கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு செல்லும் பாதைகளை மறித்தும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு பொருட்களை கொண்டு செல்ல முடியாமலிருந்தது. குறிப்பாக கைத்தொழில் மாகாணமான ஒன்ராரியோ பலத்த நட்டங்களை சந்தித்தது. மோட்டார் கார் உதிரிப்பாக ஏற்றுமதி தடைப்பட்டது. இதனால் அமெரிக்காவும் எரிச்சலடைந்தது.
இதனை நிறுத்த அல்லது இந்த போராட்டத்தை முடிவுக் கொண்டுவர கனடிய மத்திய அரசு அவசரகாலச் சட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்தது. சிறுபான்மையரசான லிபரல் கட்சி அரசுக்கு, இடது சாரி சார்புக் கட்சியான என்.டி.பியின் ஆதரவு தேவை. இந்தப் போராட்டத்தின் பின்னுள்ள அரசியலை நன்கறிந்த என்.டி.பி அவசரகாலச் சட்;;டத்திற்கு ஆதரவு வழங்குகின்றது. எனவே திங்களன்று நடைபெறும் வாக்களிப்பில் இது சட்டமாகும்.
உலகெங்கும் அவசரகாலச் சட்டத்தின் அடிநாதம் அடக்குமுறை. எனவே நான் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
பலரும் கேட்கும் கேள்வி ஏன் இந்தப் போராட்டம்.
மிகச் சுருக்கமாக (முக்கியமானவை என நான் கருதுபவை)
1. தற்பொழுது பாரஊர்தி தொழில் பெரும்பான்மைச் சமூகத்திடமிருந்து தென்கிழக்காசியரிடமும், கிழக்கு ஐரோப்பியரிடமும் சென்று விட்டது.
2. இந்தப் போராட்டத்தின் பிண்ணனியில் பெரும்பான்மை மேலாதிக்கவாதிகள் உள்ளார்கள்.
3. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கடந்த காலங்களில் நடைபெற்ற தீவிர வலதுசாரியினரின் ஒரு எழுச்சியாகவும் உள்ளது.
4. போராட்டத்தின் பின்னால் உள்ள போராட்டத் தலைவர்கள் கனடாவிலிருந்து மேற்கு கனடாவை பிரிக்கும் வலதுசாரிக் கட்சியின் உறுப்பினர்களாக அல்லது முன்னால் உறுப்பினர்களாக இருந்துள்ளார்கள். (Wexit, Maverick Party ஆகியவற்றின் இணையத்தளங்களைப் பார்வையிடுங்கள்)
5. போராட்டக்காரர்களுக்கு கிடைத்த நிதியை அனுப்பியவர்களில் 55 வீதமானவர்கள் அமெரிக்க பிரசைகள். ஆனாலும் அதிகளவு நிதி கனடியர்களால் வழங்கப்பட்டுள்ளது.
6. போராட்டத்தின் ஆரம்பத்தில் நிறவாத கோசங்கள் எழுப்பப்பட்டன.
7. ஜஸ்ரின் ரூடோவை வெளியேற்றவேண்டும்.
8. கடந்த இரு தேர்தல்களில் மேற்கில் அதிகளவு பாராளுமன்ற ஆசனங்களை லிபரல் கட்சி பெறவில்லை. அங்கு தோன்றியுள்ள கிழக்கு கனடாமீதான எதிர்ப்பு அலையும் இதற்கு ஒரு காரணம்.
9. பழமைவாதக் கட்சியினர் போராட்டத்துக்கு முன்னர் ஆதரவு தெரிவித்திருந்தனர். பின்னர் 75 வீதமான கனடியர்கள் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவர்கள் அவசரகாலச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். கிழக்கு-மேற்கு எதிர்ப்பலையை உருவாக்கியதில் பழமைவாதக் கட்சியினருக்கும் பங்குள்ளது.
10. பைடன் அரசு இப் போராடடம் அங்கும் தொடரக் கூடாது என்பதில் கவனமாகவுள்ளது. அவசரகாலச் சட்டத்தின் அவசரமும் அதுவே.
எங்கே கொரோனாவைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன.?
உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக தனிப்பட்ட தாக்குதல்களின்றி பதிவிடலாம்.