எமர்ஜென்சியை அமல்படுத்தி மிசா சட்டத்தை முடுக்கிவிட்டது திரு. ராகுலின் பாட்டியான திருமதி. இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி.!
1976ல் திமுக ஆட்சியை கலைத்தது திரு. ராகுலின் பாட்டியான திருமதி. இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி.!
மிசா சட்டத்தில் திரு. ஸ்டாலினை கைது செய்தது, திரு. ராகுலின் பாட்டியான திருமதி. இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியால் நடைபெற்ற குடியரசுத் தலைவர் ஆட்சி.!
1991ல் திமுக ஆட்சியை கலைத்தது திரு. ராகுலின் தந்தை திரு. ராஜீவின் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு இருந்த திரு. சந்திரசேகர் தலைமையிலான இந்திய அரசு.!
1998ல் செல்வி ஜெயலலிதாவின் நெருக்கடி இருந்தும், திமுக அரசை கலைக்க முடியாது என்று கூறியது திரு. அட்டல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு.!
மேலே சொன்ன எந்த தகவலும் பொய்யில்லை.!
ஆனால் கட்சிதான் காங்கிரஸ், தலைவர்தான் திருமதி. இந்திரா காந்தி, திரு. ராஜீவ் காந்தியே ஒழிய…,
நடைமுறைப்படுத்தியவர்கள்..,
இன்று ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று கூறும் இதே வலதுசாரிகள்தான்.!
குஜராத் முதலமைச்சராக இருந்த வரையிலும் மாநில அதிகாரங்களை ஆதரித்து பேசிய திரு. நரேந்திர தாமோதரதாஸ் அவர்கள், இன்று ஒற்றை அதிகாரத்தை உறுதி செய்ய துடிக்கிறார் என்றால்…,
தலைமையும், கட்சியும் வேறு வேறே ஒழிய, நடைமுறைப்படுத்த துடிப்பவர்கள் எல்லாம் ஒற்றை சிந்தனை உள்ள வலதுசாரிகளே.!
தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. முக. ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை ஆதரிக்க காரணம்…,
எந்த கட்சியின் மூலமாக மாநில அதிகாரங்களை வலுவிழக்க செய்தார்களோ, அதே கட்சியின் தலைவர் இன்று மாநில அதிகாரங்களை ஆதரித்து பேசுகிறார் என்பதுதான்.!
ஜனசங்கத்தையும் இணைத்து திரு. ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் காங்கிரஸின் எமர்ஜென்சியை எதிர்த்து, ஒரு கூட்டணியை உருவாக்கினார் கலைஞர் அவர்கள்.
இன்று அந்த ஜனசங்கதத்தின் நீட்சியான பாஜக அரசின்..,
மாநில உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்க்க காங்கிரஸ் தலைமையிலான ஒரு கூட்டணியை உருவாக்குகிறார்..,
தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. முக. ஸ்டாலின் அவர்கள்.!
காலத்தின் தேவையறிந்து செயல்படுவதே ஜனநாயகம் என்பதை நண்பர்கள் உணர்ந்தால், கேலிகளும், வெறுப்புகளும் பதிவுகளாக, விவாதங்களாக இருக்காது.!
அரசியல் பயில்வோம்.!
மத்தியமர் அரசியல் தளத்தில் இந்தப் பதிவை Post of the Week என்று தேர்வு செய்துள்ளனர்.!