நேஷனல் ஹெரால்டு பத்திரிகை….

என்னதான் விவகாரம்?

கொஞ்சம் நடுநிலைத் தராசில்

எடை போட்டுப் பார்க்கலாமா?

பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான

இந்திய மக்களின் சுதந்திரப் போராட்டக் குரலாக

1937 ஆம் ஆண்டு தொடஙகப்பட்டது

‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை .

ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் பட்டேல், புருஷோத்தம் தாஸ் டாண்டன்,

ஆச்சார்யா நரேந்திர தேவ், ரஃபி அஹமது கித்வாய் போன்ற பெரிய பெரிய தலைவர்களெல்லாம் சேர்ந்துதான் இதைத் தொடங்கினார்கள்.

சரிதானே?

அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கீழ்தான் பத்திரிகை தொடங்கப்பட்டது.

‘நேஷனல் ஹெரால்டு’ தொடர்ந்து வெளிவந்தது. பிரிட்டிஷ்காரனுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

நேஷனல் ஹெரால்டை சிறந்த பத்திரிகையாக

நடத்தத் தெரிந்த நிர்வாகத்துக்கு –

அதனைப் பொருளாதார ரீதியாக

வெற்றிகரமாக நடத்த ஏலவில்லை.

சிக்கல் ஆரம்பமானது.

ஏறத்தாழ ரூ.90 கோடி வரை நட்டம்.

சிக்கலிலிருந்து அதை மீட்டாக வேண்டும்.

அதனால், கடந்த 2002 முதல் 2011 வரை –

தொடர்ந்து 90 கோடி ரூபாயைக் கடன் கொடுத்து,

அந்த தேசபக்தப் பத்திரிகைக்கு உயிரூட்டியது காங்கிரஸ் கட்சி .

தொடர்ந்து பத்து ஆண்டுகள்,

நூறு தவணைகளாக

அந்தக் கடன் வழங்கப்பட்டது.

காங்கிரஸ் கொடுத்த கடனில்,

நேஷனல் ஹெரால்டு ஊழியர்களின்

சம்பளத்துக்கும், விருப்ப ஓய்வுக்காகவும்

ரூ. 67 கோடி வரை செலவானது.

மீதமுள்ள தொகை –

மின்சாரக் கட்டண நிலுவை, வீட்டு வரி,

குத்தகைக் கட்டணம், கட்டடச் செலவு மாதிரி

இத்யாதி செலவுக்கெல்லாம் செலவிடப்பட்டது.

இந்தக் கடன் கணக்கையெல்லாம்

தனது வரவு செலவுக் கணக்கில்

தெளிவாகக் குறிப்பிட்டு கணக்குக் காட்டியிருக்கிறது காங்கிரஸ் கட்சி என்பதையும்,

ஆடிட்டரை வைத்து முறையாகத் தணிக்கை செய்து, இந்தியத் தேர்தல் ஆணையத்திடமும் சமர்ப்பித்திருக்கிறது என்பதையும்

அடிக்கோடிட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

சரிதானே?

நேஷனல் ஹெரால்டு செய்தித் தாளால் –

அதாவது அதை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் –

வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியாத

சங்கடம் ஏற்பட்டது.

எனவே, இந்த ரூ.90 கோடி கடனும்

ஈக்விட்டி பங்குகளாக மாற்றப்பட்டன.

ஓர் அரசியல் கட்சியான காங்கிரஸ் ,

பங்குகளை வைத்திருக்க முடியாது என்பதனால் – கூடவும் கூடாது என்பதனால்….

அந்தப் பங்குகள்

‘ யங் இண்டியன்’ நிறுவனத்துக்கு

ஒதுக்கப்பட்டன.

என்ன அது யங் இண்டியன் ?

அது – மத்திய அரசின் ‘நிறுவனங்கள் சட்டம் –

பிரிவு 25 இன் ( section 25 of companies act ) கீழ் தொடங்கப்பட்ட – ஆதாய நோக்கமில்லாத ஒரு

– Not-for-profit Company – நிறுவனம்.

திருமதி. சோனியா காந்தி, ராகுல் காந்தி,

மறைந்த ஆஸ்கர் பெர்ணான்டஸ், மோதிலால் வோரா, சுமன் துபே ஆகியோர்தான்

யங் இண்டியன் நிறுவனத்தின்

நிர்வாகக்குழு உறுப்பினர்கள்.

ஆதாய நோக்கமில்லாத ஒரு நிறுவனத்தின் பங்குதாரர்களோ, நிர்வாகக் குழு உறுப்பினர்களோ, லாபம், சம்பளம் அல்லது வேறு எந்தவிதமான

நிதி பலன்களையும் பெற சட்டத்தில் இடமில்லை.

எனவே, சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ அல்லது யங் இண்டியன் நிறுவனம் சார்ந்த வேறு எவருமோ – பலனோ அல்லது லாபமோ அல்லது

நிதி ஆதாயமோ பெற்றார்கள் என்ற கேள்விக்கே

அங்கு இடமில்லை.

சரிதானே?

இப்படி இருக்கும்போது,

சட்டவிரோத ஆதாயமோ, லாபமோ, நிதியோ

பெற்றதாக எவர் சொன்னாலும்,

அது அபாண்டமான பழிதான், இல்லையா?

இதை, சுப்ரமணியன் சுவாமி சொல்லும்போது,

கூடவே லோக பரிசுத்தவான்களின் கூடாரமான

பாரதிய ஜனதாக் கட்சியும் சேர்ந்து சொல்லும்போது, பூனைக்குட்டி வெளியே வந்துவிடுகிறது.

குற்றச்சாட்டின் உள்நோக்கம்

அப்பட்டமாக வெட்ட வெளிச்சமாகிவிடுகிறது.

உண்மைதானே?

நேஷனல் ஹெரால்டின் அனைத்து வருவாயும், அனைத்து சொத்துகளும் தொடர்ந்து

அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் வசமேதான் இருக்கின்றன.

காரணம் ரொம்ப சிம்ப்பிள்!

அனைத்து சொத்துகளும்

அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்டுக்கு சொந்தமானவை. வேறு எந்தப் பங்குதாரர்களுக்கும் சொந்தமானவை அல்ல.

மட்டுமல்லாமல்,

அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் அல்லது

யங் இண்டியன் நிறுவனத்தின் எந்த ஓர்

அசையாச் சொத்தும், அசையும் சொத்துகளும் மாற்றப்படவே இல்லை.

மட்டுமில்லை,

யங் இண்டியன் நிறுவனத்திலிருந்து

ஒரு ரூபாய்கூட எடுக்கப்படவும் இல்லை.

அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம்,

யங் இண்டியன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோதிலும், அது ஆதாயம் பெற முடியாத நிறுவனம் என்பதால், அதன் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு ஒரு ரூபாய்கூடத் தர முடியாது என்பதையும் அடிகோடிட்டுக் கொள்ளுங்கள்.

உண்மையில் சொல்லப்போனால்,

அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்டின்

சொத்துகள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை.

அதன் சொத்துகள் விற்கப்படவோ,

தனிநபர் எவராலும்

பயன்படுத்தப்படவோ இல்லை.

அவை முழுதும் ஆதாயம் பெறாத நிறுவனமான

யங் இண்டியாவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

இந்த நிலையில், குற்றம் இழைத்ததாகவோ ,

தனிப்பட்ட லாபம் பெற்றதாகவோ,

எப்படி கேள்வி எழுப்புகிறது பாரதிய ஜனதா?

அங்குதான் அரசியல் சூதின்

சூட்சுமம் இருக்கிறது.

பொய்யோ புரட்டோ,

அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி,

உண்மை முலாம் பூச முயற்சிக்கவேண்டும்.

அந்த முயற்சி வெற்றி பெறாமல் போகுமென்று நன்றாகத் தெரியும்.

ஆனால் கவலையே கிடையாது.

நேரு குடும்பத்தின்மீது

அவதூறு பூசிய திருப்தி ஒன்றே போதும்.

நட்டம் ஏதுமில்லை;

நாலு பேர் நம்பினாலும் லாபம்தான்.

தேர்தல் வரும்வரை வழக்கை இழுத்தடித்து, சோனியாவும், ராகுலும் குற்றவாளிகள்

என்கிற மாதிரி தொடர்ந்து செய்திகள் வருமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

அந்த அவதூறால் கிடைக்கும்

சிறிய லாபத்தையும்

நாக்கைச் சுழற்றி சுவைக்கவேண்டும்.

அவ்வளவுதான்!

சென்ற தேர்தலுக்கு முன்,

ப்ரியங்கா காந்தியின் கணவர்

ராபர்ட் வதேரா வழக்கை வைத்துப்

பூச்சாண்டி காட்டினார்கள் அல்லவா?

அதே ஃபார்முலாதான்!

Same Blood!

“ஐயோ கடவுளே !” என்று

பத்திரிகைக்காரர்களைப் பார்த்து,

பிரதமர் மோடி மாதிரி ஓடி ஒளியாமல் –

“கார்பொரேட் முதலாளி அதானியின்

அடிமைகளே! இதோ,

நேருவின் பேரன் வந்திருக்கிறேன்! ” என்று

நெஞ்சு நிமிர்த்தி அமலாக்கத்துறை முன்னால்- கால்மேல் கால்போட்டு

ராகுல் காந்தி உட்கார்ந்திருப்பது-

சத்தியம் அவர் பக்கம் இருக்கிறது

என்கிற அசைக்க முடியாத உறுதியால்தான்!

சரிதானே?

ஆம், சரிதான்!