1847 இல் “டாக்டர் கிரீன்” என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த வைத்தியசாலை யாழ்ப்பாணத்தின் மானிப்பாயில் இன்றும் ‘கிறீன் மெமோறியல் வைத்தியசாலை’ எனும் பெயரில் சேவையாற்றி வருகின்றது. மருத்துவர் கிறீனுடன் சாப்மன்,டான்போர்த் முதலான மிஷனறிமாரும் தமிழ் கற்றுத் தமிழில் மருத்துவப் பணியாற்றினரென அறிய முடிகின்றது.அத்துடன் இலங்கையின் முதலாவது மருத்துவ கல்லூரியும் இங்குதான் ஆரம்பிக்கப்பட்டது. இதில் முதலாவது மாணவர் தொகுதியில் இரண்டு இலங்கையர்கள் மருத்துவக் கல்வி கற்றதுடன், அவர்கள் இருவரும் யாழப்பாணத் தமிழர்கள் எனவும் அறியப்படுகின்றது.