சாய்பல்லவி

நாமறிந்தவரை வெள்ளை சமாதானத்தின் அடையாளமும் கூட!

எந்த விதமான மத அடையாளங்களையும் பின் தொடராமல் இயற்கையை வழிபடுவதையே பண்பாட்டின் அடையாளமாக கொண்டவர்களே அவர்கள்.

மரங்களை வழிபடுவார்கள்;

அருவிகளை வழிபடுவார்கள்;

நீர் சுரக்கும் சுனைகளை வழிபடுவார்கள்;

இயற்கை அன்னை தனக்கு கொடுத்த தானியங்களை வைத்து தெய்வங்களுக்கு நன்றி சொல்வார்கள்;

மழைக்கு விழா கொண்டாடுவார்கள்;

தன் நிலத்தில் விளைந்த தானியங்களை சேர்த்து, கோயிலில் சமைத்து ஊருக்கே அன்னதானம் செய்து மகிழ்வார்கள்.

இப்படித்தான் அவர்கள் வழிபாடு இருக்கிறது.

கார்பரேட் அரசியலில்… அது போடும் வெறுப்பு அரசியல்

தூண்டிலுக்கு ( இந்துமதவெறி) சில படுகு மக்கள் பலியாகியிருக்கலாம்,வெகுமக்கள் அப்படியல்ல!

நான் அறிவேன்.

இதையெல்லாம் பார்த்து வளர்ந்த ஒரு பெண் மதத்தின் பெயரால் கும்பல் வன்முறையை எதிர்த்து ஊடகங்களில் பேசாமல் இருந்தால் தான் ஆச்சரியம்!

தன்னுடைய வாழ்நிலையிலிருந்து மதங்களை பார்க்கிறார். ஆகவே, துணிச்சலுடன் மதவெறியர்களை எதிர்த்து பேசுகிறார்.

நீர், நிலம், காற்று, ஆகாயம், தீ ( நாம் தொழிற் நிறுவனம் என கொள்வோம்)

இவற்றையெல்லாம் எவனுக்கோ விற்றுவிட்டு, இவர்கள் பேசுகிற ‘தேசஒற்றுமை’ அபத்தம் என்பதை சாய்பல்லவி உணர்ந்திருப்பார்.

ஆக, அப்படி பேசுகிறார்.

அதிலொன்றும் தவறில்லை!!

குறிஞ்சி நதிகளின் பிறப்பிடம்!

நதிகள் பேதம் பார்த்து பயணப்படுவதில்லை !!

நான் சாய்பல்லவியோடு

கரம் கோர்க்கிறேன் ! !

இந்த உலகின் பேரழகு என்பது மானுட சமத்துவம்தானே

மதமாக இருந்தால்கூட!!

(Thavamuthalvan Thavan)