(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
கல்வியின் நோக்கம் என்ன என்ற வினாவை, நாம் அடிக்கடி மீளக் கேட்டுக்கொள்வதற்கான நிகழ்வுகள், தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளன. கல்வி என்பது பரீட்சையாகவும் கல்வியைக் கற்பது என்பது பரீட்சையில் சித்தியடைவதாகவும் சுருங்கி விட்டது; கல்வியின் நோக்கங்கள் மாறிவிட்டன; கற்பித்தலின் நோக்கங்களும் மாறிவிட்டன; இது வருந்தத்தக்கது. இதன் பின்னணியிலேயே கல்வி என்பது, எவ்வாறு மிகப்பெரிய வணிகமாக உருப்பெற்று நிற்கிறது என்பதையும் நோக்கவேண்டியுள்ளது.