இதில் சங்கரய்யாவின் நூற்றாண்டு தழுவிய பங்களிப்பு இறுவரை இயற்கை எய்தும் வரைக்கும் அவரின் செயற்பாடுகளும் காரணம். அவரின் 102 வயதில் இயற்கை மரணத்திற்கு மரியாதை கலந்த அஞ்சலி வணக்கங்கள்.
தமது தந்தையரை காணாத பலரும் அவரை தமது தந்தையராக தாத்தாவாகவும் சக தோழனான முன்னோடி ஆதர்ச புருஷராக தோழர் சங்கரய்யாவைப் பார்க்கின்றனர்.
அப்படி ஒரு மக்கள் பிணைப்பு மக்கள் தொண்டன் அவர்.
கோவில்பட்டியை சேர்ந்த நரசிம்மலு மற்றும் ராமானுஜம் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 1921 ஜுலை 15 அன்று பிறந்தார்.
1940 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்பட்டது. அந்தக் கிளையில் காங்கிரஸ் சோசலிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏ.செல்லயா, எஸ்.குருசாமி மற்றும் கே.பி.ஜானகி, எம்.ஆர்.எஸ்.மணி, எம்.எஸ்.எஸ்.மணி, எம்.ரத்தினம், என்.சங்கரய்யா உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்கள் ஆவர்.
மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து போலீசாரின் அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்து அன்றைய ஆளும் வர்க்கத்தின் ஒடுக்கு முறை வடிவமான தடியடிகளைத் தாங்கியும்இ தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டும்இ பல்வேறு போராட்டங்களில் இடைவிடாது பங்கேற்ற களப்போராளி தோழர் சங்கரய்யா.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவான போது இருந்த 36 தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
போராட்டமும் சிறையுமே வாழ்க்கையாகக் கழித்தவர் முதுபெரும் மார்க்சிஸ்ட் தலைவர் தோழர் சங்கரய்யா. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று இந்தியா சுதந்திரக் காற்றைச் சுவாசித்தபோதுதான் சங்கரய்யாவும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
தொழிலாளி வரக்கத்தின் உற்ற தோழனாக நின்று பல போராட்டங்களை முன்னெடுத்த தோழர் சங்கரய்யா, பொதுவாழ்வில் ஈடுபட்ட நாள் முதல் தனது இறுதி மூச்சு வரை கம்யூனிசக் கொள்கைகளில் தீவிரப் பிடிப்புடன் இருந்தார்.
அண்மையில் அவருக்கான பாரத் ரத்தின உயர் விருதை இந்திய ஆளும் பாஜக மறுத்தாலும் அவர் மக்களின் மனங்களில் பாரத் ரத்தினாவிற்கு மேலாகத்தான் வாழுகின்றார என்பதை மக்கள் மன்றங்கள் நிறுவி நிற்கின்றன.
அவர் வாழ்ந்த காலங்களில் நாமும் வாழ்ந்தோம் என்ற மகிழ்வும் நிறைவும் எமக்குள்ளும் உண்டு.
ஈழவிடுதலைப் போராட்டத்தின் போராளிகளாக தோழர் பத்மநாபா உடன் அவரை சந்தித்த தருணங்களை எம் சகதோழர்கள் பலரும் நினைவு கூருவதும்…
அவரும் அவர் கட்சியும் இலங்கைத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடனான வாழ்விற்கான கருத்தியலுடன் என்றும் உடன்பட்டவர்கள் அதற்காக குரல் கொடுத்தவர்கள் வாழ்ந்தவர்கள் என்பதினால் நாம் சங்கரய்யாவுடன் இன்னும் நெருக்கமாகின்றோம்.
மாக்ஸிசத்தின் தந்தை கார்ல் மாக்ஸ் ஏங்கல் வழி முறைகளை இந்திய உப கண்டத்திற்கு ஏற்ப செழுமைப்படுத்தி அதனை இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய தேசியக் கட்சிகளுடன் இணைந்து பிரிதானிய காலனி ஆதிக்கத்தை எதிர்தது போராடிய சிறை சென்ற அனுபவங்களை தோழர் சங்கரையா தன்னகத்தே கொண்டிருக்கின்றார்.
அவரின் போராட்ட அனுபவங்கள் கம்யூனிச செயற்பாடுகள் பல தலைமுறைக்கும் ஒரு பாடாப் புத்தகமாகவே அமையும்.
கம்யூனிச தத்துவத்தை தமது நாட்டின் சூழலுக்கு ஏற்ப சோவியத்தின் புரட்சியிலும் புரட்சியிற்கு பின்னர் சோவியத்தில் லெனினும் அவரைத் தொடர்ந்த ஏனைய தலைவர்களும் நாட்டை முன்னகர்த்தி சென்றதும்…
சீனாவில் மாவோவின் சீனப் புரட்சி அனுபவங்கள் நாட்டை ஒருங்கிணைத்து முன் நகரத்திய அனுவங்கள்…
வியட்நாமின் ஹோசிமின் இன் புரட்சிகர விடுதலை வரலாறு…
கியூபா இன் பிடல் காஸ்ரோ தலமையிலான கியூப் புரட்சியும் இன்று வரை தெளிந்து ஓடையாக பயணிக்கும் நிலமைகளையும்…..
இந்தியாவில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்களால் அதே அளவிற்கு இந்தியாவில் உருவாக்க முடியவில்லை என்றாலும் சங்கரையா, வாழும் தோழர் நல்லகண்ணு, வாழ்ந்து மறைந்த தோழர் ஜீவா, ஜோதி பாசு, ஈ..கே. நாயனார் போன்றவர்கள் நாட்டிற்கு செய்த சேவைகளை குறைத்து மதிப்பிட முடியாது.
அவர்களின் அனுவங்கள் மனித குல மேம்பாட்டிற்கும் சமத்துவமான வாழ்வை உறுதிப்படுத்துவதற்கும் பல்கலைக் கழகங்களில் வைக்கப்பட வேண்டிய புத்தகங்களுக்கு மேலானவை.
பல மொழி பேசும் பல மதங்களை தன்னகத்தே கொண்ட பல்வேறு கலாச்சாரப் பின்னணிகளை கொண்ட இந்திய தேசத்தில் கம்யூனிட்ஸ்களின் உயிர் வாழ்தலும் செயற்படுதலும் அதுசார்ந்த கொள்கைளை உயிர்ப்புடன் முன்னோக்கி கொண்டு செல்வதில் உள்ள கடுமையான சூழலில் சங்கரய்யா போன்றவர்களின் இறுதி வரையிலான கம்யூனிச வாழ்வு அளப்பரியதுதான்.
சமூக சீர்திருத்த வாதிகளான ஈவேரா பெரியார், அயோத்தி தாசர், அம்பேத்கார் போன்றவர்களுடன் இணைந்து பயணிப்பதில் இந்து முதிர்ந்த கம்யூனிஸ்ட் தோழர்களின் அனுபவங்கள் உறுதுணையாகவே இருந்திருக்கின்றன.
அவர் இவற்றிற்கான ஒரு சகாப்தத்தை உருவாக்கிவிட்டு எம்மிடம் தொடருங்கள் என்றவாறே பயணப்பட்டுள்ளார் அவர் விட்டுச் செல்லும் பயணத்தை நாம் தொடருவதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலி மரியாதையாக இருக்க முடியும் அதனை செய்வோம் நாம்.