அதை திசை திருப்புவதற்காக இட்டுக்கட்டிய –
ஆட்சிமாற்றத்தைக் குறிக்க
சோழர் காலத்துச் செங்கோல் நேருவிடம் திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்டது என்கிற பொய் மூட்டையை ….
சென்னைப் பத்திரிகையாளர் கூட்டத்தில் அவிழ்த்தெறிந்தார்…
ஹிந்து பத்திரிகையாசிரியர்
என்.ராம்.
கேளுங்கள்:
“செங்கோல் கட்டுக்கதைக்கு நடிகர்களை நடிக்க வைத்து மறுவடிவம் கொடுத்திருக்கிறார்கள், அரசு வலைத்தளத்தில் சென்று அந்தக் காணொளியை நீங்கள் பார்க்கமுடியும். Chenkol : Transfer of power to India 1947.
அவர்கள் சொல்கிறார்கள், இந்தியாவுக்கு அதிகாரம் வழங்கவும், பிரிட்டிஷ் எவ்வளவு சீக்கிரம் வெளியேறமுடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக வெளியேறவும் பிரிட்டிஷ் மன்னர் ஆறாம் ஜார்ஜ் பிறப்பித்த ஓர் ஆணையோடு – கடைசி வைஸ்ராய் மௌண்ட்பேட்டன் இந்தியா வந்தாராம். பிரதமராகப்போகும் நேருவிடம் எதாவது சிறப்பான கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்கிறீர்களா என்று கேட்டாராம்.
இவற்றுக்கெல்லாம் எந்த ஒரு சாட்சியமும் கிடையாது.
இந்தியா அன்றைக்கு ஒரு குடியரசாக மாறவில்லை, அதுதான் குறிப்பிடவேண்டிய ஒரு முக்கியமான விஷயம். மௌண்ட்பேட்டன் வைஸ்ராய் என்றால், மன்னனுடைய பிரதிநிதி. அவருக்குத்தான் அப்போது அதிகாரம். அவர் கவர்னர் ஜெனரல் ஆனபிறகுதான், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கு உரிமைகள் கைமாறும். அப்படித்தான் அரசு ஆவணங்களில் இருக்கிறது. எனவே அவர்கள் சொல்வதற்கு ஆதாரமே இல்லை.
1968ஆம் ஆண்டு மௌண்ட்பேட்டன் நேருவின் நினைவாக கேம்பிரிட்ஜில் இருக்கும் டிரினிட்டி கல்லூரியில் Transfer of Power and Jawaharlal Nehru என்றொரு சொற்பொழிவை ஆற்றினார். அதில்கூட அவர் இப்படி ஒரு சம்பவத்தைக் குறிப்பிடவே இல்லை.
இது ஓர் அப்பட்டமான கட்டுக்கதை.
மௌண்ட்பேட்டன் கேட்டபோது உடனே பதில் சொல்ல முடியாத நேரு, ராஜாஜியிடம் கலந்தாலோசித்தாராம்.
இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை, ஏனென்றால் இவர்கள் சொல்லும் நாளில் மௌண்ட்பேட்டன் பாகிஸ்தானில், கராச்சியில் இருந்தார்.
அந்நாளில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தரால் ஹிந்து பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரத்திலேயே ஆகஸ்ட் 14 இரவு பத்து மணிக்குத்தான் தங்கச்செங்கோல் நேருவிடம் அவர் வீட்டில் வைத்து வழங்கப்பட இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது என்பதை கவனியுங்கள். இதே செய்தியை ஆகஸ்ட் 11ஆம் தேதியிட்ட ஹிந்து பத்திரிகை செய்தியும் உறுதிப்படுத்துகிறது, ஆனால் அதில் இரவு 11 மணிக்கு வழங்கப்பட இருக்கிறது என்று ஒருமணி நேரம் தாமதமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆதீனமும் குழுவும் மௌண்ட்பேட்டனிடம் செங்கோலைக் கொடுத்ததாகவும், அதை அவர் நேருவிடம் கொடுங்கள் என்று சொன்னதாகவும் சொல்வதெல்லாம் முற்றிலும் கற்பனைக் கதைகள்தாம்.
ஆதீனம் வந்திறங்க சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது என்றொரு கதையையும் அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள்.
இதில் ராஜாஜியை நுழைத்திருப்பது அப்பட்டமான பொய், ஆதாரமிருந்தால் வெளியிடுங்கள் என்று ராஜாஜி பேரன் ராஜ்மோகன் காந்தியும் NDTV வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
செங்கோல் நேருவிடம் வழங்கப்பட்டபோது, ஆட்சிப் பரிமாற்றமே நிகழவில்லை என்பதுதான் உண்மை. இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்துதான் வழங்கப்பட்டது, அது குடியரசு ஆகவில்லை .
செங்கோல் நிகழ்வும் அரசியல் சட்ட சபையில் நிகழவில்லை, நேருவின் வீட்டில்தான் நடந்தது. அதிகாரக் கைமாற்றத்துக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை. நேருவிடம் ஓர் அன்புப் பரிசாகத்தான் வழங்கப்பட்டது. இது அதிகார மாற்றத்துக்காக வழங்கப்பட்டது என்கிற செய்தியும் அந்நாளில் எந்தப் பத்திரிகையிலும் வரவில்லை!
ஆதீனம் அளித்த பணிநிமித்தம் உம்மிடி பங்காரு நிறுவனத்தார் அதை உருவாக்கினார்கள்.அது சோழர் காலச் செங்கோலே அல்ல!”
இவ்விதம், தனித்தனி புகைப்படங்கள்,
நகல் ஆதாரங்களுடன் இந்த உண்மைகளை வெளியிட்டு, பொய்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்
ஹிந்து ராம்.
அய்யா மோதி!
நீர் பிரதமர் அல்லரா?
ஏனய்யா அமித்ஷா!
நீர் உள்துறை அமைச்சர் அல்லரா?
நாடாளுமன்றத்தில் இவ்விதம்
பச்சைப் பொய்யுரைக்கலாமா ?
சோழச் செங்கோல் என்று
கதையளந்தீரே,
நாணமில்லையா?
நாடு கேட்கிறது!
உலகம் நகைக்கிறது!