ஓப்பன்ஹைமர்

இவரது திரைக் கதை அமெரிக்க சமூக, அரசியலை, அமெரிக்க சமூக கலாச்சாரத்தை அறத்துடன் கூடியதாக வெளிப்படுத்துவதாக அமையும்.
நோலனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ஓப்பன்ஹைமர். இது அணு குண்டை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழுவின் தலைமை விஞ்ஞானியான ஓப்பன்ஹைமரின் சுயசரிதை. கிறிஸ்ரோபர் நோலன் மிகப் பிரசித்தி பெற்ற புலிட்சர் விருது பெற்ற நாவலான American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer ஐ படமாக எடுத்துள்ளார். 560 பக்கள் கொண்ட நாவலை மூன்று மணி நேர படமாக எடுத்தார். நூலை Kai Bird , Martin J. Sherwin இணைந்து எழுதியிருந்தனர்.

மூன்று மணி நேரம் நீண்ட இப் படம் பல அரசியல் தளங்களில் நகர்கின்றது. முpக முக்கியமாக மண்ஹாட்டன் திட்டம், கியுபெக் ஒப்பந்தம், மக்ஹாத்திசியம் போன்றவற்றினை அறிந்திருத்தல் இப் படத்தை அரசியல் ரீதியாக பகுப்பாய்வு செய்ய உதவும்.

1943ம் ஆண்டு ஆவணி மாதம 19ந் திகதி; கியுபெக்கில் மக்ஹன்சி கிங், அமெரிக்க அதிபர் பிரான்கிலின் டி ரூஸ்வெல்ட்டு, பிரித்தானிய பிரதமர் வின்சன் சேர்ச்சில்; மூவரும் அணு குண்டை இணைந்து தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

மன்ஹாட்டன் திட்டத்தின் மூலம் அணு குண்டு தயாரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக பிரிட்டனும், கனடாவும் இருந்துள்ளன. 1942ல் நோர்த் வெஸ்ட் ரெரற்றீஸ் (Canada) Eldorado Gold Mines Ltd ல் அமைந்துள்ள Eldorado Gold Mines Ltd யுரேனிய சுரங்க நிறுவனத்தை தேசிய மயப்படுத்தியது. 1944ல் Port Hope, ON ல் அமைந்துள்ள தொழிலகத்தில் யுரேனியம் சுத்திகரிக்கப்பட்டது.

சுத்திகரிக்கப்பட்ட யுரேனியம், மன்ஹாட்டன் திட்டத்தில் தயாரிக்கப்பட்ட அணு குண்டு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டது. அப்போது கனடிய பிரதமராக மக்ஹன்சி கிங் கடமையாற்றினார். 1942 ன் இறுதிப் பகுதியில் இதே அணு குண்டு தயாரிப்பிற்கு பிரிட்டிஸ் கொலம்பியா நிறுவனம் ஒன்று புளோட்டினம் தயாரிப்புக்கான கனமான நீரை (heavy water) ஒப்பந்த அடிப்படையில் வழங்கியுள்ளது heavy water for nuclear reactors to produce plutonium.

1939ல் அமெரிக்க விஞ்ஞானிகள் சிலர், (ஐரோப்பாவிலிருந்து தப்பிவந்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த விஞ்ஞானிகள்) ஜேர்மனி அணு ஆயுத தயாரிப்பில் இறங்கலாம் எனக் கருதினர். இவர்கள் அப்போதைய அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்க்கு கடிதம்; ஒன்றை அனுப்பினார்கள். அதன் விளைவாக முதலில் யுரேனிய ஆலோசனை அமைப்பாகவே அமைக்கப்பட்டது. பின்னர் 1941 மார்கழி 6 ல் மன்ஹாட்டன் திட்டமாக மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் கொலாம்பியா பல்கலைக் கழகமே அதிகளவு ஆராய்ச்சி வேலைகளில் ஈடுபட்டது.

கொலம்பியா பல்கலைக் கழகம், நியுயோர்க் நகரின் மையமான மன்ஹாட்டனில் அமைந்துள்ளது. இதனால் தான் அணு ஆயுத தயாரிப்புத் திட்டத்துக்கு மன்ஹாட்டன் திட்டமென பெயரிடப்பட்டது. அமெரிக்க தொழில்நுட்ப பிரிவு, பின்னர் விஞ்ஞானப் பிரிவு ஆகியவற்றின் கீழ் இத் திட்டம் செயற்பட்டது. பின்னர் போர்த் திணைக்களத்துக்கு மாற்றப்பட்டது. அப்போது இத் திட்டத்துக்கு தலைவராக பிரிகேடியர் ஜெனரல் லெஸ்லி ஆர் குரோவ்ஸ் நியமிக்கப்பட்டார்.

மன்ஹாட்டன் திட்டத்தில் முதலில் இரு வகையான குண்டுகளை தயாரிப்பதற்காக திட்டமிடப்பட்டது. முதலாவது யுரேனியம் 235 னை பாவித்து தயாரிக்கும் குண்டு, இரண்டாவது புளுட்டோனியத்தை பாவித்து தயாரிக்கும் குண்டு. (one using uranium 235 isotope and the other plutonium.)
ஜெனரல் குரோவ்ஸ், ஜெ.ரொபெர்ட் ஓப்பின்ஹைமரை அணுகின்றார். யூலியஸ் ரொபெர்ட் ஓப்பின்ஹைமர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த விஞ்ஞானி. இவர் குவைய இயற்பியலில் விஞ்ஞானி (Quantum physics). இவரது தந்தையார் ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்த யூதராவார். பின்னர் துணி உற்பத்தி நிறுவனத்தின் அதிபரானார்.
ஹைமர் செல்வந்த சூழலிலேயே வளர்ந்தார். தனியார் பாடசாலையில் கல்வி கற்றார். ஹவார்ட் பல்கலைக் கழகத்தில் இராசாயனவியல் கற்றார்.

அங்கு சரித்திரம், தத்துவவியல், கணிதம் போன்றவற்றிலும் தேர்ச்சி பெற்றார். உயர் கல்விற்காக கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்துக்கு சென்றார். அதன் பின்னர் ஜேர்மனியில் உள்ள ஆய்வுப் பல்கலைக் கழகமான University of Göttingen ல் கற்றார். இப் பல்கலைக் கழகம் இயற்பியல் ஆய்விற்கு அப்போது உலகப் பிரசித்தி பெற்றது. அங்கு இவர் தத்துவவியல் கலாநிதிப் பட்டம் பெற்றார். குவைய இயற்பியலில் இவர் அப்போது மிக முக்கிய விஞ்ஞானியாக கருதப்பட்டார்.

ஆனால் இவர் ஒரு கோட்பாட்டு விஞ்ஞானி. அதாவது இவர் கருதுகோள்களை முன்வைத்தார். இவை பரீட்சித்துப் பார்க்கப்படவில்லை. ஹைமர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் அனுமதிக்கப்பட்ட போது ஒரு நிபந்தனையுடனேயே அனுமதி வழங்கப்பட்டது. ஆய்வுக் கூட பாடத்தில் சித்தியடைய வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. ஆய்வு கூடங்கள் இவரது விருப்புக்குரியதாகவிருக்கவில்லை. பல்கலைக் கழகத்தில் இவர் தனது விரிவுரையாளருக்கு அப்பிலில் நஞ்சு வைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். அந்த அப்பிலை எவருமே சாப்பிடவில்லை.

செல்வந்த பெற்றோரால் இவர் காப்பாற்றப்பட்டார். ஹைமர் தனக்கு நண்பர்களை விட இயற்பியலே முக்கியம் என்று கூறியுள்ளார். ஓப்பின்ஹைமர் என்ற விஞ்ஞானியின் உளவியல் எவ்வாறு இருந்தது என்பதற்கு இவை உதாரணங்களாகும்.

அன்றைய கால கட்டத்தில் புத்திஜீவிகள் மத்தியில் கம்யூனிசியம் பிரபல்யமாகவிருந்தது. அதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஹைமருக்கும் கம்யூனிசத்தின் மீது பிடிப்பிருந்தது. ஆனால் கம்யூனிசத்தை பின்பற்றியவரல்ல. ஐரோப்பிய புத்திஜீவிகளுடனும், விஞ்ஞானிகளுடமான தொடர்பிருந்தது. ஐரோப்பிய அரசியல் கருத்தியலுடனான பரிச்சயமுமிருந்தது. அத்துடன் பகவத் கீதையுடன் நெருக்கமாகவிருந்தார். சமஸ்கிருதமும் தெரிந்திருந்தது.

இவரது புத்தஜீவித்தனம், இயற்பியல் அறிவு, ஐரோப்பிய பிரபல்ய விஞ்ஞாளிகளுடான உறவு போன்றவை குரோவ்ஸ்க்கு, ஹைமர், மன்ஹாட்டன் திட்டத்துக்கு தலைமை விஞ்ஞானியாக தேர்வு செய்ய போதுமானதாகவிருந்தது. குரோவ்ஸ் இவரது தம்பி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர், ஹைமர் கம்யூனிஸ்ட் கட்சி அனுதாபி எனத் தெரிந்திருந்தும் இவரை தேர்வு செய்தார். 1938ம் ஆண்டிலிருந்து ஓப்பின்ஹைமரின் நடவடிக்கைகள் முற்றாக உளவு பார்க்கப்பட்டன. எனவே அமெரிக்க அமைப்பிற்கு ஓப்பின்ஹைமரின் திறமையும் தெரிந்திருந்தது அவரை கட்டுப்படுத்தவும் தெரிந்திருந்தது.

குரோவ்ஸ்ன் மேற்பார்வையில் ஹைமர் அணு குண்டு தயாரிப்புக்கான பரிசோதனைகளில் ஈடுபட்டார். அணு குண்டுக்கான மிக முக்கிய மூலப் பொருளான யுரேனியம் 235 ஐ பயன்படுத்தினார். இன்று மத்திய ஆபிரிக்க நாடான நைகரில் ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பும், ருசிய சார்பு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியத்ன பின்னால் மேற்கு நாடுகள் கூச்சலிடுவதற்கு நைகரில் யுரேனியம் அதிகளவு உள்ளமையே காரணமாகும்.

நியு மெக்சிக்கோவின் சன்ர பே நகருக்கு வடக்காக 35 மைல் தூரத்தில் உள்ள Los Alamos ஆய்வகத்திலேயே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு தான் அணு குண்டு பரீட்சித்தும் பார்க்கப்பட்டது. அணு குண்டு பரீட்சித்துப் பார்த்ததால் நியு மெக்சிக்கோ மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இப்பொழுது தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி பைடன் நட்டஈடு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார். உண்மையில் யப்பான் மாத்திரமல்ல, அமெரிக்காவின் சொந்த மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

((யப்பானில் போடப்பட்ட அணு குண்டுகளை விட, பரிசோதிக்கப்பட்ட அணு குண்டுகள் ஐம்பது வீதம் வீரியம் குறைந்தது என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன))

1945 ஆடி மாதம் 16ந் திகதி நியு மெக்சிக்கோவில் உள்ள Alamogordo air force base ல் பரீட்சித்துப்பார்க்கப்பட்டது. சுமார் 20 நாட்களின் பின்னர் யப்பானியர்கள் மீது உயிரோட்டம் நடாத்தப்பட்டது. இன்று வரை அமெரிக்க ஊடகங்கள் நியு மெக்சிக்கோ மக்களுக்கு அப்போதைய அமெரிக்க அரசினால் பல சந்ததிகளுக்கு விளைவிக்கப்பட், விதைக்கப்பட்ட பாதிப்பைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. நியு மெக்சிக்கோ மக்களுக்கு ஏற்பட்ட விளைவுகள் மறைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் உலக மகாயுத்தத்தின் இறுதிக் கட்டத்திலேயே இக் குண்டுகள் வீசப்பட்டன. ஜேர்மனியும், இத்தாலியும் யுத்தத்தில் தோல்வியடைந்த பின்னர் மூன்றுவது நாடாக இத்தாலி, ஜேர்மனியுடன் இணைந்து போரிட்ட யப்பானை போரை நிறுத்த அல்லது சரணடையச் செய்யவே இக் குண்டுகளை வீசியதாக அமெரிக்க தெரிவித்திருந்தது. இன்றும் இவ் அணு குண்டுகள் வீசப்படாமலேயே யப்பான் சரணடைந்திருக்கும் என பல அரசியல் அறிஞர்கள் கருதுகின்றார்கள். இதனை அமெரிக்கா நன்கறிந்திருந்தது. அப்படியாயின் ஏன் இந்தக் குண்டுகள் வீசப்பட்டன?

அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் மரணமான பின்னர், துணை ஜனாதிபதி ஹரி எஸ் ரூமன் அதிபராக சித்திரை 1945ல் பதவியேற்கின்றார். இவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் முழுமையாக ரூஸ்வெல்ட் அமெரிக்க அதிபராக இருந்துள்ளார். எனினும் போர் முடிவிற்கு வருவதற்கு சில மாதங்கள் முன்னர் இறந்துவிடுகின்றார். ஜனாதிபதி ஹரி எஸ் ரூமன் ஓப்பன்ஹைமரை அணு குண்டுகள் வீசிய பின்னர் சந்தித்த போது “அழும் குழந்தை” என விழித்துள்ளார். குண்டுகளை வீசியது தான் என ரூமன் எந்தவித வருத்தமுமின்றி கூறியுள்ளார். யப்பானில் இறந்த பல்லாயிரக்கணக்கான மக்களைப் பற்றியும், அழிந்த பல சந்ததிகள் பற்றியும் அவர் கவலையற்றேயிருந்தார்.

ஹைமரின் இளைய சகோதரன் பிரான்க்கும் ஒரு விஞ்ஞானி. துகள் இயற்பியல் விஞ்ஞானி particle physicist.. பிரான்க், ;> House Un-American Activities Committee (HUAC) அமெரிக்க காங்கிரஸ் குழுவினரால் விசாரிக்கப்பட்டார். இவர் தானும் தனது மனைவியும் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக மூன்றரை வருடங்கள் இருந்ததாக ஒப்புக்கொண்டார். இவரது கடவுச் சீட்டு பறிக்கப்பட்டது. 1949லிருந்து 1957 வரை இவர் தனது சொத்துக்களை விற்றே வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்டினர். 1957ல் “சிவப்பு அச்சம் “சற்று குறைந்த பின்னரே பாடசாலையொன்றில் இயற்பியல் ஆசிரியராக வேலை பார்க்கத் தொடங்கினார்.

பிரான்க்கைப் போன்று ஹைமரும் பாதிக்கப்பட்டார். இவருக்கும் security clearance கிடைக்கவில்லை. அவர் இறந்த பின்னரே அவருக்கு அநீதி கிடைத்துள்ளது என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

நோலன், ஓப்பன்ஹைமரின் சுயசரிதையை எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்? நோலனுக்கு ஓப்பன்ஹைமர் மீதான பார்வை என்ன? நோலன் இவரை ஒரு விஞ்ஞானியாகவே பார்க்கின்றார். நோலனின் மிக முக்கிய கவனம் அணு குண்டு பரிசோதனையை எவ்வாறு வெளிப்படுத்துவது. அந்த பிரமாண்டத்தை காட்சிப்படுத்தல் போன்றவற்றில் நோலன் அதிகளவு கவனம் செய்துள்ளார்.

(Oppenheimer is filmed in a combination of IMAX 65 mm and 65 mm large-format film photography including, for the first time ever, sections in IMAX black and white analogue photography)
அணுக்களை பிளத்தல், அணுக் கூட்டினைவு . கூட்டினைப்பினால் தோற்றம் பெறும் குண்டு. “fission” and “fusion” பிளவு. இணைவு முறையின் ஊடாக காட்சிப்படுத்தலைAk; வெளிப்படுத்தியுள்ளார்.

படம் கறுப்பு-வெள்ளை, நிறம் என மாறி மாறி படமாக்கப்பட்டுள்ளது. ஹைமரின்”முன்னோக்கு” ஐ நிறத்தில் படமாக்கியுள்ளார். பழமைவாத, பிடிவாதமான அரசியல் கருத்தியாளர்களின் மிக மோசமான கருத்தியலை கறுப்பு-வெள்ளையில் படமாக்கியுள்ளார்.

நோலன் ஹைமரின் வாழ்க்கையை மூன்று பிரிவுகளாக காட்டுகின்றார். இவை மூன்றும் முக்கியமானவை. முதலாவது அவரது இளமை மற்றும் வாலிப பருவம் (1930-1940), இரண்டாவது அணு குண்டுத் தயாரிப்புக் காலம் (1943-1945), மூன்றாவது அணு குண்டு தயாரிப்பின் பின்னரான காலம் (1954). இவரது பாதுகாப்பு பத்திரம் நிராகரிக்கப்பட்ட காலம் மற்றும் விசாரணைக் காலம்.

மூன்று காலப்பிரிவிலும் ஓப்பன்ஹைமரின் வாழ்வின் முக்கிய சம்பவங்களை நோலன் வெளிப்படுத்தியுள்ளார்.

முக்கியமாக லுலிஸ் ஸ்ரவுஸ், ஓப்பின்ஹைமரை வெறுத்தார். அல்பர்ட் ஐயன்ஸ்ரைனை க்கும் லுயிஸ் ஸ்ரவுசுக்குமான உறவு, ஓப்பின்ஹைமரால் தான் உடைந்ததாக ஸ்ரவுஸ் கருதினார். ஸ்ரவுசும், ஹைமரும் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தனது சமூக உறுப்பினர்களிடையில் இருந்த தனது செல்வாக்கு, ஹைமரால் பாதிக்கப்பட்டதாக கருதினார். ஸ்ரவுசுக்கும், ஓப்பின்ஹைமருக்குமிடையில் கோட்பாட்டு அரசியல் கருத்தியிலில் வேறுபாடுகள் இருந்தன. ஸ்ரவுஸ் ஒரு வலது சாரி தீவிரவாதி.

பின்னாட்களில் ஹைமருக்கு பாதுக்காப்பு அங்கீகாரம் நிராகரிக்கப்படுவதுக்கு ஸ்ரவுசும் ஒரு காரணமாகியுள்ளார். அணு ஆயுத உற்பத்தியை மட்டுமல்ல சுப்பர் ஹைரஜன் குண்டுகள் தயாரிக்க வேண்டும் என்பதில் ஸ்ரவுஸ் தீவிரமாகவிருந்தார். ஏற்கனவே பிறின்க்டன் பல்கலைக் கழகத்தில் ஓப்பின்ஹைமருக்கு, ஸ்ரவுசால் வழங்கப்பட்ட பதவியை, ஓப்பின்ஹைமர் நிராகரித்திருந்தார். இவை ஸ்ரவுசுக்கு ஓப்பின்ஹைமருக்கு மேல் வெறுப்பை ஏற்படுத்தின. மன்ஹாட்டன் திட்டத்துக்கு, ஓப்பின்ஹைமர் தேர்வானதை ஸ்ரவுஸ் விரும்பவில்லை.

போரின் பின்னர் ஸ்ரவுஸ் அமெரிக்க பதில் வர்த்தக அமைச்சராக 1958-1959 காலப்பகுதியில் கடமையாற்றினார். இதற்கு முன்பாக இவர் 1953-1958 காலப்பகுதியில் அமெரிக் அணு ஆயுத அமைப்பின் தலைவராகவிருந்தார். இவர் ஒரு பிரபல வர்த்தகர். இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக் கடற்படையில் முக்கிய அதிகாரியாக கடமையாற்றினார். குடியரசுக் கட்சி உறுப்பினர். ஸ்ரவுசுக்கும் ஹைமருக்குமிடைப்பட்ட காட்சிகள் கறுப்பு வெள்ளையில் காட்டப்பட்டுள்ளன. இக் காட்சிகள் ஸ்ரவுசின் பார்வையிலேயே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

போலாந்தை ஜேர்மனி கைப்பற்றியதை தொடர்ந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்திருந்த விஞ்ஞானிகள் பலர் ஜேர்மனி அணு குண்டை தயாரிக்கும் எனக் கருதினர். இவர்கள் ஐயன்ஸ்ரைனை வற்புறுத்தி அமெரிக்க அரசாங்கத்துக்கு கடிதம் எழுதவைத்தனர். அணு குண்டு தயாரிப்பு பரிசோதனை போன்றவற்றில் பங்குபற்றிய பெரும்பாலான விஞ்ஞானிகளில் அதிகமானோர் யூதர்கள். படத்தில் யூத இனத்தைப் பற்றிய எந்தவொரு நிழலோ, வெளிச்சமோ இன்றி நோலன் படமாக்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு யூத இன சமூகத்தால் முன்வைக்கப்படுகின்றது.

அதே சமயம் மக்ஹாத்திசியம் யூத புத்திஜீவிகளை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்த்தது. 1952ம் ஆண்டு 124 பேரை இடது சாரிகள் என விசாரித்தது. இதில் 79 பேர் யூதர்கள். அணு குண்டு தயாரிப்பின் பின்னரான காலத்தில் நடைபெற்ற விசாரணைகளில் யூதர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். படத்தில் இவர்கள் மீதான அச்சம் பதிவு செய்யப்படவில்லை.

படத்தில் யூத இன விஞ்ஞானிகளாக Tom Conti (Scottish) – Einstein, Murphy (Irish) – Oppenheimer. யூதர்களாக வேறு இனத்தவர்கள் நடித்தமைக்கு Naomi Alderman எதிர்க் குரல் எழுப்பியுள்ளார்.

நோலன் ஒரு விடயத்தில் கவனமாக இருந்துள்ளார். அதாவது அணு குண்டை செய்தது அல்லது கண்டு பிடித்தது யூதர்களாக இருக்கலாம். ஆனால் குண்டை வீசியது அமெரிக்க அமைப்பு. அதனையே நோலன் வெளிப்படுத்த முயன்றார். ஒரு சுவையான முரண், இரண்டாம் உலகப் போரில் அதிகம் பாதிக்கப்பட்டது யூதர்கள். ஆனால் யூத விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு, பல்லாயிரக் கணக்கான யப்பானியர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

படத்தில் காதல் உண்டு. ஆனால் ஒரு குறிப்பிட்ட காட்சி ஒரு எதிர்ப்பலையை உருவாக்கியது அல்லது உருவாக்கப்பட்டது. ஹைமர் தனது அப்போதைய காதலியுடன் உறவு கொள்ளும் போது பகவத் கீதையும் காட்சியில் வருகின்றது. பின்னர் பகவத் கீதையில் கிருஸ்ணன் கூறும் வசனம் ஒன்று ஹைமரால் கூறப்படுகின்றது “Now, I am become Death, the destroyer of worlds.” (These words are a a paraphrase of Bhagavad Gita 11:32 where Krishna, an avatar of Vishnu – whom many Hindus think of as the supreme being – says that he is kala, or time.)

படத்தில் ஓப்பன்ஹைமராக Cillian Murphy ம், லுயிஸ் ஸ்ரவுசாக றொபர்ட் டவுனி யூனியரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்கள். இப் படத்தில் முக்கிய பாத்திரமாகவே எடிட்டர் ஜெனிபர் லேம் உள்ளார் (Jennifer Lame)) இப் படத்தின் சிறப்பம்சமே எடிட்டிங். மூன்று மணி நேரம் கொண்ட இப் படத்தில் அதிகளவு உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. படத்தில் காலத்தின் அரசியல் தெரியாவிட்டால், படத்தை விளங்கிக் கொள்வது கடினம்.

“இரண்டாவது சிவப்பு அச்சம்” எனப்படும் மக்ஹாத்திசியத்தை இன்னமும் ஆழமாக வெளிப்படுத்தியிருக்கலாம். படம் வெவ்வேறு காலங்களுக்கு மாறி மாறி பயணிக்கின்றது.

படத்தின் முக்கிய நோக்கம் அணு குண்டு தயாரித்தலை ஓப்பின்ஹைமரின் மொழியில் வெளிப்படுத்துவதாகும். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தையும் படத்தின் பெரும் பகுதி பிரதிபலித்தாலும், ஹிட்டலரைப் பற்றிய காட்சிகளோ, போர்க் காட்சிகளோ இடம் பெறவில்லை.

நோலன் தனது செவ்வி ஒன்றில் தான் இங்கிலாந்தில் பாடசாலையில் படிக்கும் காலங்களிலேயே அணு குண்டின் மீதான அச்சம் தனக்குள் இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். அதனால் தான் இப் படத்தை எடுத்தாகவும் குறிப்பிட்டுள்ளார். படம் வெளிவந்த காலத்தில்(தற்போது) ருசியா அணு குண்டு தாக்குதலில் ஈடுபடும் என ஊடகங்கள் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. மீண்டும் ருசியா மீதான ஓர் அச்சத்தை அமெரிக்க மக்கள் மீது திணித்துள்ளார்கள்.

“My goal when making the film—I don’t make films to send a message, I made it because it’s a fascinating story. But part of that storytelling is getting back to basics about the bomb, stripping away policy statements, philosophy, the geopolitical situation and just looking at raw power that’s about to be unleashed and what that means for the people involved and means for all of us. Bulletin of the Atomic Scientists க்கு து J Mecklin ஆல் எடுக்கப்பட்ட செவ்வியில் நோலன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது நோலனின் நோக்கத்தை தெளிவு படுத்துகின்றது. அவரது முன்னைய படங்களிலும் இதனைக் காணலாம்.

1954ம் ஆணடு நடைபெற்ற Atomic Energy Commission (AEC) விசாரணையின் பின்னர், ஹைமருக்கு பாதுகாப்பு அங்கீகாரம் நிராகரிக்கப்படுகின்றது. ஹைமரின் ஏற்றமும், இறக்கமும் அமெரிக்காவிலேயே அமெரிக்க திட்டத்தின் கீழ் இயல்பாகவே நடைபெற்றது. இயல்பு என்று கூறுவதன் காரணம் அமெரிக்க அமைப்பு; இயல்பாகவே செயல்படும். இது இவருக்கு மட்டுமல்ல பலருக்கும் இதே வினை. அமெரிக்க அணு குண்டு விஞ்ஞானி அதுவும் கம்யூனிஸ்ட் அபிமானி எவ்வாறு அமெரிக்காவிற்கு வெளியே செல்ல முடியும்? அது அமெரிக்காவிற்கு பாதகமாகவே முடியும் என திட்டம் கருதியது.

ஹைமர் அமெரிக்க அதிபர் ரூமனைச் சந்திக்கும் காட்சியில் ரூமன் அழுத்தமாகக் கூறுகின்றார் “குண்டை யார் உருவாக்கியது என கேட்கமாட்டார்கள், யார் போட்டது எனத்தான் கேட்பார்கள்”. “நானே அணு குண்டை போடச் சொன்னேன்” என்கின்றார். ஹைமரை அழுகின்ற பிள்ளை எனவும் விழிக்கின்றார். ஓப்பின்ஹைமரின் இறுதிக் காலங்களின் ஆரம்பம் அங்கேயே ஆரம்பமாகிவிட்டது.

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் ஒரே அணியில் செயற்பட்டாலும், அமெரிக்காவிற்கு சோவியத் யூனியன் மீதும், சோவியத் சார்பு அமெரிக்க புத்திஜீவிகள், படைப்பாளிகள், விஞ்ஞானிகள் மீதும் அச்சமிருந்தது. First Red Scare (1917-1920) முடிவுற்ற பின்னரும் அந்த அச்சம் தொடர்ந்தது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையும், ஏகாதிபத்திய விரிவாக்கமும் பல புத்திஜீவிகளை இடது சாரிகளாக மாற்றியது.

ஒரு காலத்தில் ருசியா, அமெரிக்காவை தனது நண்பனாகவே கருதியது. அலஸ்கா கனடாவிற்கு அருகில், கனடிய எல்லையில் இருந்த போதும் அதனை வாங்கும்படி அமெரிக்காவையே கேட்டது. கிறீமியன் போரில் தோற்ற பின்னரே ருசியாஇஅலஸ்காவை 7 மில்லியன் டொலர்களுக்கு 1859 ல் விற்றது. அப்போது ருசியாவின் பிரதான எதிரி பிரிட்டன். கனடா பிரிட்டனின் கீழ் இருந்தது. அமெரிக்காவை தனது நண்பனாக கருதியே விற்றது.

அணு குண்டு தயாரிப்பின் நோக்கம் ஜேர்மனியல்ல, சோவியத் யூனியனேயாகும். யப்பானில் அணு குண்டு வீசப்பட்டு சரியாக இரு வாரங்களின் பின்னர் புரட்டாதி 15, 1945ல் வெளியிடப்பட்ட அமெரிக்க சுற்றறிக்கை பின்வருமாறு தெரிவிக்கின்றது. “சோவியத் யூனியனை உலக வரைபடத்திலிருந்து நீக்கு” (Wipe the Soviet Union off the map)) விரிவான அறிக்கையில் சோவியத் யூனியனின் 66 நகரங்களுக்கு 204 அணு குண்டுகள் வீசப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1945க்கும் 1950க்கும் இடைப்பட்ட காலத்தில் சோவியத் யூனியன் மீதான தாக்குதல்களுக்கு பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இத் திட்டங்களுக்கு பல்வேறு பெயர்கள் சூட்டப்படடன. Wipe the Soviet Union off the map) போன்றன. ஜே.டபிள்யு சிமித் எழுதிய The World’s Wasted Wealth” நூல் பல தரவுகளைக் கொண்டுள்ளது. Dr.Michio Kaku, Daniel Axelrod இணைந்து எழுதிய To win nuclear War.. நூலில் Dropsho திட்டத்தில் 300 அணு குண்டுகள் வீச தீட்டமிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. வேறு ஒரு அறிக்கையில் கிழக்கு ஜேர்மனி, சீனா போன்ற நாடுகளும் அமெரிக்காவின் பட்டியலில் இருந்ததாக நூலில் கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போர் யப்பான் மீதான அணு குண்டு வீசப்பட்ட பின்னர் முடிவுக்கு வந்ததா? இல்லை யப்பான் போரை முடிவுக்கு கொண்டு வரும் நிலைக்கு தள்ளப்பட்டது. அணு குண்டு வீசப்படாவிட்டாலும் ஒரு சில மாதங்களில் யப்பான் போரை நிறுத்தியிருக்கும். அல்லது சரணடைந்திருக்கும்.. இதனை அமெரிக்காவும் நன்கறிந்திருந்தது. அப்படியிருந்தும் குண்டுகள் ஏன் வீசப்பட்டன? Joseph Rotblat மன்ஹாட்டன் திட்டத்தில் பிரித்தானியாவிற்காக பங்குபற்றிய ஒரு போலிஷ் விஞ்ஞானி.

இவர் ஜேர்மனி வீழ்ச்சியடைந்த பின்னரும் அணு குண்டுகள் உபயோகிக்கப்படும் என உணர்ந்தமையினால், தொடர்ந்து பரிசோதனைகளில் ஈடுபடாமல் வெளியேறினார்.
சோவியத் யூனியனுக்கான எச்சரிக்கையும், பரீட்சித்துப் பார்த்தலுமே பிரதான காரணங்கள்.

பல அமெரிக்க ஊடகங்கள் இப் படம் ஸ்ராலினைப் பற்றிய விமர்சனங்களை அல்லது அவரின் சர்வாதிகாரத்தைப் பற்றி கூறவில்லை என விமர்சித்துள்ளன. அப்போதும் இப்போதும் அமெரிக்க ஊடகங்கள் ருசியாவை தங்களது எதிரியாகவே அமெரிக்க மக்கள் முன் காட்சிப்படுத்த விரும்புகின்றார்கள்.

நோலனும் இப் படத்தில் அமெரிக்காவின் நோக்கம் யப்பான் அல்ல சோவியத் யூனியன் என்பதனை கூறவில்லை. மனிதர்களின் தவறான தேர்வுகள் மிக மோசமான சரித்திரத்தை உருவாக்குகின்றன எனக் கூறி நோலன் தப்பிச் செல்கின்றார்.

ஓப்பின்ஹைமரின் சுயசரிதையிலேயோ அல்லது அவரது உரைகளிலோ அவர் அணு குண்டின் விளைவுகளைப் பற்றிப் பேசியுள்ளார். ஆனால் தனது தலைமையில் உருவாக்கப்பட்ட அணு குண்டு பல்லாயிரக் கணக்கான யப்பானியர்களைக் கொன்றமைக்கு மன்னிப்பு கேட்டதில்லை. நோலனும் ஹைமரைப் போலவே கடந்து செல்கின்றார். அணு ஆயுத பயம் ஒன்றை வெளிப்படுத்த முயல்கின்றார். ஆனால் வீசிய குண்டுகள் ஏற்படுத்திய விளைவுகளைப் பற்றி அவர் அக்கறை கொள்ளவில்லை. பரீட்சித்துப் பார்த்த நியு மெக்சிக்கோ மாநில மக்களின் அக, புற பாதிப்புக்களைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை. ஆனால் அம் மாநிலத்திலும் படமாக்கப்பட்டுள்ளது.

Los Alamos இங்கு தான் அணு குண்டு தயாரிக்கப்பட்டது. 1942ல் இங்கு வசித்த 32 குடும்பங்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற்றப்பட்டனர். பல குடும்பங்கள் துப்பாக்கி முனையில் வெளியேற்றப்பட்டனர். வளர்ப்பு மிருகங்கள் அவிழ்த்து விடப்பட்டன பல துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டன. பெரும்பாலான குடும்பங்கள் ஹிஸ்பானியக் குடும்பங்களாகும். இப் பிரதேசத்தின் அப்போது சுமார் 8000 பேர் வாழ்ந்தனர். இவர்களில் பெரும்பாலோனோர் பூர்விக – முதன் குடிகள், ஹிஸ்பானியர். இப் பிரதேசத்திலேயே நோலன் படப்பிடிப்பையும் நடாத்தியுள்ளார்.

நோலன் ஒரு விஞ்ஞானியல்ல. ஆனாலும் ஒரு மிகச் சிறந்த ஒளிப்பதிவாளரினதும்;, இசை இயக்குனரினதும் உதவியுடன் படத்தை எடுத்துள்ளார். ஆனாலும் அணு குண்டின் பின்னரான மிக மோசமான ஏகாதிபத்திய அரசியலை பேச மறுத்துவிடுகின்றார். அணு குண்டு யப்பான் மீது போடப்பட்டது தவறல்ல என்ற அமெரிக்க அறத்தை பார்வையாளர்களை உள்வாங்க வைத்துவிடுகின்றார்.

ஐயன்ஸ்ரைன் கூறியது போல் அரசியல்வாதிகளின் பாராட்டுக்கள் உங்களுக்கானதல்ல, அவர்களுக்கானது.
Albert Einstein tells his fellow physicist that he must remember when receiving future accolades from the political Establishment that such gestures are never “for you” but always “for them.”
September 14, 2023