தெற்காசியா தொடர்பிலான பெரியண்ணனின் கொள்கை மாறியிருக்கிறதா?

(என்.கே.அஷோக்பரன்)

கனடாவும், இந்தியாவும் மிகப்பெரிய இராஜதந்திர முறுகல் நிலையை சந்தித்து நிற்கும் காலப்பகுதியிது. பதினைந்து வருடங்கள் முன்பு கூட இதுபோன்றதொரு நிலை ஏற்பட்டிருக்காது. ஏனென்றால், உலகளவில் இந்தியா தனது பலத்தை இதற்கு முன்னர், இத்தனை தூரம் வௌிக்காட்டியதில்லை. தனக்குக் கிடைக்கவிருந்த ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆசனத்தையே, சீனாவுக்கு வழங்காததை தாம் பெறுவது கூடாது என்று ஏற்காது விட்ட நேருவிய இந்தியா இப்போது இல்லை. வறிய நாடு, பிச்சைக்கார நாடு என்று மேற்குலகமானது தனது ஆதிக்கப்பார்வையின் காரணமாக, ஆபிரிக்காவுக்கு அடுத்து மோசமாகப் பார்த்த இந்தியா இன்று இல்லை.