தோழர் சாருமஜூம்தார் நினைவு (ஜூலை – 28 ) நாள்!

குறிப்பாக, இதன் முதல்
பொதுச் செயலாளர்
தோழர் சாருமஜும்தார் அவர்களையே சாரும்.
இதனை யாரும் மறுக்க முடியாது.
அவரது மகத்தான
நினைவு நாள்
( ஜீலை – 28 )
உயர்த்துவோம்!
சீனப்பாதையா ரஷ்யப் பாதையா என்று
குழம்பாமல், உலகின்
புரட்சிகரப் பாதை
என்று ஒன்று உண்டு
என்று இந்தியப்
புரட்சியாளர்களுக்கு
பொதுத் திசைவழி
காட்டிச்சென்றவர் தோழர் சாருமஜும்தார்.
எதுவும் முதலில் தோன்றும் போதுள்ள, பொதுவான குழப்பமும் அராஜகமுமே,
தோழர் சாருமஜூம்தார் அவர்களின் பாதையிலும் குறுக்கிட்டது. அதனைக்
கண்டு, உணர்ந்து, திருத்தி முன்னேறுவதே, அடுத்தடுத்து வரும் புரட்சியாளர்களின் பொறுப்பாகும்.
கடமையும் ஆகும்.
இதனை விடுத்து,
தோழர் சாருமஜும்தார் அவர்களைக்
குறை கூறி நாளைக்
கழிப்பது என்பது,
எவ்விதத்திலும் புரட்சியாளர்களுக்கு
அழகல்ல. அசிங்கமே!
வலது மற்றும் இடது கம்யூனிஸ்ட்டுகள்
என்போர், முதல் வரிசை
மற்றும் இரண்டாம் வரிசை என்று, முதலாளியப்
பந்தியில் வரிசை கட்டி
நின்று கையேந்திக் கொண்டிருந்த போது,
‘ புரட்சியே எமது லட்சியம்
என்று உரத்துக் குரல்
கொடுத்து எழுந்தது தான்
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்பது ஆகும்.
இதன் ஒப்பற்ற முதல்
தலைவர் தோழர்
சாருமஜும்தார் அவர்களே ஆகும். அவரே இக் கட்சியின் முதல் பொதுச்செயலாளரும் ஆவார்.
இவரின் ஒப்பற்ற சாதனை என்பது, அன்றைக்கிருந்த
ரஷ்ய சமூகப்
பேரேகாதிபத்தியமான
ரஷ்ய அரசால்
உலக அளவில், தோழர் மாசேதுங் சிந்தனை
என்பது, முற்று முழுதாக
மறைக்கப்பட்டுக்
கொண்டிருந்த போது,
அந்தத் தடைகளை உடைத்து இந்திய மண்ணில் மக்கள் முன்பாக அடையாளம்
காட்டியதே ஆகும்.
புரட்சிகர சக்திகள்
என்போர், அல்லது
புரட்சியாளர்கள் என்போர், மாவோ சிந்தனை
என்பதைக் கற்றுக்
கொள்ளாமல், மார்க்சியம் என்பதைக்
கற்றுக் கொண்டதாகக்
கூறிக் கொள்ள
முடியவே முடியாது.
ஆனால், இங்கே
மனப்பாடக் கம்யூனிஸ்டுகள் என்போர் தான், மாவோவைப், புரிந்து கொள்ளாமலே, மற்றவர்களுக்கு
மாவோ பற்றிப் பாடம்
எடுத்துக் கொண்டுள்ளனர்.
நமது உலகின்
இன்றைய சகாப்தம்
என்பது, பாட்டாளி
வர்க்கப் புரட்சியின்
சகாப்தமே என்னும்
லெனனிய வழியை
சரியாக உயர்த்திப்
பிடித்தது தோழர்
மாவோ சிந்தனையே
ஆகும்.
ஏகாதிபத்தியங்கள்
என்பவை வெறும்
காகிதப் புலிகளே என்று முழங்கியதும்,
சீனத்தை ஆக்கிரமித்த
ஜப்பான் ஏகாதிபத்தியத்தை
ஓட ஓட விரட்டியதும்,
மாவோ சிந்தனையே
ஆகும்.
பாட்டாளி வர்க்கத் தலைமையிலான,
வர்க்கப் போராட்டமே
உலகின் ஒடுக்கப் பட்ட உழைக்கும் மக்களுக்கான
தீர்க்கமான போராட்டம்
ஆகும் என்பதைத்
தெட்டத் தெளிவாக
விளக்குவது
மாவோ சிந்தனையே
ஆகும்.
உலகில் முதன் முறையாக,
சோசலிசப் பாதையில் முன்னேறிச் சென்ற ரஷ்யா, காலப்போக்கில்,
முதலாளித்துவச் சுரண்டலை
உள்ளடக்கிய, சமூக ஏகாதிபத்தியமாகச்
சீரழிந்துள்ளது என்பதை
உலக உழைக்கும்
மக்களிடம் தெளிவு படுத்தியதும்
மாவோ சிந்தனையே ஆகும்.
உலகின் வர்க்கப் போராட்டச்
சிக்கல்களை, வகைப்படுத்தித் தொகுத்து மாபெரும் விவாதத்தின் மூலம்
தெட்டத் தெளிவாக்கியதும்
மாவோ சிந்தனையே ஆகும்.
தானாகவே எதுவும் மாறாது என்றும், நாமே அதற்கான முன்னணியாய் நின்று,
நடைமுறையில் செய்து காட்ட வேண்டும் என்றும்
உழைக்கும் மக்களிடமும், புரட்சிகர சக்திகளிடமும்
சுய பொறுப்பை உணர்த்ததியதும்
மாவோ சிந்தனையே
ஆகும்.
இதற்காகவே, கலாச்சாரப்புரட்சியை
சீனத்தில் நடத்திக் காட்டியதும் மாவோ சிந்தனையே
ஆகும். கலாச்சாரப்
புரட்சியின் நன்மை மற்றும் தீமைகளைத் தொகுக்க, நமக்கு அதன் பாடங்களை
விட்டுச் சென்றுள்ளதும்
மாவோ சிந்தனையே ஆகும்.
புரட்சியில் முன்னேறித் தாக்குவது அவசியமே என்ற போதும், அந்த அளவுக்குப் பின்வாங்குவதும்,
பாதுகாத்துக் கொள்வதும், புரட்சியைக் கைவிடாமல், தொடர்ந்து முன்னேறுவதும்
அவசியமே என்று ‘ பளிச் ‘ வழிகாட்டுவதும் மாவோ சிந்தனையே ஆகும்.
எந்த ஒரு நாட்டினது
புரட்சியும் கூட,
அது உலகப் புரட்சியின் அங்கமே என்று லெனினியப் பாதையில் அடித்துக்
கூறுவதும் கூட மாவோ சிந்தனையே ஆகும்.
தொழில் துறையில் வளர்ச்சி அடையாத பின்தங்கிய இந்தியா போன்ற நாட்டில்,
விவசாயத் துறையைப் பலமாக்கி, அதனை வளரும் தொழில் துறைக்கு
ஏற்றதாக்கிட, விவசாயப் புரட்சியை முன்னெடுக்க வேண்டும் என்று
தெளிவாக வழி காட்டியதும்
மாவோ சிந்தனையே ஆகும்.
பொத்தாம் பொதுவாக, முதலாளிய
அரசு என்றால் போதாது,
என்ன விதமான
முதலாளி என்றும்
நாம் உற்றுப் பார்க்கவும் வேண்டும் என்று கூரிய
மறும் நேரிய வழி காட்டுவதும்
மாவோ சிந்தனையே ஆகும்.
அதாவது, சுயமான
முதலீட்டு வாணிகம் செய்கிறாரா அல்லது
பெரும் முதலாளிகளைச் சார்ந்து,
அன்னியர்களின் மூலதனத்தைச்
சார்ந்து, தன்னுடைய மூலதனத்தை
ஒட்டுண்ணி மூலதனம் ஆக்கி
வாணிகம் செய்கிறாரா என்றும்
கவனிக்க வேண்டும் என்று துல்லியமாக
வழிகாட்டுவதும்
மாவோ சிந்தனையே ஆகும்.
அதாவது, ஒரு நாட்டை ஆள்வது
எந்த விதமான முதலாளி என்பதைத்
தெளிவாகத் தெரிந்து கொள்ளாமல்,
அந்த அரசின் பலத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், போராடவும்
முடியாது. அந்த நாட்டின் ஆளும் வர்க்கம்
சுய சார்புடைய தேசிய முதலாளியா
அல்லது ஒட்டுண்ணி தரகு முதலாளியா
என்பதை அறிந்து கொண்டு
போராடுவதே அவசியத்திலும் அவசியம்
ஆகும். இதற்கு தெளிவாக வழிகாட்டுவது
மாவோ சிந்தனையே ஆகும்.
ஏகாதிபத்தியங்களைப் பொத்தாம் பொதுவாகப் பார்க்காமல், மேல்நிலை
ஏகாதிபத்தியங்கள் மற்றும் ஏகாதிபத்தியங்கள் மற்றும்
வளரும் நாடுகள் என்று குறிப்பாகப்
பார்க்கக் கற்றுக் கொடுப்பதும்,
மாவோ சிந்தனையே ஆகும்.
மார்க்சியம் என்று மனப்பாடமாக
சொல்லித் திரிவதால் எந்தப் பயனும்
இல்லை என்றும், அதனை நமது
வாழ்க்கை நடை முறையுடன் இணைத்து
பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்
என்றும் வழிகாட்டுவது மாவோ சிந்தனையே ஆகும்.
எனவே தான்,
மார்க்சியம் என்பது வரட்டுச் சூத்திரம் அல்ல என்றும், பருண்மையான வாழ்க்கை நடைமுறைக்கு வழிகாட்டி
என்றும் நாம் கூறுகிறோம்.
இவ்வாறு தான்,
மார்க்சியம் மற்றும்
லெனினியம் என்பதன் தொடர்ச்சியாக,
மாவோ சிந்தனை என்பதும்
மார்க்சியத்தின் பிரிக்க முடியாத
பகுதியாக தன்னை நிறுவிக்
கொண்டது. தத்துவத் துறையில்
இது மாவோ சிந்தனையின்
மாபெரும் வெற்றியாகும். ஆனால், மனப்பாட மார்க்சியருக்கோ
சகிக்கவொண்ணா
சச்சரவே ஆகும்.
தத்துவத் துறையில், மார்க்சியத்தின்
வளர்ச்சியாக, மாவோ சிந்தனையில்
என்ன உள்ளது என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
தத்துவத் துறையில், மாவோ சிந்தனை என்பதற்கு முன்பு வரை, முரண்பாடு
என்பது முரண்பாடுதான் என்றும், மோதலே என்றும்
தான் பார்க்கப்பட்டது.
ஆனால், தோழர் ‘ மாவோ சிந்தனை ‘ மூலம்
மட்டும் தான், முரண்பாட்டைப் பொத்தாம் பொதுவாக பார்க்கக் கூடாது என்றும்,
அதனை நட்பு முரண்பாடு மற்றும் பகை முரண்பாடு என்று பிரித்தும் பார்க்க வேண்டும் என்றும் பிரித்துக் காண வழிகாட்டப் பட்டது.
எல்லாவற்றிலும் முரண் இருப்பது போலவே தான், எல்லாவற்றிலும்
ஒருமையும் உள்ளது என்றும்,
சில நேரங்களில் இது முற்றொருமையாக
வெளிப்படுகிறது என்றும் தெளிவாக
அடையாளப் படுத்துவது மாவோ சிந்தனையே ஆகும்.
ஆண் மற்றும் பெண் உறவு வழியாகவே
சந்ததிகள் பெருகுவது என்பது
முற்றொருமையே என்று தெளிவாக
வழிகாட்டுவது மாவோ சிந்தனையே ஆகும்.
இதேபோல், பறவை இனமே முட்டை போட முடியும் என்பதும், எருமைகள், பசுக்கள் தான் கன்றுகளை ஈன்றிட
முடியும் என்பதும் முற்றொருமையே
என்றும், இவை வேறு எப்படியும்
நடந்திட முடியாது என்றும், முற்றொருமை
பற்றி அடையாளம் காட்டுவது
மாவோ சிந்தனையே ஆகும்.
ஒன்று இல்லாமல் இன்னொன்று இல்லை என்பதும் கூட முற்றொருமை
தான் என்று அடையாளம் காட்டுவதும் மாவோ சிந்தனையே ஆகும்.
அதாவது, நேர்மறை எதிர்மறை இல்லாமல் பொருள் இருக்க முடியாது என்பதும்,
முதலாளி என்ற கூறு இல்லாமல், தொழிலாளி
என்ற கூறும் இல்லை
என்பதும், முற்றொருமையே ஆகும்.
இவ்வாறு பிரிக்க முடியாதவாறு,
தத்துவத் துறையில் மார்க்சியத்தின்
அங்கமாக இடம் பெற்றுள்ளது
மாவோ சிந்தனையே ஆகும்.
உலகில், முதன் முதலாகத் தோன்றும் எதுவும், குழப்பத்தையும், அராஜகத்தையும் உள்ளடக்கியுள்ளதைப்
போலத்தான், மேற்கண்ட அனைத்துச் சிறப்புகளையும் உள்ளடக்கியுள்ள
மாவோ சிந்தனை என்பதை, இந்தியாவில் முதன்முதலில்
அறிமுகப் படுத்தும் போதும், அதுவரை இதில், எவ்விதப் பரிச்சயமும் இல்லாத
நிலையில், மார்க்சிய லெனினியக் கட்சி
என்பதும் கூட, அராஜகம்
மற்றும் குழப்பங்களின்
கூடாரம் ஆகியுள்ளது.
இதனை சரியான மார்க்சியம்
லெனினியம் மாவோ சிந்தனை வழியில் நெறிப்படுத்தவும், சரிப்படுத்தவும்,
மார்க்சியத்தை மேலும் புத்தாக்கம் பெறச் செய்யவும், தோன்றி வரும் புதிய
புரட்சிகர சக்திகளே, புரட்சியாளர்களே
முன்முயற்சிகள் எடுக்க வேண்டும்.
இதற்கான பெரும் முன்முயற்சிகளை
சளைக்காது எடுத்து, மாவோ சிந்தனையை இந்தியாவில் அறிமுகப் படுத்திய தோழர் சாருமஜூம்தார் அவர்களை என்றும் நினைவில்
நிறுத்துவோம்!
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
நீடு வாழ்க!
இன்குலாப் ஜிந்தாபாத்!
புரட்சி ஓங்குக!

(Kalan Durai)