யார் இந்த தீஸ்தா செதல்வாட்?
கனடா நாட்டில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகம் மனித சமுதாய உயர்வுக்காக பணியாற்றிய உலகின் 17 பெண்மணிகளுக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கிறது. அதில் ஒரே ஒரு இந்திய பெண்மணியும் உண்டு அவர்தான் தீஸ்தா செதல்வாட். இவர் மனித உரிமைகளுக்குப் போராடும் ஓர் துணிச்சல் மிக்க வீராங்கனை ஆவார். மத வாதத்துக்கு எதிராகப் போராடும் இதழியலாளர். பெண்களுக்காகவும் தலித், இஸ்லாமிய மக்களின் உரிமைகளுக்காக இடைவிடாது பாடுபட்டு வருபவர்.
2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நிகழ்ந்த இனக் கலவரத்தில் மாண்டோருக்காகவும் பாதிக்கப்பட்டோருக்காகவும் நியாயமும் நீதியும் கோரி ஓர் அமைப்பை உருவாக்கினார். நீதிக்கும் அமைதிக்குமான குடிமக்கள் என்பது அதன் பெயர். குஜராத் மதக் கலவரம் குறித்து நடந்த பன்னாட்டு மத உரிமைகளுக்கான அமெரிக்கக் கமிசன் உசாவலில் சாட்சியம் அளித்தார்.
ஜூன் 10, 2002 அன்று, கோத்ரா இனவாத வன்முறையின் பின்னரான செயல்களில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் குஜராத் அரசாங்கத்துக்கு எதிராக டீஸ்டா சர்வதேச சமய சுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணையத்தில் சாட்சி கூறினார். இந்தியப் பள்ளிக்கூடங்களில் வரலாறு சமூக பாடத் திட்டங்களில் மாற்றம் வேண்டும் என்பதற்காகவும் அவற்றைத் திருத்தி அமைக்க வேண்டும் என்றும் கோஜ் (KHOJ) என்னும் ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். அதன் மக்கள் உரிமைகள் அமைப்பின் (PUHR) பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டது மோடி – அமித்ஷா குற்ற கும்பல்.
இந்துத்துவா கொள்கைகளையும், பா.ஜ.க வின் பாசிச நடவடிக்கைகளையும் எதிர்ப்பவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலம் தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொண்டு வருகிறது.
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!
மனித உரிமைப் போராளிகள் அனைவரது விடுதலைக்கும் குரல்கொடுப்போம்!
(Ganesh)