நேட்டோவில் உக்கிரையின் இணைவதும். . அமெரிக்கா மற்றும் மேற்குலகம் என்பன ஆயுத அதிகாரத்தை ரஸ்சியாவிற்கு எதிராக நிலைநிறுத்துவதும் ஒன்றே. . .!
போர் ஆரம்பித்தால் . .உக்கிரையின் மக்களிற்கு அடுத்ததாக பாதிப்பு அதிகமாக ஏற்படப் போவது ஜரோப்பிய மக்களிற்கே . . . ! ஏனென்றால் போரின் பகைப்புலம் அங்கேதான் . அமெரிக்கா தொலைவிலுள்ளது . . எனவே ஜரேப்பியர்கள் போரை தவிர்க்கவே விரும்புவார்கள் . மேலும் சீனாவும் வெளிப்படையாக ரஸ்சிய ஆதரவை தெரிவித்து விட்டதால் ஜரோப்பியர்களிற்கு தர்மசங்கடம் அதிகம்.
அத்தோடு ஜரோப்பாவின் ‘’எரிவாயு” இறக்குமதியானது பெரும்பாலும் ரஸ்சியாவிலேதான் தங்கியுள்ளது.
ஆனால் மேற்கு ஜரோப்பா தனது ‘’சுரண்டல் பெரியண்ணனான’’ அமெரிக்காவின் சொல் கேட்பது போல் நடிக்க வேண்டிய கட்டாயமும் இருப்பது உண்மை.
ரஸ்சியவின் கடந்தகால அரசியல் நிலைப்பாடுகள் செயற்பாடுகள் என்பனவும் சீனாவின் தற்கால கம்யுனிஸம். . ? சீனா உலக நாடுகளில் செய்யும் அழுதங்கள் தொடர்பாக ஆயிரம் விமர்சனங்கள் உண்டு .
ஆனால் அமெரிக்க மேற்குலக முதலாளித்துவம் என்பது கேள்விகேட்க ஆளில்லாவிட்டால் உலக மக்களின் முழு இரத்தத்தையும் குடித்து விடும் தன்மை கொண்டது.
பலர் கேட்பார்கள் உக்கிரைன் மக்களின் ‘’இறையாண்மை’’ ரஸ்சியாவால் நசுக்கபடுகிறதே . . என்று . . நியாயமான கேள்வியும் கூட.
இதுதான் நடைமுறை யதார்த்தம் . . சிறிய நாடுகளில் ‘’தேசியம்’’ ‘’இறையாண்மை’’ என்பன உலக வல்லரசுகள் . . பிராந்திய வல்லரசுகள் என்பனவற்றின் தேவையின் பொருட்டே உருவாக்கப்படுகின்றன. . பின்னர் தேவையென்றால் அழிக்கப்படுகின்றன. .உ.ம்- ஈழத் தமிழ் தேசியம் .
ஆனால் . . நம்ம ஈழத்தமிழர்கள் அமெரிக்கா. சீனா . ரஸ்சியா இந்தியா எல்லாவற்ரையும் . . இல்லை இந்த நாடுகளின் உலகளவிலான செயற்பாடுகளை எல்லாம் ‘’முள்ளிவாய்க்காலில்’’ நின்றபடியே அண்ணாந்து பார்ப்பார்கள். உலக அரசியலில் மற்றை நாட்டு மக்கள் படும் துன்பத்திலிருந்து ‘குனிந்து’ பார்க்கமாட்டார்கள்
உலக வல்லரசுகளின் ‘’வலிவு” போட்டியில் தற்போதைய உக்கிரையின் பிரச்சனையானது இனிமேல் யார் பக்கம் ‘’பெரிய சண்டியன்’’ என்ற பட்டத்தை மாற்றிவிடும் தன்மையும் கொண்டது,
‘உலகம் சமநிலை’ அடையுவரை வலிய நாடுகளிடையே ‘’வலிமை’’ சமநிலை பேணுவது தவிர்க்கவியலாதது,
ஆனால் . . போர் தொடங்காதிருக்க வேண்டி என் மனம் அழுகிறது, . !