என்னைக்கேட்டா, வறுத்துக் கொண்டிருப்பவர்களின் வாய்க்கு இன்னும் ஒரு நல்ல அரிசீம்பருப்பு கிடைச்சதில்லீனுதான சொல்வேன். அல்லது நல்ல அரிசீம்பருப்பு கிடைத்திருந்தாலும் அவங்களுக்கு அதை சாப்பிடுகிற விதம்கூட இதுவரை தெரியாமல் இருக்கலாம்…
எங்க வீட்ல குறந்தபட்சம் பத்துவிதமா செய்வோம். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவிதமான தனியான ருசி சுவை, மணம், நிறம் இருக்குங்க…
குழைவாய்செய்த சூடான அரிசீம்பருப்பிற்கே மேலே நெய்விட்டு பிசஞ்சா ஒரு ருசி, நல்லெண்ண விட்டு பிசஞ்சா ஒரு ருசி அதையே சுடச்சுட வாழையிலைல போட்டு சாப்பிட்டா தனிருசி. கடேசீல கட்டியான எருமத்தயிரோடு சாப்பிட சொர்க்கத்தைக் காணலாம்.
அவரைப்பருப்பு அரிசீம்பருப்பு, பச்சைப்பயறு அரிசீம்பருப்பு,
துவரம்பருப்பு அரிசீம்பருப்பு ஏன் பச்சையான மொச்சைக்கொட்டை போட்டு செய்வது என ஒவ்வொன்றிற்கும் வேறு வேறுவிதமான ருசி இருக்கு…
அரிசீம் பருப்புக்குள்ள இளந்தேங்காயை எடுத்து துண்டுகளாக்கி, அதாவது தேங்காய் கீத்து போட்டு செஞ்சா வேறுருசி…
நேரடியா சட்டீல செஞ்சா அது ஒரு ருசி, அதையே கஞ்சிபதத்துல எடுத்து மோருடன் சாப்பிட ருசி நாக்கை கிளறும்…
அவசரத்துக்கு குக்கருல செய்வது ஒரு ரகமான ருசி. தொட்டுக்க கத்தரி+உருளை பொரியல் கொழகொழன்னு இருந்தா வேறு ருசி. சின்னவெங்காத்தை முழுசு முழுசா உரிச்சு அதை வறுத்து சேர்த்து சாப்பிட்டா அது உயர்வான ருசி. நேத்துவச்ச மட்டன்குழம்ப சுண்டவச்சு ஊற்றிப் பிசஞ்சு உள்ளே தள்ள ஆரம்பிச்சா அன்றைக்கு அதுவே வேலையாகிடும்…
கொழுமிச்சங்கா ஊறுகாயோடு சாப்பிட்டா சொர்க்கம். அதையே எலுமிச்சை ஊறுகா வேறுவிதமாக கொண்டு செல்லும்…
ஆக அரிசீம்பருப்பிற்கு இந்த ருசிதான்னு தனித்துவமான ஒன்று இல்லீங்க. அதை செய்யவேண்டிய விதத்தில் செய்யும் பக்குவம் கைகூடுவதிலும், செஞ்ச சோற்றை பிசைந்து சாப்பிடுவதிலும்கூட அரிசீம்பருப்பின் சுவை கூடும்…
அரிசீம்பருப்பின் பெருமைய பற்றி சொல்ல இன்னும் இருக்கு ஆனா எமக்கு இப்ப நேரமில்லை…
பிகு: யூட்யூப் பார்த்துட்டு அரிசீம்பருப்புன்னு ஒரு மஞ்ச சோத்தை செஞ்சு தின்னுட்டு தாழ்த்தி விமர்சித்து சந்தோசப்பட்டுக் கொண்டிருப்பவர்களை புரிய வைப்பது சிரமம். எங்க வீட்டு அரிசீம்பருப்புக்கு சொத்தை எழுதிக்கொடுக்க ஒரு கூட்டமே தயாராக இருக்கிறது என கூறிக்கொண்டு…