இதற்கு ஆயுதம் வைத்திருக்க விரும்பும் அனைத்த மக்களுக்கும் ஆயுதம் வழங்க தயார் என்று அறிவித்தும் இருக்கின்றார் உக்ரேன் அமெரிக்க சார்பு தலைவர். பொது மக்களுக்கு கட்டுப்பாடற்ற ஆயுத விநியோகம் போர் அற்ற சூழல் ஏற்படும் போது இந்த ‘சுதந்திர’ ஆயுதங்கள் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதை நாம் பலரும் அறிவோம்.
நேட்டோ அமைப்புடன் சேரவேண்டாம் அவர்களின் ஆயுதங்களை எமக்கு(ரஷ்யா) எதிராக நிறுத்துவதங்கு வாய்ப்பை வழங்காதீர்கள் என்று 1991 இலும் 2015 இலும் ஏற்பட்ட உடன்பாடுகளின் அடிப்படையில் உக்ரேன் செயற்பட்டிருந்தால் இந்த ரஷ்ய படைகள் எல்லை தாண்டி உக்ரேனுக்குள் புகுந்திருக்க மாட்டாது என்பதை இந்த ஊடகங்கள் தமக்கு வசதியாக மறைத்துக் கொள்கின்றனர்.
இந்த நிலையில் யார் இந்த புட்டின் ஒரு குறிப்பு…
இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில்…..
போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஒரு சோவியத் வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது.
தனது வீட்டின் அருகே உள்ள தெருவை அந்த வீரர் அடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனங்களில் சடலங்கள் ஏற்றப்பட்டிருப்பதைப் பார்த்ததும், எதிரிகள்… ஹிட்லரின் நாஜிகள் தனது நகரத்தில் குண்டு வீசியுள்ளனர் என்பதைப் புரிந்துகொண்டார்.
பல சடலங்கள் பொதுக் கல்லறைக்கு எடுத்துச் செல்ல தயார் நிலையில் இருப்பதை அவதானித்தார். அடுக்கப்பட்ட சடலங்களின் முன்னால் அந்த செம்படை வீரர் சற்று நேரம் நின்று செவ்வணக்கம் செய்தார். அப்போது..
ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த பாதணிகளை அவர் கவனித்தார். முன்பு தனது மனைவிக்காக வாங்கி வந்த காலணி போல் அது இருந்தது.
உடனே வீட்டுக்கு ஓடினார். வீட்டில் யாரும் இல்லை. வேகமாகத் திரும்பிச் வந்து வாகனத்தில் இருந்த அந்த உடலைப் பரிசோதித்தார். அது அவரது மனைவியேதான். அதிர்ச்சியடைந்தார்.
பொதுக் கல்லறையில் மனைவியைப் புதைக்க விரும்பவில்லை என்றும் தனிக் கல்லறையில் புதைக்க விரும்புவதாகவும் கூறி உடலைத் தருமாறு வேண்டினார். அனுமதியும் கிடைத்தது.
வாகனத்தில் இருந்து உடலை வெகு சிரமத்துடன் வெளியே எடுக்கும்போது மனைவி இன்னும் உயிருடன் இருப்பதைப் உணர்ந்து அதிர்ந்தார்.
உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தேவையான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் உயிர் பெற்றாள் அந்த சோவியத்தின் செம்படை வீரரின் மனைவி.
இந்த விபத்து நடந்து பல வருடங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட உயிருடன் புதைக்கப்பட இருந்த அந்த மனைவி கர்ப்பமுற்றாள். ஆண் குழந்தை பிறந்தது.
பிரசவம் பார்த்தவர்கள் பையனுக்கு பெயர் சூட்டினர். பெயர் என்ன தெரியுமா..?
விளாடிமிர் புடின். அவர்தான் ரஷ்யாவின் தற்போதைய ஜனாதிபதி.
(ஹிலாரி கிளின்டன் தனது “Hard Choices” என்ற புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்)
விளாடிமிர் புடின் பற்ற கூறிவிட்டு உக்ரேன் அதிபர் விளாடிமிர ஜெலன்ஸ்கி பற்றியும் கூறினால்தான் இந்தப் பதிவு முழுமை பெறும் அதனால் தொடர்கின்றேன்
யார் இந்த ஜெலன்ஸ்கி….
1978-ல் சோவியத் யூனியனில் அங்கமாக இருந்த க்ரிவி ரிஹில் பிறந்த விளாடிமிர் ஜெலன்ஸ்கி, யூத பின்னணி குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜெலன்ஸ்கியின் பள்ளிப்படிப்பு முதல் ஆரம்ப வாழ்க்கை முழுவதும் ரஷ்ய மொழியியை சுற்றியே இருந்தது.
பொருளாதாரம், சட்டம் என இரண்டு படிப்புகளை முடித்திருந்தாலும், ஜெலன்ஸ்கி கலைகளிலேயே அதிக ஆர்வம் கொண்டிருந்தார் அந்த ஆர்வம் அவரை நகைச்சுவை நாடக குழுக்களில் சேர வழிவகுத்தது.
கீவ் தேசிய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த போதே நாடகங்களில் பங்கேற்கத் தொடங்கினார். ஜெலன்ஸ்கி மற்றும் மற்ற நடிகர்கள் ‘குவார்டல் 95’ என்ற குழுவை உருவாக்கி நகைச்சுவை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.
மேடை நிகழ்ச்சிகளாகத் தொடங்கி 2003-ல் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி செய்யும் அளவுக்கு ‘குவார்டல் 95’ குழுவின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், நாடகங்களில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் தற்கால அரசியல் சூழல்களை நையாண்டிகளாக்கி மக்களை சிரிக்க வைத்தனர்.
இந்த அரசியல் நையாண்டியின் மூளை ஜெலன்ஸ்கியே. அவரே இதை முன்னின்று நடிக்கவும் செய்தார். இவர்கள் குழு, 2015-ல் தொகுத்த நிகழ்ச்சியே, ‘மக்கள் சேவகன்’ (Servant of the People).
உக்ரைனின் நடைபெற்றுக்கொண்டிருந்து ஆட்சி… ஆட்சித் தலைவர்கள் பற்றிய செயற்பாடுகளை மையப்படுத்தியே இந்த நிகழ்ச்சி அரசியல் நையாண்டி அடிப்படையில். அதனால் இது உக்ரேனிய மக்கள் மத்தியில் ‘மக்கள் சேவகன்’ நிகழ்ச்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு அரசியல் கற்பிக்கும் வரலாற்று ஆசிரியர் கதாபாத்திரம் ஏற்றிருந்தார் ஜெலன்ஸ்கி. மாணவர்கள் பாடம் எடுப்பது போல் உக்ரைன் அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிராக நிகழ்ச்சியில் அவர் வெளிப்படுத்திய செயல்களுக்கு வரவேற்பு இருந்தது.
அது 3 ஆண்டுகளுக்கு பிறகு ‘குவார்டல் 95’ குழு ‘மக்கள் சேவகன்’ என்ற அதே பெயரில் கட்சியாக உருமாறும் அளவுக்கு வரவேற்பை பெற்று ஜெலன்ஸ்கி அபரிமிதமான புகழ்பெற்றார்.
இறுதியாக அதிபர் வேட்பளராகவும் தேர்தல் அரசியலுக்குள் புகுந்தார்.
பிரச்சாரங்களிலும் தனது வழக்கமான அரசியல் நையாண்டி பாணியில் வறுத்தெடுத்தார் ஆட்சியாளர்களை. கூடவே சமூக ஊடகங்கள் ஊடாகவும் உக்ரேனிய இளைஞர்களையும், மக்களையும் கவர்ந்தார்.
ரஷ்யாவுடனான உறவுச் சிக்கல்களை முடிவுக்குக் கொண்டு வருவதும், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளை சமாதானப்படுத்துவதும் உக்ரைனியர்களின் நீண்டகால கோரிக்கைகள். ஜெலன்ஸ்கி அதிபர் தேர்தலில் முக்கிய வாக்குறுதியாக வழங்கினார்.
எதிர்பார்த்து போலவே மிகப்பெரிய வெற்றி. 73 சதவீத வாக்குகளைப் பெற்று உக்ரைனின் ஆறாவது அதிபராக 2019-ல் அரியசானத்தை கைப்பற்றினார்.
எந்த வாக்குறுதியை சொல்லி ஆட்சிக்கு வந்தாரோ, அதற்கு முன்னுரிமை அடிப்படையில் ஆட்சியைத் துவங்கினார். ஆனால் அதற்கு அவர் மேற்குலகின் சார்ப்பு நிலையை எடுத்துக் கொண்டார். இங்குதான் அவரின் அரசியல் சறுக்கல ஏற்படுகின்றது.
ரஷ்யா இந்த மேற்குலக சார்ப்பு நிலை நேட்டோ அமைப்புடன் இணைதல் உக்ரேனின் கிழக்கு பகுதியில் ரஷ்ய மொழி பேசும் பெரும்பான்மையாக வாழும் மக்களின் உரிமைகளை மறுக்கும் செயற்பாட்டையும் செயற்படுத்த முற்பட்டார்.
உக்ரேன் சனத் தொகையில் 30 வீதம் அளவிற்கு ரஷ்யா மொழி பேசும் மக்கள் வாழுகின்றனர் அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுத்தல் என்ற செயற்பாடுகளை தனது ஆட்சியில் செயற்படுத்தினார்.
தற்போதைய நிலையில் யூத இனத்தின் பின்னணி செயற்பாட்டின் அடிப்படையில் இவரை நாஜி என்று சொல்லப்படுவதை மறுத்துரைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு ரஷ்யாவின் செயற்பாடுகள் ஹிட்டலரின் நாஜிகளின் செயற்பாட்டை ஒத்தது என்ற பதில் கருத்துகளை சொல்லி வருகின்றார்.
இந்நிலையில் உக்ரேன் ரஷ்யாவிற்கு வெளியே பெல்லாறஷ் இல் பேச்சுவார்தையில் ஈடுபடலாம் என்று இரு நாடுகளும் அறிவித்தாலும் இரு நாடுகளும் உடனடியாக பேச்சுவார்தையில் ஈடுபடுவதற்கான நிபந்தனைகள் நெருங்கி வரவில்லை.
ஆனால் சில நாட்களில் இதற்கான நெருக்கம் ஏற்பட்டு பேச்சுவார்தை ஏற்படுவதற்கு வாய்புகள் உண்டு. இதில் மேற்குலகம் விலத்தி இருத்தல் அவசியம் ஆகின்றது. ஐரொப்பிய யூனியன் நாடுகள் மத்தியஸ்தம் வகிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனை வேண்டியே உலகமும் உள்ளது.
போர் வேண்டாம் சமாதானம் வேண்டும் அதற்கு விட்டுக் கொடுப்பும் பேச்சுவார்த்தையும் அவசியம் ஆகின்றது. அதனை இரு தரப்பும் செய்தாக வேண்டும்.
மாறாக ஆயுத வியாபாரிகள் தமது ஆயுதங்களை தொடர்ந்தும் விற்பதற்கான பேர்களைத்தை பேணுதல் என்ற விடயம் உடைக்கப்பட வேண்டும்.
மேற்குலகம் தனது வாலைச் சுருட்டிக் கொண்டு தமது கொல்லைக்குள் இருக்க வேண்டும். கூடவே சோவியத் கொல்லை புறத்தில் படைகளை குவிப்பதை நிறுத்த வேண்டும்……
(கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது தொடரும்….)