மேற்கு ஆப்ரிக்காவில் பிரஞ்சு காலனியாதிக்கத்தின் கீழ் உலன்ற ஒரு ஏழை நாடு “upper volta”. பக்கத்து நாடான ஐவரி கோஸ்டின் கனிம வளங்களை எடுக்க தேவையான கூலி ஆட்கள் வேண்டும் என்பதற்காக மட்டும் அடிமை படுத்தப்பட்ட நாடு தான் “upper volta”.
1960ல் பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெற்றாலும் பிரன்சின் மறைமுக காலனி நாடாகவே செயல்பட்டு வந்தது வோல்ட்டா.
பாதிரியாராக போக வேண்டும் என்ற பெற்றோரின் ஆசையை மறுத்து ராணுவ கல்லூரியில் சேர்ந்தார் சங்காரா.
சங்காராவின் சோசலிச கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத அரசு அவரை சிறை படுத்தியது. அதற்கு எதிராக சங்காராவின் நெருங்கிய நண்பர் கம்போரே புரட்சி செய்து சங்காராவை விடுதலை செய்தார். பின் மக்களின் ஆதரவில் 1984ல் ஜனாதிபதியாக பதவியேற்றார் சங்காரா.
பதவி ஏற்றதும் முதல் வேலையாக upper volta என்ற காலனியாதிக்க பெயரை Burkina Faso என்று மாற்றினார். Burkina Faso என்றால் “நேர்மையான மனிதர்களின் தேசம்” என்று பொருள். புர்கினா பேசோவில் சோசலிச சூறாவளி வீசத்தொடங்கியது. காலனியாதிக்க முதலாளித்துவ வேர்கள் ஒவ்வொன்றாக தேடி பிடித்து நருக்கினார். பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த நிலங்கள், சிறிய கனிம சுரங்கங்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டது.
அமைச்சர்கள், மேலதிகாரிகளின் சம்பளங்கள் குறைக்கப்பட்டது, அரசின் ஆடம்பர செலவுகள் குறைக்கப்பட்டது. ஐவரி கோஸ்டிற்கு கூலி ஆட்களாக தனது மக்கள் போவதை தடுக்க உள்ளூரிலேயே வேலைவாய்ப்பை ஏற்படுத்தினார்.
இதுவரை சாலைகளை பார்க்காத கிராமங்களை வரை சாலைகளும், ரயில் தடங்களும் போடப்பட்டன விவசாயம் மேம்படுத்தப்பட்டது, புர்கினா பேசோ உணவு உற்பத்தியில் தன் நிறைவடைந்தது, பள்ளி கல்வி இலவசமாக்கப்பட்டது. அதுவரை தலைநிமிர்தி வாழ எந்த காரணமும் இல்லாத புர்கினா மக்கள் தங்களை Burkinabe(தலைநிமிரந்த மனிதர்கள்) என்று அழைத்துக் கொண்டார்கள். தலைநிமிச்செய்தார் சங்காரா. பாதிரியாராக போயிருக்க வேண்டியவர் ஏசு கிருத்துவாகவே ஆனால் எப்படி இருக்குமோ அப்படி தான் சங்காரா புர்கினாவின் மீட்பரானார்.
சங்காரா தன்னை நேர்மையான மனிதன் என்று அழைத்துக்கொள்ள முக்கிய காரணம் இருந்தது. அது ஆணும் பெண்ணும் சமம் என்ற கொள்கையை பேச்சோடு மட்டும் நிறுத்தாமல் செயலிலும் காட்டியது. பிற்போக்கு தனமான ஆப்ரிக்க சமூகங்களில் பெண்களுக்கு எதிரான பல இழிவுகள் நடந்து வந்தது அதில் முக்கியமானவை Genital mutilation எனப்படும் “பெண் உறுப்பு சிதைப்பு” அதை முற்றிலுமாக தடை செய்தார் அதை செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டம் ஏற்றப்பட்டது மேலும் கட்டாய குழந்தை திருமணத்திர்கும், பெண்களை பள்ளியில் இருந்து நிறுத்துவதற்கும் தடை ஏற்படுத்தினார்.
அரசு நிர்வாகத்தில் பெண்களுக்கு சரி பங்கு இடம் வழங்கினார், உயர் பொறுப்புக்களில் பெண்களையே நியமித்தார். நாட்டில் மட்டும் இல்லாமல் வீட்டிலும் அது தொடர வேண்டும் என்று சொல்லி வாரம் ஒரு முறை வீட்டு வேலைகளை ஆண்களே சேய்ய வேண்டும், கடைக்கு சொன்று காய்கறி வாங்கி வரவேண்டும் என்று அறிவித்தார். இன்று இவை எல்லாம் சாதாரண நிகழ்வாக இருந்தாலும் பிற்போக்கு தனமான ஆப்ரிக்க நாட்டில் அன்று அவர் செய்தது சாதனையே. இதை எல்லாம் அவர் செய்யத்தொடங்கிய போது அவரது வயது 33.
அதோடு நிற்கவில்லை உலக வங்கியில் முந்தைய ஊழல் அரசுகள் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாது என்றும் இனிமேல் கடனும் வாங்க மாட்டேன் என்றார். இவனை உடனே ஒழித்துக்கட்ட நேரம் வந்துவிட்டதை ஏகாதிபத்தியங்கள் உணர்ந்தன.
சங்காராவின் நெருங்கிய நண்பரான கம்போரோவை வைத்தே அமைச்சரவை கூட்டத்தில் இருந்தவரை இதே அக்டோபர் 15ம் தேதி சுட்டுக்கொல்ல வைத்தது பிரஞ்சு ஏகாதிபத்தியம்.
அவர் நம்பியதை போலவே தனது 37வது வயதில் கொல்லப்பட்ட சங்காரா இன்று அவரது பூர்வீக கிராமத்தில் காலங்களை வென்றவராக உறங்கிக்கொண்டுள்ளார்.