இரட்டை நிலைப்பாடு

அதனைக் கண்டுபிடித்தது அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ( CIA) . பின்னர் ஐந்து நாடுகளுக்கிடையேயான புலனாய்வு ஒத்துழைப்புக்( five eyes intelligence alliance) கூட்டமைப்பு மூலம் கனடா புலனாய்வு அமைப்புக்குத் தெரிய வர, அதன் பின் கனடா இச் செய்தியை வெளியிட முரண்பாடு முற்றியது. இதில் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படவில்லை.

இதே காலப்பகுதியில் உண்மையிலேயே இந்தியாவின் இறையாண்மையினைப் பாதிக்கும் ஒரு செயல் நடைபெற்றுள்ளது.

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தினைச் சேர்ந்த மூன்று விளையாட்டு வீரர்களுக்குச் சீனா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான நுழைவிசைவினை (Visa) மறுத்துள்ளது. அதற்குச் சீனா சொன்ன காரணம், அருணாச்சலப் பிரதேசம் எங்களுடைய பகுதி .

சில நாள்களின் முன் அருணாச்சலப் பிரதேசத்தினைத் தனது பகுதியாக அறிவித்து, வரைபடத்தினைக் கூட சீனா அதிகாரமுறையில் அறிவித்திருந்தது. அறிவிப்புகளோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பகுதிகளில் தொடர்ந்து ஊடுருவி, அங்கு கட்டுமானங்களையும் அமைத்து வருகின்றது. இத்தகைய சீனாவின் அடாவடிக்கு எதிராக இந்திய ஒன்றிய அரசு சிறு முனகல்களுடன் நிறுத்திக் கொள்கின்றது. கனடாவுடன் காட்டும் தீவிரத்தினை இங்கு காணவில்லை. வட இந்திய ஊடகங்களும் சீனா பற்றிப் பெரிதாக எதுவும் கூச்சலீடுவதில்லை.

ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?

சீன இந்திய வணிகத்தில் நன்மையடைவது ( இந்தியாவின் பக்கத்திலிருந்து) பெரும்பாலும் குயராத் பனியா பெரு முதலாளிகளே! இவர்களே பார’தீய’ கட்சியின் தேர்தல் முறி ( electoral bond) கொடையாளர்கள்.

” சோழியன் குடுமி சும்மாடு ஆகாது”
கனடாவைப் பகைப்பது போலச் சீனாவைப் பகைக்க முடியாது.