மீண்டும் ஆட்சியில் பாஜக தலமையிலான கூட்டமைப்பு ஆட்சியைப் பிடித்தாலும் பாஜக இற்கு தனிப் பெரும்பான்மை இம் முறை கிடைக்கவில்லை.
அதன் கூட்டணிக் கட்சிகளின் தயவின்றி ஆட்சியை அமைக்க முடியாது தொடர முடியாது
அதனால்தான் பாஜக அரசின் ஏதேச்சேகாரமான செயற்பாட்டிற்கு மூக்கணாங்கயிறு போடப்பட்டுள்ளதாக சொல்லிகின்றேன்.
பாஜக ஆட்சியை அமைப்பதற்கு ஆட்சியைத் தொடருவதற்கு தெலுங்கு தேசம் சந்திரபாபு நாயுடு இன் ஆதரவும் பீகார் மாநிலம் நிதிகுமாரின் பங்களிப்பு முக்கியமாக தேவை.
இவர்கள் இருவரது கடந்த காலங்களினான அரசியல் செயற்பாடு அமைய இருக்கும் பாஜக அரசின் ஆயுட் காலத்தை எப்போதும் கேள்விக்குறியாக்கிக் கொண்டே இருக்கும்
இன்னமும் இந்தி மொழி பேசும் வடமாநிலங்களில் இந்துதுவா கோட்பாட்டை இந்துகளின் கோட்பாடாக நம்பும் மக்கள் பெருவாரியாக பாஜகவை ஆதரித்தாலும் இந்தியாவின் ஆட்சியைத் தீர்மானிக்கும் மாநிலம் என்று பலராலும் எதிர்வு கூறப்படும் உத்தரப் பிரதேசத்தில் பெருமளவிலான வீழ்ச்சியை கண்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணி இங்கு பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியுள்ளது இங்கு கவனத்தைப் பெறுகின்றது
அதுவும் இராமர் ஒருவரையே தெய்வமாக பூசிக்கும் அயோத்தியில் அவசரம் அசவசரமாக கோவில் கட்டி திறப்பு விழா செய்த தொகுதியில் பாஜக இன் தோல்வியும் மோடியின் வாரணாசி தொகுயில் அவர் வென்று இருந்தாலும் அவருக்கு கிடைத்த வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சி என்பன மக்கள் பாஜகாவின் வெறுப்பு அரசியலை விரும்பவில்லை என்பதை எடுது;துக் காட்டி நிற்கின்றன.
அரச இயந்திரங்கள் அது தேர்தல் ஆணையம் ஈறாக தேர்தலில் நியாயமாக செயற்படவில்லை என்ற சமான்ய மக்களின் குற்றச் சாட்டுக்கள் பாஜக இன் இந்திய ஜனநாயகத்தின் மீது பல கேள்விகளை எழுப்பியும் உள்ளது
வேலை வாய்ப்பு பொருளாதார மேம்பாடு எல்லா மக்களையும் சமமாக பாவிக்கும் சிந்தனை சிறுபான்மையினரை இழித்துப் பேசும் செயற்பாடுகளை மக்கள் அதிக கவனத்தில் எடுத்திருப்பதாக இந்த தேர்தல் முடிவுகள் அமைந்திருப்பது இந்திய ஜனநாயகத்தில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது
பாஜக இற்கு எதிராக காங்கிரஸ் ஏனைய கட்சிகளுடன் இணைந்து அமைத்த இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் வெற்றியைப் பெறாவிட்டாலும் பாஜக கூட்டமைப்பிற்கு அண்மையாக தனது வெற்றிகளை நிறுவி உள்ளது.
இதில் குறிப்பாக தென் மாநிலங்கள் மேற்கு வங்காளம் எத்தரப் பிரதேசம் பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் மகாராட்சாவில் அதன் வெற்றி மிகச் சிறப்பாக இருந்தன
தமிழ் நாட்டில் முக ஸ்டாலின் தலமையிலான திமுகவின் மக்கள் நலன் திட்டங்கள் சமூக நீதி என்றாக கம்யூனிஸ்ட்டுக்களையும் ஏனைய ஜனநாயக சமூக நீதிக் கட்சிகளையும் காங்கிரசுடன் இணைத்து சந்தித்த தேர்தல் தமிழ்நாடு பாண்டிசேரி என்பதாக அனைத்து தொகுதிகளிலும் தனது வெற்றியை நிறுவி உள்ளது.
இது இந்த கூட்டணிக்கும் அவர்கள் ஆட்சிகும் மக்கள் கொடுத்த அங்கீகாரமாக பார்க்கப்படுகின்றது
இங்கு திமுக இன் பிரதான எதிரணியான அதிமுக கடந்த ஆட்சியில் பாஜவுடன் எற்படுத்திக் கொண்ட கூட்டமைப்பினால் ஏற்பட்ட மக்களின் வெறுப்பு இன்னும் குறைந்தபாடில்லை. அதனால்தான் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றியைப் பெறவில்லை.
இவர்களுடன் ஏதிர்பார்க்கப்பட்டது போல் பாஜக உம் ஒரு தொகுதியில் கூட வெற்றியிற்கு அண்மையாக வர முடியவில்லை
உலகின் அதிக சனத் தொகையுள்ள பல் தேசிய இனங்கள் வாழும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் அரசியல் அமைப்பு காக்கப்படுவதும் அது பின்பற்றப்படுவதும் ஜனநாயகத்தை தாம் விரும்பிவாறு வரையறுத்துக் கொண்டு செயற்படும் ஏதேச்சேகாரம் உடைக்கப்படுவது உலகின் இருப்பிற்கும் ஏன் இலங்கை மக்களின் நலன்களுக்கும் அவசியமாகின்றது.
இனி வரும் காலங்களில் இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் நாம் ஜனநாயகத்தை மீட்டு மக்களுக்கு ஆட்சியை நிறுவும் அரசை அமைப்பதற்கான வாக்குகளை செலுத்த இந்திய தேர்தலில் இருந்து சில பாடங்களை நாமும் கற்போம்