் நலிவடைய வேளாண்மையும் அவ்வாறே குறைவடைய இந்த மேற்கு கரையின் நடுப்பகுதி மக்கள் வறுமையிற்கு தள்ளப்பட்டனர்.

கணிசமானோர் வீதிகளின் பிச்சை எடுக்கும் நிலைக்கு அது இராணுவத்தில் முன்பு வேலை செய்தவர்கள் வரை சென்றும் உள்ளது.

தமது உள்ளுர் தயாரிப்பு நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு சென்றதினால் வேலை வாய்ப்புகளை உள்ளுரில் இழந்து தமது நாட்டிற்குள் கஸ்டமான வாழ்க்கை நிலைக்கு மாறியும் உள்ளனர்.

இவர்களிடையே தமது வெள்ளையர் அல்லாதவர்களால் எமக்கு இந்த நிலமை ஏற்பட்டது என்பதாக வெள்ளைப் பேரினவாதத்தை ஊட்டி அவர்களின் வாக்குகளை தமதாக்கி தொடர்ந்து வைத்திருக்கும் குடியரசுக் கட்சியின் அரசியல் என்பதாக நகரும் நிலமைகள்.

பணக்கார மாநிலங்களில் இருக்கும் நிறுவனங்கள் இந்த தேர்தலில் எற்கனவே சொன்ன மாதிரி தேர்தல் நிதியாக($997.2 million) ஜனநாயகக் கட்சியிற்கு குடியரவுக் கட்சியிற்கு வறிய மாநிலங்களில் இருந்து வரும் நிதியை($388 million) விட மூன்று மடங்கு வழங்கி இருக்கின்றனர்.

இதனை கமலா ஹரிசின் ஜனநாயகக் கட்சியினர் மக்களிடம் தமக்கே அதிக ஆதரவு மக்களிம் இருப்பதாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியும் இருக்கின்றது.

மாநிலங்களுக்கான தேர்தலில் ஒரு மாநிலத்தில் அதிக வாக்குகளைப் பெறுபவர் விகிதாசார அடிப்படையில் பிரிநிதிகளை தெரிவு செய்வதற்கு பதிலாக அந்த மாநிலத்திற்காக முழுமையான உறுப்பினர்களையும் அந்த கட்சியின் சார்பில் பெறுவதாக அமையும் விகிதாரசாப் பிரநிதித்துவத்தை முற்று முழுதாக மறுதலிக்கும் பெரும்பான்மை வாதம் வாக்களார்களின் தேர்தல் ஜனநாயகத்திற்கு முழுவதும் முரணனான செயற்பாடாகவும் உணரப்படுகின்றது.

இவ்வாறன சூழலில் நடைபெற இருக்கும் தேர்தல் உலகம் முன்னோக்கி நகர்வதற்கான வழி வகையை தடையின்றி செயற்படுவதற்கு ஏதுவாக அமையுமா என்பது கேள்விகளாக இன்று இன்று நிற்கின்றது.

ட்றம் பின் முதலாவது ஜனாதிபதித் தவணை பராக் ஒபமாவின் ஆட்சியில் எற்பட்ட அமெரிக்காவின் ஸ்திரத் தன்மை பொருளாதார நிலமைகளின் தொடர்ச்சியாகவும் கொரானா என்றான மற்றய விடயங்களை பின் தள்ளிய பெருந்தொற்று என்பதான ஒரு முக நகர்ச்சியுடன் நகர்ந்த படியால் அவரின் முழு அளவிலான உலக அரசியலை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பை அதிகம் ஏற்படுத்தவில்லை.

ஆனால் அமெரிக்க நாட்டின் நலன்கள்தான் மற்றய எதனையும் விட முதன்மையானது என்பதாக கொரனாவிற்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வழங்களை சுவீகரித்ததில் இருந்து அறிய முடிந்தது.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின்(Joe Biden) கட்சியின் செயற்பாட்டை முழு ஆட்சிக்காலத்திலும் யுத்தக் களங்களை திறப்பதில் உள்ள ஆர்வம் அதிகம் காணப்பட்டதாகவும் உணர முடிந்தது.

ட்றம்பின் வெற்றி பலரின் எதிர்பார்ப்பு போல் புட்டின் உடனான நட்பால்…? நிறுத்தப்படும் என்பதாக அமைவதை விட நேட்டோ என்று 70 வீத பணத்தைக் கொண்டும் அமெரிக்க செயற்பாட்டை நிறுத்தி ஐரோப்பாவின் நலனிற்கான நான் ஏன் பணத்தை கொட்ட வேண்டும் மாறாக நேட்டோ எல்லோரும் சமமாக காசு கொடுக்கவேண்டும் என்பதாக கட்டளை இட்டுவதாக நகரலாம்.

கூடவே செலன்ஸகியை தொ(ல்)லைபேசியில் அழைத்து நீ தனியாக போரிடு என்பதாக கூறி போரை முடிவிற்கு கொண்டு வர முயலுவதாக அமையும்.

ஆனால் மத்திய கிழக்கிற்கு தீர்வாக..? மேற்கு கரையையும் சேர்த்து இஸ்ரேல் ஆக்குங்கள் என்பதாக இஸ்ரேலுக்கு சமிக்கை காட்டும் செயற்பாடாகவே அமையலாம்.

யாரிலும் தங்கியராத சுய சார்புப் பொருளாதாரம் என்றாக மூன்றாம் உலக நாடுகளிடையே ஏற்படும் அணி சேராச் செயற்பாடுகள் வலுப் பெற்று அவற்றிற்கிடையேன இணைந்த செயற்பாடுகள் உலகம் முன்னோக்கி நகர ஆவன செய்வதற்கு அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள் சாதகங்களை ஏற்படுத்தினால் மக்கள் யாவரும் மகிழ்ந்தே இருப்பர்.

More about US State Stature:

அமெரிக்காவில் 50 மாகாணங்கள் இருக்கின்றன. ஒன்றிய அரசின் சட்டங்கள் செய்வது இரண்டு அவைகள். முதலாவது, உறுப்பினர் அவை (u;ouse of Representatives) அல்லது கீழவை. இதில் ஒவ்வொரு மாகாணத்துக்கும் அதன் மக்கள் தொகைக்கேற்ப உறுப்பினர்கள் இருப்பார்கள். நாடு முழுமைக்கும் மொத்தம் 435 உறுப்பினர்கள். இரண்டாவது, செனட் அல்லது மேலவை. இதில் ஒவ்வொரு மாகாணத்துக்கும் தலா இரண்டு உறுப்பினர்கள். மாகாணத்தின் பரப்போ மக்கள்தொகையோ பிரச்சினையில்லை. கலிபோர்னியாவுக்கு இரண்டு உறுப்பினர்கள். அலெஸ்காவுக்கும் இரண்டு உறுப்பினர்கள். இப்படியாக, 50 மாகாணங்களுக்கு 100 உறுப்பினர்கள்.இவ்விரண்டு அவைகளில் இடம்பெறும் உறுப்பினர் எண்ணிக்கையின் அடிப்படையில் இரண்டுபிரதானக் கட்சிகளும் மேற்குறிப்பிட்ட தேர்வர் குழுவுக்கு உறுப்பினர்களை நியமிப்பார்கள்.தேர்வர் குழுவில் 538 உறுப்பினர்கள் இருப்பார்கள். இதில் 270 உறுப்பினர்களின் வாக்குகளைப் பெறுபவர் ஜனாதிபதி ஆவார். இந்தத் தேர்வர் குழு வாக்குகளை வேட்பாளர்கள் எவ்விதம் பெறுகின்றனர்? இதில்தான் விநோதம்.ஐக்கிய அமெரிக்காவின் கூட்டாட்சி அரசாங்கம் (U.S Fedaral Governament)அல்லது யு.எஸ். அரசாங்கம்) என்பது அமெரிக்காவின் பொதுவான அரசாங்கமாகும், இது முதன்மையாக வட அமெரிக்காவில் அமைந்துள்ள ஒரு கூட்டாட்சி குடியரசு ஆகும், இதில் 50 மாநிலங்கள், ஐந்து பெரிய சுய-ஆளும் பிரதேசங்கள், பல தீவு உடைமைகள் உள்ளன. மற்றும் வாஷிங்டன், டி.சி.யின் தேசிய மாவட்டம் (தேசிய தலைநகரம்), அங்கு மத்திய அரசாங்கத்தின் பெரும்பான்மையான மக்கள் உள்ளனர்.ஐக்கிய அமெரிக்கா அரசாங்கம் மூன்று தனித்தனி கிளைகளைக் கொண்டுள்ளதுசட்டமியற்றுதல், நிறைவேற்று மற்றும் நீதித்துறை, அதன் அதிகாரங்கள் முறையே காங்கிரஸ், ஜனாதிபதி மற்றும் பெடரல் நீதிமன்றங்களுக்கு அமெரிக்க அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ளன.இந்த கிளைகளின் அதிகாரங்களும் கடமைகளும் காங்கிரஸின் செயல்களால் மேலும் வரையறுக்கப்படுகின்றன, இதில் நிர்வாகத் துறைகள் மற்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு கீழ்ப்பட்ட நீதிமன்றங்களை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.கூட்டாட்சி அதிகாரப் பிரிவில், மத்திய அரசு அந்தந்த பிரதேசங்களில் உள்ள 50 மாநிலங்களில் ஒவ்வொன்றுடனும் இறையாண்மையைப் பகிர்ந்து கொள்கிறது. அமெரிக்க சட்டம் பூர்வீக பழங்குடியினரை இறையாண்மை அதிகாரங்களைக் கொண்டிருப்பதாக அங்கீகரிக்கிறது, அதே நேரத்தில் கூட்டாட்சி அதிகார வரம்பிற்கு உட்பட்டது