இந்திய மக்களின் இதயத்தில் இறுக இடம் பிடித்த டாடா(TATA)

ஆனால் அவரின் அயராத மனித நேயமிக்க உழைப்பு பல இலட்சம் இந்திய மக்களின் வீடுகளில் அடுப்பு எரிவதற்கும் குடும்பங்களாக வாழ்வதற்கும் அடி கோலியது என்றால் மிகையாகாது.

இலாபம் ஒன்றே நோக்கம் என்பது வியாபாரத்தில் தொழில் முனைவில் ஆதாரமாக செயற்படும் பல தொழில் அதிபர்கள் மத்தியில் இவர் வேறுபட்டுத்தான் பார்கப்படுகின்றார்.

இதனை அவரின் 50 வருட நேரடித் தலைமையின் கீழ் செயற்படும் டாடா குழுமத்தின் செயற்பாடுகள்தான் கோடிட்டுக் காட்டி நிற்கின்றன.

நேரடியாக பத்து இலட்சம் வரையிலான மக்களுக்கான நேரடி வேலை வழங்கலையும் மறைமுகமாக ஐம்பது இலட்சம் வரையிலான் மக்களுக்கு வேலை வாய்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கும் டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் பல்வேறு கம்பனிகளின் தலைவராக 50 வருட காலம் கோலோச்சியிருக்கின்றார்.

தொழில் நிறுவனத்திற்கு அப்பால் இதன் இலாபம் என்ற சிந்தனைக்கு அப்பால் வருவாய் மூலம் கிடைத்த பணத்தில் 65 வீதமானவரையிலான பகுதியை கொண்டு தொடர்ச்சியாக நம்பிக்கை நிதியம் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேலோங்க செயற்படுகின்றன பல்வேறு அமைப்புகளின் தலமைப் பொறுப்பாளராக அவரை செயற்பட வைத்திருக்கின்றது.

தனது மாணவ வயதில் அமெரிக்காவில் தனது தந்தையாரின் விருப்பான கம்பனியின் தொழில் சார்ந்த இயந்திர பொறியியல்(Mechanical Engineering) மாறாக தனக்கு விருப்பமான கட்டக்கலை பொறியியலாளர்(Architecture(Civil) Engineering) படிப்பை தொடர்ந்த ரத்தன் டாடா(Ratan Naval Tata) அவசரமாக டாடா குழுமத்தின் பொறுப்பை ஏற்பதற்காக இந்தியா திரும்ப வேண்டிய சூழல்.

அது தனது பல்கலைக் கழக மாணவ வாழ்வின் அமெரிக்க நாட்டின் காதலியை இந்தியா வரவழைத்து திருமணம் செய்து வாழ்வதை தடுத்தும் நிறுத்தியது.

முடிவற்றுப் போகலாம் என்று நம்பப்பட்ட அன்றைய சீன இந்திய யுத்தம் காதலியின் அமெரிக்க பெற்றோருக்கு தமது மகளை இந்திய மருமகளாக இந்தியா அனுப்புவதற்கு நம்பிக்கையான சமிக்கைகளை கொடுக்கவில்லை…?

இதனால் காதல் நினைவுகளுடன் மட்டும் வாழ்க்கை பூராக வாழ்ந்த ஒரு மனிதனாக ரத்தன் டாடாவை உருவாக்கியும் விட்டது.

பருத்தியில் இருந்து ஆரம்பித்து எக்கு(Iron) தொழில் அன்று அதிகம் கோலோச்சிய டாடா கம்பனி இதன் அடுத்த கட்டமாக இயந்திரங்களை செய்தல் என்றவாறு அதிகம் பயணப்படத் தொடங்கியிருந்த காலம் அது.
இந்த புதிய பாய்ச்சலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு எந்திரங்களுக்கான எந்திரவியலை படிக்க வேண்டும் என்ற தனது தந்தையின் விருப்பத்தை இன்னும் சிறப்பாக சொல்லப் போனால் தனது குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தை பாட்டிNavajbai Tata)யின் விருப்பத்தை பெரியப்பாவின் விருப்பத்தை மறுத்து அவர் கற்ற(Cornell University College of Architecture, Los Angeles) கட்டக் கலைத்தான் அவரை உலகின் வியக்கத்தக்க ஹோட்டல்கள் பலதை உருவாக்குவதற்கு உதவியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

தனது தாய் தந்தையர் இருவரும் குடும்ப உறவில் இருந்து பிரிந்து அவரது தாயர் மறுமணம் செய்த நிலையில் பாட்டியின் அரவணைப்பில் அதிகம் ரத்தன் டாடா வளர்ந்தார்.

அவரின் வளர்பின் வெளிப்பாடுகள்தான் அவரின் இறுதி மூச்சுவரை தொடரந்ததக உணர முடிகின்றது

அது பகமையினால் எதனையும் சாதிக்க முயலாதே நட்பால் சாதிக்க முயலு என்பதாக… இன்னும் சொன்னப் போனால் பிழையை பிழையால் சந்திக்காதே மாறாக அதனை சரியால் சந்தி என்பதாக
இது உனது தொழில் போட்டியில் முக்கியமாக கடைபிடி என்பதாக தொடர்ந்ததை அவரின் 50 வருட கால தொழில் முனையும் காலத்தில் அவதானிக்க முடியும்

வாழ்க்கை அனுபவம் மிகுந்த பாட்டியின் வளர்பில் தனது தந்தையைப் பிரிந்து மறுமணம் செய்த தாயாரின் பிரிவிற்கு பின்னர் பாடசாலை வாழ்க்கையில் சக மாணவர்கள் பலரினதும் ஏளனங்களுக்கு மத்தியில் அவமானங்களால் கோவப்படாத நிதானமான அணுகு முறையைக கற்றுக் கொடுத்த பாட்டிதான் இவர் மேற்படிப்பற்காக அமெரிக்கா செல்வதற்கு அதிக உந்துணையாக இருந்திருப்பார்.

இதற்கு முதல் மூன்று தலமுறையாக தொழில் முனைவில் கோலோச்சிக் கொண்டிருக்கும் குடும்பத்தில் இருந்த வசதி 1960 களில் அமெரிக்கா வரை சென்று கல்வியைப் பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியது இந்தியா என்ற வறுமை மிகு நாட்டில் இருந்து.

பருத்தி(Cotton) என்பது இங்கிலாந்தின் கோலோச்சும் தொழில் துறை என்பற்கு மாற்றீடாக இந்தியாவின் கோலோச்சும் தொழில் துறையாக ஆரம்பித்த இவரின் கொள்ளுத் தாத்தா ஜாம்செட்ஜி டாடா அடிவந்தவர்.

இவர் மத்தியதரை கடற்பகுதி(ஈரான்)(Persia)யில் இருந்து இந்தியாவிற்கு 1800 களின் முற் கூற்றில் அகதிகளாக வந்தவர்களின்(GGG; Jamshedji Nusserwanji Tata)  வழித்தோன்றல்(Parsi).

இதற்கு அவர் தெரிவு செய்த இடத்தை பலரும் தகுதியற்ற இடம் என்ற போதும் அதனை ஒரு சவாலாக கொண்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்த எண்ணை ஆலை ஒன்றை நியாய விலைக்கு பெற்று இதிலிருந்து பருத்து தொழிலை ஆரம்பித்து அதிகம் வருவாயைப் பெற்றார்.

இது அடுத்த கட்டமாக இரும்பு என்பது 2ம் உலகப் போருக்கு பின்னரான நாடுகளை கட்டiமைத்தல் என்பதில் அதிகம் தேவைப்படும் உலோகமாக இருந்த காரணத்தினால் இதனை நோக்கி விரிபுபடுத்தி எக்கு தொழிலில் தம்மை ஆளமாக காலூன்ற வைத்ததன் தொடர்ச்சிதான் எக்கு போல் பலமிக்க வாகனங்களை அதிகம் அது புகையிர எஞ்சின் பெட்டிகள் தண்டவாளங்கள் பேருந்துகள் பார ஊர்த்திகள் கார் என்றாக விரிவடையச் செய்தது.

இந்த ஊர்வன எல்லாவற்றிலும் டாடா கோலோச்சியது போன் உண்பன எல்லாவற்றிலும் இன்று கோலோச்சி நிற்கின்றனர்.

மனித வாழ்வில் பாவைனையில் உள்ள அனைத்திலும் இன்று டாடா இருக்கின்றது என்பதாக தம்மை விரிவுபடுத்திக் கொண்டனர்.

இதனை அடுத்த கட்டத்திற்கு உலக மயமாக்கலுடன் வர்த்தகம் என்றாக உலகில் உள்ள பல நாடுகளுன் இணைந்துதான் பயணப்பட முடியும் என்பதாக அதிகம் ஏற்பட்ட இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆட்சி காலத்தில்….

இந்தியாவின் கார் உற்பத்தியை பற்றி போட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட அவர்கள் இந்தியாவின் வாகனங்களா…? என்று எள்ளி நகையாடி எட்டி நின்ற போது….

பின்னொரு காலத்தில் போட்(Ford) நிறுவனத்தின் ஐரோபிய தயாரிப்பான ஜாக்குவார்(Jaguar) , லான்ட் றோவர்(Land Rover) போன்றவை நட்டததை நோக்கி நகர்கையில் இந்தியாவில் இதற்கான தளத்தை அமைத்து கொடுத்ததில் ரத்தன் டாடா இன் பங்கு முக்கியமானது.

இதில் முன்பு தமது நிறுவனத்தின் கார் உற்பத்தியிற்கு தொழில் நுட்ப ஒத்துழைப்பு வழங்க மறுத்த பழைய விடயத்தை பகையாக எடுக்காமல் காலம் வரும் வரை காத்திருந்து வாய்பைக் பயன்படுத்தியது இவர் தனது பாட்டியிடம் கற்றுக் கொண்ட பகை தவிர்த்த ‘நட்பு’ அணுகு முறையின் வெளிப்பாடாக பார்க்க முடியும்.

யாரிடமாவது கருணை காட்ட வேண்டு என்பது மனிதப் பண்பாக பொதுவாக இருக்கும் இயல்பில் தனக்கான தனிக்குடும்ப வாழ்வை அமைத்துக் கொள்ளாத ரத்தன் டாடா நாய்கள் மீது அதிகம் அன்பு செலுத்தினார்.

எப்போதும் தன்னுடன் இரு ஜேர்மன் செப்பேட் நாய்களை வெல்லப் பிராணிகளாக வளர்தார் வைத்திருந்தார்.

ஒரு படுக்கை அறை மட்டும் கொண்ட எளிமையான வீட்டில் தனது வாழ்வை இறுதிவரை தொடர்ந்த அவர் வேலைத்தலத்தில் இருந்து வீட்டிற்கு சென்றது இந்த இரு ஜீவனகளுடன் தனது உரையாடலை அன்பை செலுத்தினார் மாறாக வெளியில் இருந்து யாரையும் அழைத்து அதிகம் பேசாத தனிமை எளிமை வாழ்வை தொடர்ந்தார்.

ஒரு தடவை தனது நாய்களுக்கு சுகவீனம் எற்பட்டிருப்பதினால் தற்போதைய இளவரசர் சாள்ஸ் உடனானன சந்திப்பை கூட தள்ளிவைத்த அளவிற்கு வளர்ப்பு நாய்களிடம் அதிக காருணியம் அன்பு பிணைப்பை வைத்திருந்தவர்.

ஆனாலும் வாழ்வில் பல தடவை தனக்கான தனியான குடும்பம் இல்லாத தனிமையை உணர்ந்தார் என்று பிரபல்ய பத்திரிகையாளர்(சிமி கரேவால்) ஒருவரிடம் தனது மனதை உடைத்து ஒரு தடவை பேசியும் இருக்கின்றார்.

இதன் தொடர்ச்சிதான் சந்தனு என்ற இளைஞர் தெருவில் அதிகம் வாகனங்களால் மோதுண்டு இறந்து போகும் தெரு நாய்களை காப்பாற்றுவதற்கான முயற்சியில்….

இருட்டான வீதிகளில் நாய்கள் வீதியில் நிற்கும் வேளைகளில் அதிகம் வாகனச் சாரதிகளால் அவற்றைக் காண முடிவதில்லை இதனால் விபத்து நிகழ்கின்றது என்பதை அறிந்து நாய்கள் மீதான கருணை நிமிர்தம் அவற்றை காப்பாற்ற இந்த பிராணிகளுக்கு ஒளிரும் கழுத்துப் பட்டையை அணிவதன் மூலம் இருட்டில் கூட வானகனச் சாரதிகளால் காணுறும் நிலமை ஏற்பட்டு நாய்களின் உயிர்கள் காப்பாற்றலாம் என்பதாக ஜீவகாரணிய செயற்பாட்டிற்காக ஒரு அமைப்பை உருவாக்கி செயற்பட்டார்.

அந்த இளைஞர் இந்த நிறுவனத்தை தொடர்ந்து நடாத்துவதற்கு நிதி போனற் ஏனைய உதவிகள் தேவைப்பட்ட போது சிலரின் அறிவுறுத்தல்படி ரத்தன் டாடாவை சந்திக்கின்றார்.

இதுவே இந்த 70 வதைக் கடந்த மூத்தவருக்கும் அவரை விட 50 வயதிற்கு குறைவான சந்தனுவிற்கும் இடையிலான நட்பாக பிணைப்பாக மாறி இந்த நிறுவனத்தை 165 மில்லியன் ரூபாய் அளவிற்கு தனது சொந்தப் பணத்தில் தொடருவதற்கும் தனக்கு எப்போதும் அருகில் இருக்கும் நம்பிகைகுரியவராக விருப்பமானவராக சந்தனுவை அவர் அருகே கொண்டு வந்தது.

இலாபம் ஒன்றோ தொழில் முனைவோரின் ஓரே செயற்பாடாக பெரும்பாலும் இருக்கும் என்பதையும் மீறி தனது நிறுவனத்தின் 65 வீதமான வருவாயை மீண்டும் மக்களுககே சென்றடையக் கூடியதாக டாடா நம்பிக்கை நிதியத்தை ஏற்படுத்தி இதன் மூலம் தனது 50 வருட கால டாடா நிறுவனத்தின் பொறுப்பை செய்து வந்தார் என்பதே ரத்தன் டாடா என்பவரை இந்த தமக்குள் தங்களில் ஒருவராக இந்திய மக்களைப் பார்க்கவும் வைத்திருக்கின்றது.

அவரின் இழப்பை இந்தியர்கள் ஈடுசெய்த முடியாத இழுப்பாகவும் இன்று பார்க்க வைத்திருக்கின்றது.

ஒரு நாள் வீதியில் போகும் போது ஒரு இரு சக்கர மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரு குடும்பத்தின் இளம் தாய் தகப்பன் இரண்டு பிள்ளைகள் என்றாக போவதைப் கண்ணுற்ற ரத்தன் இவர்களும் பாதுகாப்பாக சௌகரியமாக பயணம் செய்வதற்குரிய நாலு சக்கர வாகனம் ஒன்றை அவர்களால் வாங்கக் கூடிய விலையில் தயாரிப்பது என்ற முடிவிற்கு வந்தார்.

தனது ஊழியர்களிடம் இதனை வெளிப்படுத்திய போது இதற்கான உற்பத்தி செலவே ஒரு இலட்சத்தை தாண்டும் என்பதாக வசதிகள் குறைந்த கார் வரை மொடலாக செய்து காட்டிய போதும் இதனை மறுத்துரைத்து சகல வசதிகளையும் கொண்டதாக இந்த விலைக்குள் அடங்குமாறு உருவாக்குங்கள் என்றதான பணிப்புரையும் இதில் கண்ட வெற்றியும் தான் நனோ டாடா என்ற ஒரு இலட்சம் பெறுமதியான கார் அது இன்று இன்டிகோ டாடா என்றாகவும் பரிணாமம் அடைந்துள்ளதும் ஆகும்

இந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் தனியார் நிறுவனமாக இரந்தாலும் பணிகாலத்தில் அதிகம் பணி நீக்கம் செய்யப்படுவது இல்லை. இதனை முழுவதிற்கும் அண்மையாக செயற்படுத்தியவர் ரத்தன் டாடா.

கூடவே ஓய்பெற்ற பின்பு ஓய்வூதியம் பெறும் வேலையாட்களாகவும் திட்டங்களை வகுத்து செயற்படுத்தினார்.

கொரானா காலத்தில் தனியார் நிறுவனங்கள் ஆட்களில் வேலைக் குறைப்பை செய்து தமது இலாபங்களை ஈட்டுவதை கருத்தில கொண்ட போது யாரையும் பணி நீக்கம் செய்யாது தொடர்ந்த இந்த நிறுவனத்தின் செயற்பாடு ஏனைய சில நிறுவனங்களும் தாமும் அவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை தூண்டியது.

கூடவே தமிழ் நாடு அரசிற்கு கொரான காலத்தில் நிதி உதவி வழங்கி மக்களை காப்பாற்றுவதற்கும் ஆவன செய்தார்.

கடந்த பத்து வருடத்திற்கு அண்மையாக நிர்வாகத் தலைவராக தமிழ் நாட்டைச் சேர்ந்த நடராசன் சந்திரசேகரன் பொறுப்பாக இருப்பதுவும் ரத்தன் தனது மூப்பின் காரணமாக கௌர பொறுப்பாளராக மட்டும் செயற்பட்டதும் இங்கும் கவனத்தை பெறுகின்றது.

விமானப் பயணங்களில் ஏனைய பொது நிகழ்வுகளில் மிக எளிமையாக கறுப்பு தேனீருடன் மட்டும் பயணம் செய்து விமானப் பணியாளர்களின் அதிகம் அன்பையும் ஏனைய பயணிகளின் நன்மதிப்பையும் பெற்ற எளிமையாளர் இவர்.

2 G அலைக்காற்று விவகாரத்தில் அவரது டாடா நிறுவனம் முறைகேடான செயற்பாடுகளைக் கொண்டிருந்ததும் இதுசம்மந்தமாக அதுசாரந்த அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் சிறைக்கு செல்ல வேண்டி ஏற்பட்ட போதும் இதில் டாடா நிறுவனம் தப்பித்துக் கொண்டது என்ற விமர்சனங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் கால ஓட்டத்தில் இந்த 2G அலைக்காற்று விடயத்தில் குற்றமற்வரகள் என்று அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் விடுதலை செய்ததையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

மேற்கு வங்காளத்தில் கார் தொழிற்சாலையை அமைக்க சிறு நில உரிமையாளர்களின் நிலத்தை சவீகரிப்பதற்கு அன்றைய மேற்கு வங்கு அரசுடன் இணைந்து செயற்பட்டதானது 35 வருட மேற்கு வங்க அரசின் வீழ்ச்சிக்கு காரணமாயிற்று என்ற விமர்சனங்களையும் நாம் புறம் தள்ளிச் செல்ல முடியாது.

பெரும் நிலச் சுவாந்தார்களின் காணிகளை சுவீகரித்து நிலமற்றவரகளுக்கு வழங்கிய மேற்கு வங்க கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாடுதான் பிரதானமாக 35 வருட ஆட்சியை தொடர வாய்ப்புக்களை அதிகம் ஏற்படுத்தி இருந்த நிலையில் இதற்கு மறுவழமான செயற்பாடு இதனையும் புரட்டியும் போட்டு விட்ட செயற்பாட்டிற்கு காரணமாயிற்று என்பதான டாடா குழுமத்தின் மீதான விமர்சனம் இந்திய அரசியல் வரலாற்றில் முக்கிய இடத்தையும் பெற்றிருக்கின்றது.

இதன் பின்னர் மக்களின் எதிர்பின் உச்சத்தால் அந்த நனோ கார் உற்பத்திச் தொழிற்சாலை குஜராத்திற்கு மாற்றப்பட்டது என்பதுவும் இதன் தொடர்ச்சிதான்
(இந்திய)தேசத்தின் தலமையாக மேலாண்மை செய்யாதுதம்மை ஒரு 9இந்திய)தேசியத்தின் தலமையாக தன்மை உருவமைத்துக் கொண்ட டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா திகழ்ந்தார் என்பது அவருக்கான தனித் தன்மையாக பார்க்க முடியும்.


செல்வந்த பாரம்பரியத்தில் இருந்து வந்திருந்தாலும் மிகவும் அடிப்படை நிலையிலான வேலைகளில் இருந்து தனது வாழ்வை ஆரம்பித்து இதிலிருந்து பெற்ற அனுபவங்கள் தனது நிறுவனத்தின் சகல ஊழியர்களையும் ‘சமமாக’ பார்க்கும் பார்வையை அவரிடத்தில் ஏற்படுத்தியிருக்கின்றது என்ற உளவியலையும் அவரின் செயற்பாடுகளில் நாம் பார்க்க முடியும்.

தனது 86 வயதில் வயதின் மூப்பினால் இயற்கை எய்தி அவருக்கு எமது மரியாதை கலந்த அஞ்சலி வணக்கங்கள்.

ரத்தன் நவல் டாட்டா பம்பாயில் டிசம்பர் மாதம் 28ம் நாள் 1937 பிறந்து மும்பாயில் ஒக்ரோபர் மாதம் 09 நாள் 2024 இயற்கை எய்தினார்.

Leave a Reply