சீனாவின் தேவை சரிவானது இந்திய வளர்ச்சியினை பாதிக்கலாம்

சீனாவின் பொருளாதார கொள்கையால் ஏனைய நாடுகள் நெருக்கடிக்குக்குள் சிக்கி தவிக்கும் அதேநேரத்தில், சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமும் சரிவை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது எனினும், நடப்பாண்டில் அதன் வளர்ச்சி 3.5 சதவீதமாக காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதற்கு முன்னர் 5.5 சதவீதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பல்வேறு காரணிகளால், சீனாவில் இருந்து முதலீட்டாளர்கள் வெளியேற தொடங்கியுள்ளனர். சீனாவின் பிரபல டெக் நிறுவனங்களான அலிபாபா, டென்சென்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் நிகர லாபம் 50% சரிவினைக் கண்டுள்ளது.

பல ஆயிரம் ஊழியர்கள் தங்களது பணியினை இழந்துள்ளனர். குறிப்பாக 16 – 24 வயதிற்கு இடையிலான ஊழியர்கள் வேலையில்லாதவர்களாக அதிகளவில் உள்ளனர். இது மேற்கொண்டு உற்பத்தி திறனை பாதித்துள்ளது. இதுவும் சீனாவில் இருந்து தங்களது ஆலையை வேறு பகுதிக்கு மாற்ற காரணமாக அமைந்துள்ளது.

மேற்கண்ட காரணிகள் இந்தியாவினை பாதிக்காது என்றாலும், சீனாவின் தேவை சரிவு இந்தியாவினை பாதிக்கலாம். இந்திய ஏற்றுமதியாளர்களை பாதிக்கலாம். இது இந்திய வளர்ச்சியினை பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் பூஜ்ஜிய கொவிட் கொள்கை காரணமாகவே அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிக மோசமான பின்னடைவுக்குத் தள்ளப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியிலான முழுமையான முடக்கம். அவ்வப்போது பெரும் நகரங்களை முழுமையாக முடக்கி விடுதல். இவையெல்லாம் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் பெரும் சரிவினை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் முக்கிய வணிகமான ரியல் எஸ்டேட் வணிகமானது பெரும் சரிவினைக் கண்டுள்ளது. இதுவும் சீனாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது.

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் கடும் மின்வெட்டு, ரியல் எஸ்டேட் துறை சரிவு என பல காரணிகளுக்கு மத்தியில், உற்பத்தியும் பெரும் சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் நிலவிவரும் மந்த நிலைக்கு மத்தியில் சீனாவின் நுகர்வு பெரும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு ஆண்டின் முதல் பாதியில் சரிவினைக் கண்ட நிலையில், இரண்டாம் பாதியிலாவது பொருளாதாரம் மேம்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. எனினும், தற்போது சீனாவில் பல இடங்களில் கொரோனாவின் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கான 3.5% ஐ எட்டுமா? என்பதே பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

மார்கன் ஸ்டான்லி, ப்ளூம்பெர்க், பார்க்லேஸ் பி எல் சி உள்ளிட்ட சர்வதேச ஆய்வு நிறுவனங்கள், சீனா மெதுவான வளர்ச்சியினையே கண்டு வருகின்றது. ஆக அதன் வளர்ச்சி விகிதம் குறையலாம் என கணித்துள்ளன.

இது கொரோனா பூஜ்ஜிய கோவிட் கொள்கையினால் மட்டுமல்ல, ரியல் எஸ்டேட் மந்த நிலை, தேவை சரிவு, சர்வதேச அளவிலான மந்த நிலை என பல காரணிகளும் காரணமென கணித்துள்ளன.
குறிப்பாக பார்க்லேஸ்-ன் சீன பொருளாதார நிபுணர், நடப்பு ஆண்டில் 2.6% ஆக வளர்ச்சி காணலாம் என கணித்துள்ளார். இது முன்னதாக 3.1% ஆக மதிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்ந்து சொத்துகளின் விற்பனை சரிவு, கோவிட் முடக்கம், தேவை சரிவு, நிதி பற்றாக்குறை என பல காரணிகளுக்கு மத்தியில் சரிவில் கணித்துள்ளது.

கடந்த மாதத்தினை காட்டிலும் தற்போது தொழிற்துறை உற்பத்தி, சில்லறை விற்பனை, முதலீடு என பலவும் செப்டெம்பரில் மேம்பட்டதாக தெரியவில்லை. அதோடு வீட்டு சந்தையிலும் சரிவிலேயே காணப்படுகிறது. நுகர்வோர் செலவினங்களும் குறைந்துள்ளன. எனினும் இந்த நெருக்கடியான காலகட்டத்திலும், சீன மத்திய வங்கி எந்த முக்கிய நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மேற்கொண்டு அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் முக்கிய நகரங்களான ஷாங்காய், சென்ஷோன், செங்குடு உள்ளிட்ட நகரங்கள் லாக்டவுனால் முடக்கப்பட்டன. இதன் காரணமாக அதன் வணிகம் முற்றிலும் முடங்கியது. குறிப்பாக சீனாவின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. தொழிற்துறையில் பாதிப்பு ஏற்பட்டது.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது, சமீபத்திய ஆண்டுகளாகவே சற்று மெதுவான வேகத்தில் வளர்ச்சி கண்டு வருகின்றது. குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு இது மோசமான நிலையை எட்டியுள்ளது.

கொரோனா மட்டும் அல்ல, சீனாவின் இந்த மோசமான நிலைக்கு 5 விஷயங்கள் தான் காரணமென நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

சீனாவின் ஜூலை – செப்டம்பர் காலகட்டத்திலான வளர்ச்சி விகிதமானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் ரெசசனை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா – சீனாவுடனான பிரச்சனைக்கு மத்தியில் வர்த்தக பதற்றங்களும் நிலவி வருகின்றது. இதனால் இவ்விரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரமும் பாதிப்பினை கண்டு வருகின்றது.

சீனாவில் கொரோனாவினை தடுக்க பூஜ்ஜிய கோவிட் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் சீனாவின் முக்கிய நகரங்கள் ஸ்தம்பித்து போயின. சொல்லப்போனால் பல நிறுவனங்களும் சீனாவினை விட்டு வெளியேற இது முக்கிய காரணமாக அமைந்தது. ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட பூஜ்ஜிய கோவிட் திட்டம் மற்றும் அமல்படுத்தப்பட்டுள்ள பூஜ்ஜிய கோவிட் திட்டம் உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிற் துறையானது மோசமான சரிவினைக் கண்டுள்ளது. இது பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பூஜ்ஜிய கோவிட் திட்டத்தின் மத்தியில் நுகர்வுகள் குறைந்து விட்டனது. குறிப்பாக உணவு மற்றும் சில்லறை வியாபாரம், சுற்றுலா துறையில் அழுத்தம் காணப்பட்டது. தற்போது தொழிற்துறையானது இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியிருந்தாலும், இந்த வளர்ச்சியானது தொடருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேவை குறைந்துள்ள நிலையில் உற்பத்தியானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக புதிய முன்பதிவுகள், வேலை வாய்ப்புகள் என பலவும் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பணவீக்கம் காரணமாக விலைவாசியானது ஏற்கெனவே உச்சத்தினை எட்டியுள்ளது.

சீனா பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு எடுத்து வரும் நடவடிக்கை போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது. கடந்த ஓகஸ்ட் மாதம் சிறு தொழில்கள், உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட் தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக 1 டிரில்லியன் யுவானை சீனா அறிவித்தது. ஆனால் நிபுணர்கள் செலவினங்களை அதிகரிக்கவும், வளர்ச்சியினை ஊக்குவிக்கவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், அரசு இன்னும் கூடுதலான நிதியினை ஊக்குவிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

சீனாவின் மிக முக்கிய வணிகமாக இருந்து வரும் ரியல் எஸ்டேட் வணிகமானது, கடந்த சில காலாண்டுகளாகவே பெரும் மந்த நிலையில் இருந்து வருகிறது. இது சீன பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வங்கித் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடப்பு ஆண்டில் வீடுகளின் விலை 20% குறைந்துள்ளது. இதற்கிடையில் சீன அபிவிருத்தியாளர்களும் பெரும் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளனர்.

சீனாவில் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தினால் சீனாவின் தொழிற்துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடுமையான வெயில் காரணமாக குளிரூட்டிகளின் தேவையானது அதிகரித்தது. இது மின்சார தேவையினை ஊக்குவித்தது. ஏற்கெனவே நிலக்கரி பற்றாக்குறையால் மின்சார உற்பத்தியும் பாதித்தது. இதற்கிடையில் சீன தொழிற்சாலைகளும் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன.

உலகின் முன்னணி பொருளாதார நாடான சீனாவில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில், சீனாவின் வளர்ச்சி விகிதம் சரிவடையலாம் என உலக வங்கி கணித்துள்ளது.

சீனாவின் ரியல் எஸ்டேட் துறையில் நிலவி மந்த நிலை, ஜீரோ கோவிட் பாலிசி, இது 30 வருடங்களில் இல்லாத அளவுக்கு சீனாவின் வளர்ச்சி விகிதம் பின்னடைவை சந்தித்துள்ளது.

கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான வருடாந்திர வளர்ச்சி குறித்தான கண்ணோட்டம், 5%ல் இருந்து 3.2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதில் சீனாவின் பங்கு முக்கியமானதாகும். இது கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் 86% பங்கு வகிக்கிறது. இதற்கிடையில் தான் உலகின் இரண்டாவது பொருளாதார நாடான சீனாவின் ஜிடிபி வளர்ச்சியினை உலக வங்கி குறைத்துள்ளது. இது வெறும் 2.8% மட்டும் இருக்கும் என கணித்துள்ளது.

அதேசமயம் மற்ற 23 நாடுகளின் வளர்ச்சி விகிதம் சராசரியாக 5.3% வளர்ச்சியினை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2021ல் இருந்து 2.6% வளர்ச்சியினை விட இரட்டிப்பாகும். சீனாவின் மாறுபட்ட பாதையால் 1990க்கு பிறகு முதல் முறையாக ஜிடிபி வளர்ச்சியினை, மற்ற நாடுகளுக்கு பின்னால் பின் தங்கியுள்ளது.

கொரோனாவிற்கு பிறகு கமாடிட்டி விலைகளும் உயர்ந்துள்ளன. அதேசமயம் நுகர்வும் அதிகரித்துள்ளது. எனினும் சீனாவில் போடப்பட்ட பூஜ்ஜிய கோவிட் கொள்கையால் உள்நாட்டு விற்பனையானது சரிவினைக் கண்டுள்ளது. ஏற்றுமதியும் சரிவினைக் கண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை சீனா அரசு 2021ல் ஜிடிபி வளர்ச்சி விகிதமானது 8.1% ஆக வளர்ச்சி கண்டுள்ளது. 2022ல் 5.5% வளர்ச்சி காணலாம் என கணித்துள்ளது. உலக வங்கி 5% வளர்ச்சி காணலாம் என கணித்திருந்த நிலையில், அதனை தற்போது 2.6% ஆக குறைத்துள்ளது. மேலும் 2023ம் ஆண்டிலும் 4.5% வளர்ச்சி காணலாம் என கணித்துள்ளது.