தன் அப்பன் விரைவில் வருவான், தன்னை எப்படியாவது காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் பிள்ளை ஜெயஸ்ரீயிடம் இருந்து எழுந்த, எல்லா ஈரமுள்ள அப்பன்களியின் இதயத்தை உலுக்கும் வார்த்தைகள்.
எம்மைப் போன்றோரின் அடி மனதில், அடிக்கடி, சாகும் வரை ஒலிக்கப் போகும் வார்த்தைகள்.
என் பெயர் வரலட்சுமி என்று எழுதிப் பழகிய ஒரு ஏழைச் சிறுமியின் இறுதி எழுத்துக்கள், எம் நினைவில் இன்றும் இருந்து வருகின்றன, மறைய மறுக்கின்றன.
வரலட்சுமிகளின் எழுத்துக்களோடு, எங்க அப்பன் எங்க, என்ற ஒலிகளும் சேர்ந்து மனதை அரிக்கின்றன. எரிக்கின்றன.
அப்பன் வருவான், வந்தால் என்ன செய்வான்?. எதுவும் செய்ய முடியாது என்ற மமதையில் தானே எரித்துக் கொன்றன வெறிபிடித்த ஓநாய்கள்.
ஓநாய்களின் வீடுகளில், அக்கம் பக்கத்தில் மனிதப் பிறவிகளே இல்லையா?.
தன்னை எரித்தவனை, கண்ணகியைப் போல் எரிக்கத் துடித்திருப்பாள் அந்த ஏழைச்சிறுமி.
தன் தந்தை வருவான், தன்னைக் காப்பான், தன்னை எரித்தவனை எரிப்பான் என்ற நம்பிக்கையோடு மயங்கி மரணித்திருப்பாள் அந்தப் பிள்ளை.
தன் பிள்ளையை எரித்தவனை எரிக்கா விட்டாலும், எப்படியாவது தண்டிஃக வேண்டும் என்று துடிப்பான் தந்தை.
தன்னால் முடியாவிட்டாலும், சட்டமும், சமூகமும் தண்டிக்கும் என்று நம்புவான், அந்த அப்பாவித் தந்தை.
மனித ஓநாய்கள் மீது போலிசில் புகார் செய்ததற்கே, எரித்துக் கொல்ல தயங்காத மாபாவிகள், மறித ஓநாய்கள், போலீசுக்குப் பயப்படுமா?.
சட்டம் தன் கடமையை செய்யுமா?, நீதித்தேவதை கண்களை திறப்பாளா?, நிச்சயம் தண்டிப்பாளா?. வெண்மணியில் தண்டித்தது போல் தான் தண்டிப்பாளா?.
தண்டிப்பாள் என்று நம்பும், ஆறுதலடையும், பத்தோடு பதினொன்றாக கடந்துப் போகும், போலீசும், ஆள்வோரும், சமூகமும்.
சட்டம், சடம் போல் தன் கடமையை செய்யும், நீதித்தேவதையின் கண்கள் கண்ணீர் விடும், ஓநாய்கள் சட்டத்தின் ஓட்டைகளுக்குள் ஒழிந்து விடும். அடுத்த வேட்டைக்கு திட்டமிடும், ஏழைச் சிறுமிகளின் அப்பன்களும், அண்ணன்களும் நடுங்கிச் சாவார்கள்.
அரசன் இன்றும் கொல்ல மாட்டான், ஆண்டவன் என்றும் கொல்ல மாட்டான். நீதி தேவதைகள் தண்டிப்பது நிச்சயமல்ல. பின் யார்தான் தண்டிப்பது?.
ஏழைச்சாதி சிறுமிகளின், ஏதிலார்களின் அப்பன்களாலும் அண்ணன்களாலும், இந்த ஆதிக்கச் சாதி ஓநாய்களை தண்டிக்க முடியுமா?.
அவர்களையும், இந்த வெறிபிடித்த ஓநாய்கள் எரிக்காமல் இருந்தாலே போதும். என்பதே இற்றைய பரிதாப நிலை.
வினையறுத்தவன் வினையறுப்பான், நரகத்தில் எரிக்கப் படுவான் என்று நம்பலாமா?, நம்பி ஆறுதல் அடையலாமா?.
ஏழைச்சிறுமிகள், மறுபடியும் பிறந்து வந்து, இந்த ஆதிக்க ஓநாய்களை சித்திரவதை செய்து, எரித்துக் கொல்வார்கள் என்று நம்பலாமா?.
மனம் மரத்துப் போனவர்கள், நாடி நரம்புகள் தளர்ந்துப் போனவர்கள், நடைபிணங்கள் நம்பட்டும். வேறு வழியின்றி ஆறுதலடையட்டும்.
மனித நேயம் மிக்கவர்கள், மானம் மிக்கவர்கள், மன்னுயிரை தன்னுயிர் போல நினைப்பவர்கள். நீதியை நேசிப்பவர்கள், அநியாய ஓநாய்களை அழிக்கத் துடிப்பவர்கள் சட்டமும், தர்மமும், புத்தரின் தம்மமும் தன் கடமையை செய்யும் என்று நம்ப மாட்டார்கள்.
மார்க்சீயமும், மக்களும், புரட்சிகர சக்திகளும் தம் கடமைகளை செய்ய வேண்டும், தம் அதிகாரத்தையும், மக்களுக்கான சட்டத்தையும் சாத்தியப் பட்ட அளவில் அமுல் படுத்துவதையே, நேரடியாக நீதி வழங்கப் படுவதையே நம்புவார்கள். நம்ப வேண்டும்.
சிறுமிகளை சீரழிக்கும் எரித்துக் கொல்லும் வெறிபிடித்த ஓநாய்களை உடனடியாக தண்டிக்கும் கடமையை கையில் எடுப்பார்கள். எடுக்க வேண்டும்.
இந்த மனித ஓநாய்களை நடுரோட்டிலோ, வீடு புகுந்தோ பிடித்து, கட்டி வைத்து, எரித்து தண்டனையை நிறை வேற்றுவார்கள். நிறைவேற்ற வேண்டும்.
இதனை எரிக்கப் பட்ட ஏழைச் சிறுமிகளின் சாதிச் சாராத, எந்த சொந்தமும், சம்பந்தமும் இல்லாத மனிதநேய, நீதிநேய புரட்சிகர சக்திகள் ஒன்றிணைந்து சாதுரியமாக செய்ய வேண்டும்.
இதனை செய்ய, சாதி மத உணர்வற்று, ஒன்று பட்டு, அமைப்புகளை கட்ட வேண்டிய மனிதநேய புரட்சிகர சக்திகள், அதை விட்டு விட்டு புத்தரின், மார்க்சின் உறுப்புகளைப் பற்றி ஆராய்ந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில உதவாக் கரைகள்.
மக்களும், புரட்சியாளர்களும் சேர்ந்து மறுக்கப் பட்ட நீதிகளுக்கும், காட்டு மிராண்டித் தனமான அநீதிகளுக்கும், உடனடியாக நீதி வழங்க ஆரம்பித்தால், எவ்வளவு பலம் வாய்ந்த மனித ஒநாய்களுக்கும், எதிர்பாராமல் யார் மூலமாவது தண்டனை கிடைக்கும் நிலை ஏற்பட்டால், மனித ஓநாய்கள் நடு நடுங்கும்.
சட்டம் தன் கடமையை சரியாகச் செய்ய ஆரம்பிக்கும். நீதித் தேவதையின் கண்கள் திறக்கும். மனித ஓநாய்களை கண்டு தினம் தினம் நடுங்காமல், எல்லா ஏழைச்சிறுமிகளும் வாழ்வார்கள்.
அதுவரை எங்க அப்பன் எங்கே என்ற ஒலிகள், ஏழைச் சிறுமிகளிடம் இருந்து எழுந்துக் கொண்டேதான் இருக்கும். மனிதநேயர்களின், மார்க்சீயர்களின் மனம் எரிந்துக் கொண்டேத் தான் இருக்கும்.
தோழர் உத்தம் சிங் அவர்களின் பதிவு.