கம்ப இராமாயணத்தில், இறுதிப் போரின் போது நிராயுதபாணியாக நின்ற இராவணனை “இன்றுபோய் நாளை வா“ என்று இராமன் கூறியபோது, இராவணன் கலங்கியதை“கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்“ என்று கம்பரால் உவமிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் அருணாச்சலக் கவிராயருக்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது. முதலில் இவ்வரியை யார் எழுதியது என்ற ஆராய்வை விட இந்த கடன் பட்ட நிலைமையே இலங்கைக்கும் இன்று ஏற்பட்டுள்ளது. அதிக கடன்களால் கலங்கி நிற்கிறது இலங்கை என்பதே நிதர்சனமாகும்.