
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
வரலாறு வெறுமனே நிகழ்வுகளின் பதிவல்ல; அதில் பதியப்படுவனவும் விடுபடுவனவும் திரித்தோ, புனைந்தோ எழுதப்படுவனவும் எவையெவை என்பது, அதிகாரம் பற்றிய கேள்வியுடன் தொடர்புடையது. அண்மையில் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித், இராஜராஜ சோழனின் காலம் பொற்காலமல்ல; இருண்டகாலம் என்றும் அவருடைய காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டு, பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன என்று தெரிவித்த கருத்து, மிகுந்த எதிர்வினைகளை உருவாக்கியிருக்கிறது.