Skip to content
அதிபத்த நாயனார்: நுளையார் (மீன் பிடிப்பவர்). சோழநாடு, நாகபட்டினம். நவரத்தினமிழைத்த பொன்மீனைத் தாம் வைத்துக்கொள்ளாமல் சில பெருமானுக்கென அதனைக் கடலில் விட்டவர். அப்பூதியடிகள் நாயனார்: அந்தணர். சோழநாடு, திங்களூர். மகன் இறந்ததையும் மறைத்துத் திருநாவுக்கரசு சுவாமிகட்கு அமுதளித்தவர். அமர்நீதி நாயனார்: வணிகர். சோழநாடு, பழையாறை. சிவனடியார் தந்த கோவணம் காணாமற் போக, அதற்கு நிறையாக மனைவி மக்கள் சொத்துகளுடல் தம்மையும் சிவனடியாருக்குத் தரமுற்பட்டவர். 4… அரிவாட்டாய . நாயனார்: வேளாளர். சோழநாடு, கணமங்கலம். சிவநிவேதனத்துக்குரிய. பொருள் சிந்தியதற்காகத் தமது கழுத்தை அறுக்க முற்பட்டவர். ஆனாய நாயனார்: இடையர். மழநாடு,. மங்கலவூர் – பசு மேய்க்கும்போது ஐந்தெழுத்தைப் புல்லாங்குழலில் அமைத்து வாசித்தவர். இசைஞானியார்: ஆதி சைவர். நடுநாடு, திருநாவலூர். சுந்தரமூர்த்தி சுவாமிகளை மகனாகப் பெற்று வளர்த்த பெண்மணியார். இடங்கழி நாயனார்: அரசர். கோனாடு, கொடும்பாளூர். அடியாரைத் தாம் வழிபாடு செய்வதற்காகத் தேவைப்பட்ட நெல் திருடினவர்க்கு மேலும் பொருளும் நெல்லும் தந்தவர். இயற்பகை நாயனார்: வணிகர். சோழநாடு, காவிரிப்பூம்பட்டினம். சிவனடியாருக்குத் தமது மனைவியையே தானமாகக் கொடுத்தவர். இளையான்குடி மாற நாயனார்: வேளாளர், இளையான்குடி – விதைத்த நெல்லெடுத்து வீட்டின் கூரையை விறகாகப் பயன்படுத்தி அடியார்க்கமுதளித்தவர் உருத்திர பசுபதி நாயனார்: அந்தணர். சோழநாடு, திருத்தலையூர் அல்லும்பகலும் திருச்குளத்து நீரில் சுழுத்தளவின் நின்று ஸ்ரீ ருத்திரமந்திரம் செபித்துவழிபட்டவர். 11 எறிபத்த நாயனார்: சோழநாடு, கருவூர் _ பூக்குடலையைச் சிவனடியாரிடமிருந்து பிடித்திழுத்துச் சிதறச் செய்த மன்னன் பட்டத்து யானையை வெட்டியவர். ஏயர்கோன் கலிக்காம நாயனார்: வேளாளர். சோழநாடு, திருப்பெருமங்கலம். சிவபெருமானையே தூதாக விடுத்த வன்றொண்டரை: இகழ்ந்து பின்பு திருவருள் விளையாட்டால் அவர்தம் நண்பரானவர். ஏனாதி நாத நாயனார்; சான்றார். சோழநாடு, எயினனூர் – போர்புரியும்பகைவன் நெற்றியில் திருநீற்றைக் கண்டதும் அவனாற் கொல்லப்படும்படி நடந்து கொண்டவர். ஐயடிகள் காடவர்கோன் நாயனார்: குறுநில மன்னர். தொண்டை நாடு, காஞ்சிபுரம் _ பதவியை வெறுத்துத் தலயாத்திரை செய்து சேத்திர வெண்பாவால் நிலையாமை கூறியவர். இப்பாடல்கள் சைவத் திருமுறைகளின் 11 ஆம் திருமுறையில் ‘சேர்க்கப்பட்டுள்ளன. கணநாத நாயனார்: அந்தணர். சோழநாடு, சீகாழி _ திருஞானசம்பந்தரை வழிபட்டுச் சரியைத் தொண்டர்க்குப் பயிற்சி தந்தவர். 16 கணம்புல்ல நாயனார்: இருக்கு வேளூர்: _ புல் விற்று நெய் கொண்டு திருவிளக்கெரித்தவர்; நெய்யினால் தமது தலைமுடியையே எரித்துவர். கண்ணப்ப தாயனார்: வேடர். தொண்டைநாடு, உடுப்பூர் – ஆறே நாளில் அளவுகடந்த பக்தி செய்து காளத்தியப்பருக்குத் தம் கண் அப்பியவர். கலிக்கம்ப நாயனார்: வணிகர். நடுநாடு, பெண்ணாகடம் ._.. தமது பழைய வேலையாள் சிவனடியானாக வந்தபோது தாமும் அவனை வழிபட்டு, அவனை வழிபடாத தம் மனைவியின் வகையை வெட்டியவர். : கவிய தாயனார்: செக்கார், தெர்ண்டை நாடு, திருவொற்றியூர் – திருவிளக்குக்கு எண்ணெய் இன்மையால், தமது இரத்தங்கொண்டு எரிக்க முயன்றவர். கழறிற்றறிவார் நாயனார்: (சேரமான் பெருமாள் நாயனார்) – அரசர். மலை நாடு, கொடுங்கோளூர் – நடராசர் பாதச் சிலம்பொலி கேட்கத் தாழ்தீதமையால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தோழமை பெற்றவர். சிவபெருமானுடைய திருமுகப்பாசுரம் பெற்றவார். கயிலை சென்று ஞானவுலா பாடியவர். 21 கழற்சிங்க நாயனார்: . குறுநில மன்னர். சிவபூசைக்குரிய பூவை மோந்ததற்காகதீ தம் மனைவியின் மூக்கை சிவனடியார் ஒருவர் ௮றுத்த தண்டனை போதாதென்று அம்மலறை எடுத்த அவள் கையையும் வெட்டியவர். காரி நாயனார்: சோழநாடு, திருக்கடவூர் – கோவை பாடிப் பொருள் பெற்று ஆலயப் பணி செய்தவர். காரைக்காலம்மையார் (பேயார்) : வணிகர், சோழநாடு, காரைக்கால் . சிவ பெருமானை வேண்டி மாம்பழமும் பேய் வடிவமும் பெற்றவர். ஆலங்காட்டில் ‘ ஆடல் கண்டவர். மூத்த திருப்பதிகம் முதலிய பதிகங்கள் பாடியவர். இப்பதிகங்கள் சைவத்திருமுறை 11ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. குங்குவியக்கலய தாயனார்: அந்தணர். சோழநாடு, திருக்கடவூர் – மனைவியின் நாலியை விற்றுக் குங்குலியம் வாங்கியவர். சாய்ந்த இலிங்கத்தைத் தம் கழுத்தின் பூமாலை கொண்டு நிமிர்த்தியவர். குலச்சிறை தாயனார்: பாண்டியநாடு, மணமேற்குடி – மன்னன் சமணனாயிருந்த போதும் தாம் சிவனடியாரை வழிபட்டவர். திருஞானசம்பந்தரை அழைத்து வந்து அரசனையும் நாட்டையும் சைவமாக்கியவர். கூற்றுவ நாயனார்: குறுநில மன்னர். களந்தை ._. தில்லை வாழ்ந்தணர் தமககு முடிசூட்டமறுக்கவே, தில்லையம்பலவன் [திருவடிகளையே முடியாகச் சூட்டப் பெற்றவர். கோச்செங்கட் சோழ நாயனார்: (அரசர். சோழநாடு – முற்பிறவியில் சிலந்தியாகச் சிவபூசை செய்தவர். எழுபது சிவாலயங்களைக் கட்டியவர். கோட்புலி நாயனார்: வேளாளர். சோழநாடு, திருநாட்டியத்தான்குடி – சிங்கடி, வனப்பகை என்ற இரண்டு புதல்வியரைச் சுந்தரமூர்த்தி சுவாமிகட்கு அர்ப்பணம் செய்தவர். சிவபூசைக்குரிய நெல்லையுண்ட சுற்றத்தாரனைவரையும் (சீசு உட்பட) கொன்றவர். சடைய நாயனார்: ஆதி சைவர். நடுநாடு, – திருநாவலூர் _. . சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பிள்ளையாகப் பெற்று அவருக்குச் சடங்கவி சிவாசாரியர் மகளைத் : திருமணம் செய்விக்க முயன்றவர். சண்டேசுவர நாயனார்: அந்தணர். சோழநாட்டு, திருச்சேய்ஞ்ஞலூர் – *யிடேகப் பாற்குடத்தைத் தம். தந்தை காலால் இடறியதைக் கண்ணுற்றதும் அவரது காலை வெட்டித் தொண்டர்க்கு நாயகம் பெற்றவர். சத்தி நாயனார்: வேளாளர். சோழநாடு, விரிஞ்சியூர் _ சிவனடியார்களைக் குறை கூறுபவார்களுடைய நாக்கை அறுத்தவர். சாக்கிய நாயனார்: வேளாளர். திருச்சங்கமங்கை _ மறவாது நாடோறும் சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து வழிபட்டவர். சிறப்புலி நாயனார் அந்தணர். சோழநாடு, திருஆக்கூர் _ அடியார்கட்கு அமுதும் பொருளும் தந்தவர். சிறுத்தொண்ட நாயனார்: .மாமாத்திரப் பிராமணர். சோழநாடு, திருச்செங்காட்டாங்குடி _ வாதாவிப்போரில் வென்றவர். சிவனடியார்க்குத் தமது ஒரே மகனைக் கறியாகச் சமைத்து வைத்தவர். சுந்தரமூர்த்தி சுவாமிகள்: ஆதி சைவர். நடுநாடு, திருநாவலூர் – திருத்தொண்டத்: தொகை பாடியவர், இறைவனைத் தூது கொண்டவர்; முதலையுண்ட பிள்ளையை வருவித்தவா். இவர் அருளிய பதிகங்கள் ஏழாவது திருமுறை வடிவில் உள்ளன. செருத்துணை நாயனார்: வேளாளர், ‘ சோழநாடு – தஞ்சாவூர் – கழற்சிங்க நாயனாருடைய மனைவி சிவபூசைக்குரிய பூவை மோந்ததற்காக அவள் மூக்கை. அறுத்தவர். சோமாசிமாற நாயனார்; அந்தணர். சோழநாடு, திருஅம்பர் _ வேதவேள்வி செய்து, சுந்தரமூர்த்தி சுவாமிகளை வழிபட்ட வர். தண்டியடிகள் நாயனார்: சோழநாடு, திருவாரூர் – பிறவிக். குருடரஈயிருந்தும் ் திருக்குளப்பணி செய்து குருடு நீங்கிச் சமணரை வென்றவர். தவல திருக்குறிப்புத் தொண்ட நாயனார்; ஏகாலியர். தொண்டைநாடு, காஞ்சிபுரம் சிவனடியாருக்கு வாக்களித்தவாறு துஷ்யைத் கோயக்துலர்த்தித் தர முடியாமற் போனபடியால் தமது தலையைக் கல்லின் மீது மோதிக் கொள்ள முயன்றவர்? திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள்: அந்தணர், சோழநாடு, .சீகாழி – உமா தேவியாரால் ஞானப்பால் ஊட்டப்பெற்றவர். தேவாரம் பாடி எலும்பைப் பெண்ணாக்குதல் முதலிய பல அற்புதங்கள் செய்து, தமது திருமணத்துக்கு வந்தவர்கள் : அனைவருக்கும் முத்தி தந்தவர். இவர் அருளிய பதிகங்கள் 1, 2 3 திருமுறைகள் வடிவிலுள்ளன. 41 திருநாவுக்கரசு சுவாமிகள்: வேளாளர். நடுநாடு, திருவாமூர் – கருங்கல்லோடு கடலில் வீழ்த்தப்பட்டவர். ஐந்தெழுத்தோதிக் கடலில் மிதந்து கரையேறிப் பல தேவாரங்கள் பாடிக் ‘ கைத்தொண்டு செய்து முக்தியடைந்தவா்; இவர் அருளிய பதிகங்கள் 4,5,6 ஆம் திருமுறைகளில் உள்ளன. திருநாளைப்போவார் நாயனார் (நந்தனார்: புலையர். சோழநாடு, ஆதனூர் _? தில்லையைக் காண விரும்பித் தீப்புகுந்து முனிவராயெழுந்து. சிற்றம்பலவன் திருமுன்பு திருவருளில் மறைந்தவர். திருநீலகண்ட நாயனார்: குயவர். சோழநாடு, சிதம்பரம்.) அயலறியாவண்ணம் மனைவியின் சபதத்துக்குடன்பட்டு அவளைத் தீண்டாது இளமையிலும் முதுமையிலும் இல்லறம் நடத்திப் பின் திருவருளால் இளமை பெற்றவர். திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்: பாணர். நடுநாடு, திருஎருக்கத்தம்புலியூர் – – திருஞானசம்பந்தருடன் சென்று யாழிசைத்தொண்டு புரிந்தவர். திருநீலநக்க நாயனார்: அந்தணர். சோழநாடு. சிவபெருமான் திருமேனி மீது விழுந்த சிலம்பியைப் போக்கத் தம் வாயால் ஊதிய தம் துணைவியைக் கடிந்தவர். பின்னர்ச் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பெற்றவர். திருஞானசம்பந்தருடன் பல தலங்களுக்கும் சென்றவர். இறுதியில் திருஞான சம்பந்தர் திருமணத்தில் கலந்துகொண்டு அந்நிலையில் இறைவன் திருவடி சேர்ந்தவர். திருமூல நாயனார்: இடையார். சோழநாடு, சாத்தனூர் – மூலன் உடலில்தாம் புகுந்து மூவாயிரம் ஆண்டிருந்து திருமந்திரம் அருளிச்செய்தவர். திருமந்திரம் பத்தாம் சைவத்திருமுறையாகவுள்ள து. நமிநந்தியடிகள் நாயனார்: அந்தணர். சோழநாடு, ஏமப்பேறூர் _ தண்ணீரால் விளக்கெரித்தவர். திருவாரூர்ப் பிறந்தாரையெல்லாம் சிவசாரூப்பியராகக் கண்டவர். நரசிங்க முனையரைய நாயனார்: குறுநில மன்னர். நடுநாடு. சுந்தரமூர்த்தி சுவாமிகளை வளர்த்தவர். சிவவேடம் பூண்ட காமக்குறி மலர்ந்த தூர்த்தனையும் வழிபட்டவர். 2 49, நின்றசீர் நெடுமாற நாயனார்: அரசர். பாண்டிநாடு, மதுரை – திருஞானசம்பந்தர் தந்த திருநீற்றால் சுரம் நீங்கி அவர் திருவாக்கால் கூன் நிமிரப்பெற்றுச் சைவரானவர். . 30. நேச நாயனார்: சாலியர். காம்பீலி நகரம் – சிவனடியார்கட்கு ஆடை நெய்து கொடுத்தவர். 31 புகழ்ச்சோழ நாயனார்: அரசர். சோழநாடு, உறையூர் _ பகைவனது அறுபட்ட தலையிற் சிவசின்னமாகிய சடை கண்டஞ்சி உயிர்விட்டவர். புகழ்த்துணை நாயனார்: ஆதிசைவர். செருவிலிபுத்தூர் _ சிவபூசைக்குகவியாகப் பஞ்ச காலத்தில் இறைவனால் காசு அளிக்கப்பெற்றவர். பூசலார் நாயனார்: அந்தணர். தொண்டைநாடு, திருநின்றவூர் _ மனத்திலேயே கோயில் கட்டிச் சிவவழிபாடு செய்தவர். 54, பெருமழலைக்குறும்ப தாயனார்: பெருமிழலையூர் – சுந்தரமூர்த்தி சுவாமிகளை வழிபட்டு யோகத்தால் அவர் கயிலை செல்லுதலறிந்து தாமும் கயிலை சென்றவர். .மங்கையர்க்கரசியார் (மதுரை அரசியார். பாண்டிநாடு _ திருஞானசம்பந்தரை வரவழைத்துத் தமது கணவரையும் நாட்டையும் சைவ நெறிப்படுத்தியவர். மானக்கஞ்சாற நாயனார்: வேளாளர். கஞ்சாறூர் – திருமணம் தொடங்கும் போது திருமணப் பெண்ணாகிய தம் மகளின் தலைமயிரை அறுத்துச் சிவனடியாருக்குத் தந்தவர். முருக நாயனார்: அந்தணர். சோழநாடு, திருப்புகலூர் _ புட்பத்தொண்டு செய்து திருஞானசம்பந்தர் திருமணத்தில் முத்திபெற்றவர். முனையடுவார் தாயனார்: வேளாளர். சோழநாடு, திருநீடூர் _ கலிக்குப்போர் செய்து அக்கூலி கொண்டு சிவனடியாரை வழிபட்டவர். மூர்க்க நாயனார்: வேனாளர். தொண்டைநாடு, திருவேற்காடு – சூதாட்டத்தாற் கிடைக்கும் பொருள் கொண்டு சிவனடியார்களை வழிபட்டவர். ‘ மூர்த்தி நாயனார்: வணிகர், பாண்டிநாடு, மதுரை – சந்தனம் தருகிற திருப்பணியில் முட்டுபாடு நேரவே முழங்கையை அரைத்தவா; திருநீறு, உருத்திராக்கம், சடைமுடி ஆகிய மூன்றையும் கொண்டு அரசாண்டவர். மெய்ப்பொருள் தாயனார்: குறுநில மன்னா. நடுநாடு, திருக்கோவலூர். வஞ்சித்துத் தம்மைக் கொல்லும் சிவவேடதாரியைக் காப்பாற்றித் தன் உயிர் விட்டவர். வாயிலார் நாயனார் வேளாளர். தொண்டைநாடு, மயிலாப்பூர் _ மானசீகமான ஞான பூசை செய்தவர். விறன்மிண்ட நாயனார்: வேளாளர். மலைநாடு, செங்குன்றூர் .. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடுதற்குக் காரணமாயிருந்தவர்.மேற்கூறிய விவரங்களுள் சிலருடைய மரபு, நாடு, ஊர் முதலியன குறிக்கப்படாமைக்குக் காரணம், சேக்கிழார் சுவாமிகள் அவற்றைப் பெரியபுராணத்துள் கூறாமையேயாகும். அறுபத்து மூவர் பெயர்கள் அகரவரிசையில் கோவை செய்யப்பெற்று எண்கள் தரப்பட்டுள்ளன. நன்றி : கோவிற் களஞ்சியம்
Post navigation