நடுவே இப்பொழுது மரம் நாட்டப்பட்டிருக்கும் இடத்தில் மூன்று அல்லது நான்கு அடி உயர சுமை தாங்கி இருந்தது சதுர வடிவில் .அதன் நாற்புறமும் மூன்று பக்க வீதிகள் எங்கு செல்கின்றன என்ற அடையாள குறியீட்டு எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தன, 1972ம் ஆண்டளவில் வேக கட்டுப்பாடினை இழந்த கார் ஒன்று வேகமாக மோதியதினால் அச் சுமைதாங்கி இருந்த அடையாள சுவடு இல்லாமல் போய் விட்டது.
மாலை நேரங்களில் இளைஞர்கள் அச் சுமைதாங்கியில் அமர்ந்த்து பொழுது போக்கான கதைத்துக்கொண்டிருப்பார்கள் .இடைக்காட்டில் நில அடையாள இடமாக அந்த நேர காலகட்டத்தில் இருந்தது.அவ் நிழல் மிகு சந்தியில் பகல் நேர காட்சிகளாக அதிகாலையிலே3 /4 மணிக்கே மெலிதாக ஆரவாரம் தொடங்கி விடும் ! வல்வெட்டியில் இருந்து சுன்னாக சந்தைக்கு பொன்னு என்பவர் வாகனம்(லொறி) ஒன்றினை எம் ஊர் இத்தியடி சந்தியினை மையப்படுத்தி இயக்கிக்கொண்டிருந்தார்.
இதனை பயன் படுத்தி சுன்னாக சந்தையில் தம் விளைபொருட்களினை விற்பனை செய்யவும் மரக்கறிவகைகளையும் புளியம்பழம் கொள்வனவு செய்யவும் விவசாயிகள், உள்ளூர் வியாபாரிகள் என இங்கு இவ் வாகனத்தின் வருகையினை எதிர் பார்த்து நேரம் தெரியாமால் சிலர் அதிகால இரண்டு மணிக்கே வந்து ஊர் புதினம் உள்பட பல விடயங்களினை தங்களுக்குள் பரிமாறி சுன்னாக லொறியில் சுன்னாகம் செல்வார்கள் .
அந்த கால நேரம் கும்மிருட்டு என்ற படியால் லாம்பு விளக்கினை( லாந்தர்) பாவித்து விட்டு சுன்னாக ம் புறப்படும் சமயம் அயல் வீடுகளில் ஒப்படைத்து செல்வார்கள் , அதன் பின் அதிகாலையில் நீர் இறைக்க இவ்வழியே செல்லும் தருணமதில் 5 /6 கிடுகு வண்டில்கள் வரிசையாக லாந்தர் விளங்கு கீழே தொங்க விட்டு வரிசையாக வந்து நிறுத்தி எருதுகளை வண்டியில் இருந்து விலக்கி ஆறவிட்டு அவற்றிற்கு தீனி போட்டு ஆற விடுவார்கள்.அதே நேரமதில் இத்தியடி சந்தியின் தென்புறம் ஒரு தே நீர் சிற்றுண்டிச்சாலையில் தேனீர் அருந்தி ஓய்வெடுப்பார்கள் !
கொஞ்ச நேரம் கடக்கையில் எரு லொறி,வைக்கோல் லொறி,விறகு லொறி, என வந்து வரிசையாக நிற்கையில் ஊரில் தேவைப்படுவோரிடம் புரோக்கர்மார் தொடர்பு கொண்டு விலை பேரம் பேச ஆரம்பிக்கையில் உள்ளூரில் இருக்கும் வாடகை கார்கள் 5 / 6 கொண்டுவந்து நிற்பாட்டி கார்களுக்கு சாம்பிராணி குச்சுக்களை கொழுத்தி நறுமணமாக்கி கையில் உள்ள மஞ்சள் துண்டினால் காரினை மேலும் துடைத்து மெருகேற்ற்வார்கள் வாடகை சவாரியினை எதிர் நோக்கிய படி. அம்மி ஆட்டுக்கல் பொளிவோர்,ஆடுவாங்கவருவோர், சைக்கிள் புடவை வியாபாரி என அங்கு கூடி ஆரவாரமாக இருக்கையில் இந்த நிகழ்வுகளை வேலையற்று இருக்கும் சிலர் வயோதிபர்கள் உட்பட நிறைய ஒன்று கூடினின்று பொழுதுபோக்கு அம்சமாக கதைப்பார்கள்.
நேரம் செல்ல செல்ல சந்தைக்கு போவோர் வருவோர் என இத்தியடி சந்தி ஒரு நுட்பமான முறையில் கலகலப்பாக மதியவேளையினைக்கடக்கையில் மதிய உணவருந்தியபின் வரும் வியர்வை உஸ்ணத்தினை தணிக்க மீண்டும் இங்கு மர நிழல்களில் கூடுவார்கள், மீன் வியாபாரிகள்,பலாலியில் இருந்து தங்கம் எனும் தோசை வியாபாரம் செய்யும் பெண்மணியின் கூவலும்,யாசகர்களின் அமைதியான செயற்பாடுகளும், திரைப்பட விளம்பர காரின் விளம்பர ஒலியும் இன்னும் ஆரவார நிகழ்வாகும்!
இவ்வளவு நிகழ்வுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் காரணிகளாக மின்சார இணைப்புக்களும் மனித திடீர் வளர்ச்சியினை நேக்கிய உந்துதலும் சமூகம் சார்ந்த அக்கறையின்மையுமே காரணமாகின்றன ! மீண்டும் இது போன்ற அழகு தரு நிழல் தரு அரிய மரங்கள் நாட்ட மின் இணைப்பு முறைகள் தடுத்து நின்றாலும் உயரம் குறைவான மரங்களை நாட்டி மீண்டும் அழகூட்டி அடுத்த சந்ததியினருக்கு நல்லதினைச்செய்வதே மனித அழகு !
வெளி நாட்டில் இருந்து எம் ஊர் வரும் அர்பணிப்பு நிதிகள் சீமெந்து, கல், மண், என செலவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகின்றதே ஒழிய தகுந்த இடங்களில் மர நடுகை செய்ய இன்னும் கூடிய கவனம் எடுக்க ஒரு தொகை நிதியினை ஒதுக்குவதினால் இனி ஒரு அழகு சமுதாய சூழலினை ஏற்படுத்த முடியும் , உள்ளூரில் வீதி ஓரங்களில் பலா மரம் இலுப்பை மரம் வேப்ப மரம் கூடுதலாக நாட்டி அழகு செய்வதே எமது அழகு ! அழகு ! இவ் சந்தியில் இருந்து ஒரு வீதி பலாலி விமான நிலயதிற்கும், மற்றைய வீதி தொண்டைமானாறு கான்கேசன் துறை வீதிக்கும் , அடுத்த வீதி யாழ்பாணம் தொண்டைமாறு வீதியையும் சென்றடைகின்றது ! அழகு ! அழகில் அழகு! அழகு !