அம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக பெறப்பட்ட கடனை அடைப்பது கடினம் என தெரிவித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2017 இல் உடன்படிக்கையில் காணப்பட்ட பதங்களை மாற்றினார்.1.1 பில்லியன் டொலர்களிற்காக துறைமுகத்தை சீனாவின் நிறுவனமொன்றிற்கு 99 வருட குத்தகைக்கு வழங்குவதற்கு அவர் இணங்கினார்.இது துறைமுகத்திற்காக பெறப்பட்ட கடன் சுமையிலிருந்து இலங்கை ஒரளவிற்கு விடுபடுவதற்கு உதவியாக அமைந்தது என 2018 இல் பேட்டியொன்றில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
அவர்கள் துறைமுகத்தை எங்களிடம் மீள கையளிக்கவேண்டும் என விரும்புகின்றோம் என தெரிவிக்கின்றார்முன்னாள் மத்திய வங்கி ஆளுநரும், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பொருளாதார ஆலோசகருமான அஜித்கப்ரால.; கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து எங்களிற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.
முன்னர் காணப்பட்ட நிலைக்கு செல்வதே சரியான நடவடிக்கையாக அமையும்,நாங்கள் ஆரம்பத்தில் இணங்கியது போல குறிப்பிட்ட காலத்தில் நாங்கள் கடன்களை அவர்களிற்கு செலுத்துவோம் என அவர் தெரிவித்தார்.
சீன ஜனாதிபதியின் புதிய பட்டுப்பாதை திட்டத்தை பாதித்துவரும் சர்ச்சைகளை இந்த துறைமுகம் வெளிப்படுத்துகின்றது.கென்யா முதல் மியன்மார் வரை இந்த நிலை காணப்படுகின்றது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடு வறிய நாடுகளை கடன்பொறிக்குள் இழுக்கின்றது என்ற குற்றச்சாட்டுகளும் காணப்படுகின்றன.
இலங்கையில் துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கைகளை ராஜபக்சவின் கட்சி எதிர்த்துள்ள அதேவேளை பத்து வருடங்களிற்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சொந்த ஊரில் இந்த துறைமுகத்தை உருவாக்குவதற்காக சீனாவிடமிருந்து கடன்களை பெற்றார்.
இது ஒரு இறைமையுள்ள உடன்படிக்கை,இது முற்றாக கைவிடப்படாது,பாரிய மாற்றங்களிற்கும் உட்படாது என தெரிவிக்கின்றார் இந்தியாவின் பாதுகாப்பு கற்கை மற்றும் ஆய்விற்கான ஸ்மிருதி பட்நாயக்.
ராஜபக்ச அரசாங்கத்திற்கு அவசியம் என தோன்றினால் சீனா சில உடன்படிக்கையின் சில அம்சங்களை மாற்றலாம் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கையில் மாற்றம் செய்ய முனைவது இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு சாதகமான விடயமாக அமையலாம்.தேசத்தின் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் உடன்படிக்கைகளை மாற்றுவதற்கு நாங்கள் தயாராகயிருக்கின்றோம் என்பதை அவர்கள் அதன் மூலம் காண்பிக்கலாம். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்தில் இது முக்கிய விடயமாக காணப்பட்டது.
இதேவேளை அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட் இலங்கை சீனாவிற்கு இடையிலான ஒத்துழைப்பு என்பது பரஸ்பரம் சமத்தும் மற்றும் கலந்தாலோசனைகளை அடிப்படையாக கொண்டது என சீனாவின் வெளிவிவகார அமைச்சு எமக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டையை இந்து சமுத்திரத்தின் புதிய கப்பல்வாணிப மையமாக்குவதற்கும் இலங்கையின் பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்கும் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற சீனா ஆர்வமாகவுள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் சீனாவின் உட்கட்டமைப்பு திட்டங்கள் அந்த நாட்டின் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளதுடன், தனது பூகோள போட்டி நாடு,தனது தென்பகுதி எல்லையி;ல் உள்ள இந்த துறைமுகத்தை எதிர்காலத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய நோக்கங்களிற்காக பயன்படுத்தலாம் என்ற கரிசனையை இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவநோக்கங்களை கொண்டது என வெளியாகும் கரிசனைகளை சீனா நிராகரித்துள்ளது.
இந்த துறைமுகம் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான முக்கிய கடற்பாதையில் அமைந்துள்ளது.
இந்த துறைமுகம் பரஸ்பர நன்மையை உருவாக்ககூடியது, இலங்கையின் பொருளாதாரத்திற்கு உதவக்கூடியது எனவும் சீனா தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலகுவதென்றால் இலங்கை அதற்கு சமமானதாக எதனையாவது வழங்கவேண்டியிருக்கும்,என தெரிவிக்கின்றார் புதுடில்லியின் கொள்கை ஆய்வு நிலையத்தின் பேராசிரியர் பிரஹ்மா செல்லானே.
ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில் சீனா இலங்கையில் மேலும் ஆழமாக கால்பதிக்க எண்ணுகின்றது என்கின்றார் அவர்.
சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மியன்மாரின் துறைமுக திட்டம் மாற்றங்களிற்கு உட்படுத்தப்பட்டது,சீனாவுடனான அபிவிருத்த திட்டங்களை மலேசிய அரசாங்கம் இரத்துச்செய்தது அல்லது கைவிட்டுள்ளது.
இரு தரப்பு உடன்படிக்கைகளில் நீங்கள் கைச்சாத்திட்டால் அவை பின்னர் தீவிரமானவையாக மாறி விடும் என தெரிவித்தார் அஜித் கப்ரால்.
அதேவேளை நாங்கள் தேசத்தின் நலன்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஒரு அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பண்டமாற்று செய்திருந்தால் அதற்கு உரிய விதத்தில் தீர்வை காண்பதற்கான வழிமுறைகைள கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் அடுத்த அரசாங்கத்திற்குள்ளது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.