மக்களின் ஆதரவுடன் அந்த ஆட்சியைத் தூக்கி எறியவும் செய்தது. 1979 ஆம் ஆண்டில் சாண்டினிஸ்டா படைகள் ஆட்சியைக் கைப்பற்றின. புரட்சி நடந்து 44 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சி களுக்கு நிகரகுவாவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அந்நாட்டின் தலைநகர் மனாகுவாவில் நடந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். புரட்சி நிகழ்வுகள் மற்றும் அதன் பலன்களைக் காட்சிப் படுத்தும் வகையிலும் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் நடைபெற்றன.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தலைவர்கள், பல அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய நிகரகுவா ஜனாதிபதி டேனியல் ஓர்டேகா, “மிகவும் கடுமையான வறுமையில் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். எழுத்தறிவே இல்லாத சூழலும் நிலவியது. இவற்றிலிருந்து மக்கள் மீள வேண்டும் என்று நாங்கள் கருதினோம். இதற்காகவே புரட்சி நடத்தப்பட்டது. எந்த நோக்கத்திற்காக நடத்தினோமோ, அதற்கான பாதையில் நடைபோடுகிறோம். மேலும் மேம்பட்ட உலகையே நாங்கள் விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசிய அவர், புரட்சி யின் நாயகர்கள் அகஸ்டோ சீசர் சாண்டினோ, ரிகோபெர்ட்டோ லோபஸ் பெரஸ் மற்றும் கார்லோஸ் ஃபொன்சேகா உள்ளிட் டோரின் முக்கியத்துவத்தை நினைவு கூர்ந்தார். பர்கினோ ஃபசோவில் இருந்து நிகரகுவாவுக்கு வந்து புரட்சிக்கான பங்களிப்பை செலுத்திய தாமஸ் சங்கராவிற்கு புகழாரம் சூட்டினார். தென் அமெரிக்க-கரீபிய நாடுகள் கூட்டமைப்பு மற்றும் ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டது பற்றிப் பேசிய அவர், “யாரிடமிருந்தும் தள்ளி நிற்க வேண்டாம் என்பதற்காகவே அந்த மாநாட்டில் கலந்து கொண்டோம். ஆனால், எங்களது முக்கியமான பிரச்சனைகளை எழுப்புவதில் இருந்து ஐரோப்பிய யூனியனால் நாங்கள் தடுக்கப்பட்டோம்” என்று குறிப்பிட்டார்.
மக்கள் ஆதரவு
புரட்சிக்கான பாதை தொடர்கிறது என்று ஓர்டேகா கூறியபோது மக்கள் ஆரவாரத்துடன் அதை வரவேற்றனர். ஓர்டேகாவின் இடது சாரிக் கொள்கைகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வருகிறது. அண்மையில் நடத்தப் பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில், அவரது செயல்பாடுகளுக்கு 80 விழுக்காடு மக்கள் ஆதரவு தெரிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.