996 என்றழைக்கப்படும் இவ் வேலைத் திட்டத்தில், வாரத்தில் 6 நாட்கள் தினமும் 12 மணி நேரம் பணிபுரியவேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பெறப்பட்ட தகவலின்படி, சீனாவின் Tencent, Alibaba, ByteDance உள்ளிட்ட பிரபல நிறுவனங்களில் பணிபுரியும் 4,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்வதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஊழியர்கள் அவர்களது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிட முடியாமல் போவதாகவும் அவர்களது குடும்ப வாழ்வு பாதிக்கப்படுவதாகவும், அவர்கள் மன உழைச்சலுக்கு ஆளாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே ”workers lives matters ”என்னும் பிரச்சாரம் வலுவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.