(Maniam Shanmugam)

எதற்காக புரட்சியை மேற்கொண்டோமோ அதை நோக்கிய பாதையில் நிகரகுவா நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்று அந்நாட்டின் ஜனாதிபதியும், புரட்சியை நடத் திய தலைவர்களில் ஒருவருமான டேனியல் ஓர்டேகா கூறியுள்ளார். அமெரிக்க ஆதரவுடன் நிகரகுவாவில் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்த அனஸ்டேசியோ சோமோசாவின் ஆட்சிக்கு எதிராக சாண்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணி வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தியது.