வேகத்தை, விவேகம் வென்றதாக எமக்குள் உணர்வையும் ஏற்படுத்திச் சென்றுள்ளது.
‘Smart work better than Hard work’ என்ற எனது அசைக்க முடியாத நம்பிக்கையிற்கு கிடைத்த வெற்றியாக எனக்குள் கொண்டாடினேன்.
நான் என்றும் ஆதரிக்கும் ஆஜன்ரீனாவின் வெற்றி எனக்குள் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதினாலே ‘கனவு மெய்பட்டது’ என்ற தலைப்பை இதற்கு வைத்தேன்.
பெரும்பாலும் விளிம்பு நிலை மக்களிடம் இருந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் பிறந்து அந்த சூழலில் வளர்ந்த பலரும்தான் தென் அமெரிக்க மத்திய அமெரிக்க நாடுகளின் உதைபந்தாட்ட அணிகளின் வீரர்கள் என்ற வரலாறு…..
இந்த வீரர்களுக்கு வாய்ப்பளித்து தேசமாக இருப்பது அந்தத் தேசங்களை மக்களை நம்பிக்கைகளை எனக்குள் மரியாதை வட்டத்திற்குள் ஏற்புடமைமையாக்கியிருக்கின்றது. இதுதான் எனது அரசியலும் கூட.
உலகம் போற்றும் வீரர்களாக மாறிற பின்பு தன் நிலைகுறித்த புரிதலும் சமூகம் சாரந்த அக்கறைகளைத் தொடர்வதுமாக இவர்களின் செயற்பாடுகள் தொடரும் அந்த சமத்துவ சிந்தனை இவர்களை எமது ஆதர்ச புருஷர்களாகவும் வரிந்து கட்டச் செய்கின்றது.
வசதிகள் வாய்ப்புகள் உள்ளவரகளே தம்மை நிரூபிக்க முடியும் முன்னிலைக்கு கொண்டு வர முடியும் என்ற மேலாதிக்கங்களை தகர்க்கும் செயற்பாடுகளை நாம் ஆதரித்தே ஆக வேண்டும் என் கருத்தியலை விதைத்திருப்பதே நாம் மேற் கூறிய அணிகளை ஆதரிக்கும் ஆதர்ச புருஷர்களாக இருக்க வேண்டும் என்ற நியாயங்களை எமக்குள் கற்பித்து நிற்கின்றது.
எதிரணியாக விளையாடிய பிரான்ஸ் நாட்டு வீரர்களின் ஆட்டம் உதைபந்தாட்ட ரசிகர்கள் மொத்தப் போட்டியையும் கொண்டாடும் அளவிற்கு சிறப்பாக இருந்ததை நாம் இந்த இறுதிப் போட்டியில் அவதானிக்க முடிந்திருக்கின்றது.
இடை வேளையிற்கு முன்பாக ஆஜன்ரீனா அடித்த இரண்டு கோல்கள் அவர்களை இனித் தாண்ட முடியாது என்பதை பொய்பித்து ஆட்ட முடிவில் இருவரும் தலா இரண்டு என்றும் மேலதிக நேரத்தில் தலா மூன்று என்றுமாக மாற்றி அமைத்த பிரான்ஸ் இன் ஆட்டம் இந்த இறுதி ஆட்டத்தின் சுவாரசியத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றது என்பதே உண்மை.
32 அணிகள் 32 அணித் தலைவர்கள் என்று ஆரம்பித்த இந்த உலகக் கோப்பை மெஸ்ஸி (Lionel Messi), நெய்மர்(Neymar da Silva Santos Júnior), கிறிஸ்டியானோ ரொனால்டோ(Cristiano Ronaldo) என்ற மூவரை சுற்றி அவர்கள் தான் உதைபந்தாட்டத்தின் மும் மூர்த்திகள் முக் கடவுளர் என்று உலகமே பேசியது.
இதில் மெஸ்ஸி(Lionel Messi) ஜயைத் தவிர மற்றைய இருவரும் தமது கணக்கை கால் இறுதியுடன் கண்ணீருடன் முடித்து விடைபெற ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக தொடர்ந்தும் அரை இறுதி, இறுதி என்று பயணப்பட்டு வெற்றியை தமதாக்கிக் கொண்டவர்கள் மெஸ்ஸியின் ஆஜன்ரீனா தேசத்தினர்.
உலகப் பந்தாட்டப் போட்டியை நடாத்திய கட்டார் இதற்கான தயாரிப்புகளை செய்த போது ஏற்பட்ட உயிர் இழப்புகளும் அதற்குள் இருந்த அரபுலக, மேற்குலக சார்பு எதிர்ப்பு அரசியலும் என்ற பேச்சுகளுடன் ஆரம்பமான விளையாட்டுப் போட்டி பாரியளவில் குறைகள் ஏதும் இன்றி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது என்பது மகிழ்வே.
அது இரசிகர்கள், நாடுகள், அணிகள் என்பவற்றி;கிடையேயான எல்லா விடயங்களிலும் பொதுமையில் சிறப்பாக நடைபெற்று இருக்கின்றது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ(Cristiano Ronaldo) போன்ற மிகச் சிறந்த மனித நேசம்மிக்கவரை அவரது பயிற்சியாளர் கையாண்ட விதம் கூடவே இறுதிச் சுற்றிற்கு முன்னேற முடியாத நிலை…. தவிர்க்கபடக் கூடிய தோல்வி நிலை…
பிரேசிலின் அணி இறுதிச் சுற்று வரை முன்னேறி உலகக் கோப்பையை வெலலும் என்ற எதிர்பார்பை உருவாக்கியிருந்த நிலையில் அது சாத்தியப்படாது இடைநிலையில் தோற்றவர்கள்களின் வலி என்று பயணப்பட்டாலும் அவர்களும் கொண்டாட்டத்ற்குரியவர்களாக பலராலும் பார்க்கப்பட்டது.
இது உலக மக்களுக்கு பல செய்திகளைக் கூறி நிற்பதான பயணம் சிறப்பானதுதான்.
இருண்ட கண்டம் என்று அழைக்கப்படும் ஆபிரிக்காவின் மோறக்கோவின் அரை இறுதி வரையிலான முன்னேற்றம் பேசப்பட்டு அவர்கள் வெல்ல வேண்டும் என்பது விளிம்பு நிலையில் உள்ள நாடு.. உரிமைகள் மறுக்கப்பட்ட நிறவெறியினால் ஒதுக்கப்பட்ட கறுப்பின மக்களுக்கான ஆதரவும் உணர்வுகளும் வெளப்பட்டதாகவே பார்க்கப்பட வேண்டும்.
இந்த நாட்டு வீரர்கள் தமது குடும்ப உறவுகளை மைதானத்திற்கு அழைத்து வெற்றிகளை கொண்டாடியது…. குடும்ப உறவுகள் அது தாய் மகனாக மைதானத்தில் அரவணைத்த அந்த கணம் உலகிற்கு குடும்ப உறவுகளின் வலிமை, சிறப்பை குறியீட்டு ரீதியில் பெரும் வீச்சாகவும் வீசிச் சென்றிருக்கின்றது.
இவற்றிற்குள் அதிகம் பேசப்படாவிட்டாலும் பிரித்தனியாவின் கூட்டரசில் ஒரு தேசமாக இருக்கும் வோல்ஸ்(Walls) இன் தனி அணியாக பிரிததானியாகவிற்கு(UK) புறம்பாக அங்கீகரிக்கப்பட்டு போட்டியில் கலந்து கொண்ட நிலமை சுயாதிபத்தியம் என்ற கருத்தியலுக்கு உலக அரங்கில் கிடைத்த மறுக்க முடியாத அங்கீகாரமாக என்னைப் போன்று பலராலும் பார்க்கப்படுகின்றது.
என்றும்போல் தென் அமெரிக்க, ஐரோபிய நாடுகளின் ஆதிக்கம் இந்த உலகப் கோப்பை பந்தாட்டத்தில் இருந்து வந்த சூழலில் ஆசிய, ஆபிரிக்க, அரேபிய நாடுகளின் சில வெற்றிகள் அவர்களின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றது.
அது சவூதியுடன் தோல்வியுடன் ஆரம்பித்த அஜன்டீனாவின் கணக்கில் இருந்து ஆரம்பமானது.
தமது செயற்பாடுகளினால் பண்பானவர்கள் என்பதை நிரூபித்த மைதானத்தை சுத்தப்படுத்திய பின்பு வெளியேறிய ஜப்பான் விளையாட்டு வீரர்கள் பேசுபொருள் ஆக்கப்பட்டனர்.
அவர்கள் அடித்த இறுதிக் கணத்தில் கூட பந்தைக் கையாண்டு அடித்த அந்த கோலையும் விட இந்தப் பண்பு அதிகம் நேசிக்கப்பட்டது.
தனது அணி வென்ற போது தோற்ற அணியின் வீரர்களை தேடி ஓடி அவர்களை அரவணைத்துக் கொண்ட Messi செயற்பாடுகள் என்ற நெகிழ்ச்சிகளும்….
எதிரணியினர் பனால்டி அடிக்கும் போது பந்து வெளியே சென்ற போது சிரித்து எள்ளி நகையாடிது என்றுமாக பல மகிழ்வுகளும் சில நெருட்களுமாக கடந்து போனது இந்த உலகக் கோப்பை உதைபந்தாட்டப் போட்டி.
பலரும் போட்டிகளின் தம்மை 40 வருடங்களுக்கு முந்தைய பிலே(Pele)(Edson Arantes do Nascimento), மரடோனா(Diego Maradona)வின் ஆட்டங்களுடன் அந்த நினைவுகளுடன் இணைத்து பயணப்பட்ட சிறப்பான செய்திகளையும் தாங்கி நின்றது இந்த போட்டியின் திருவிழாக் காலம்.
பல வீரர்கள் இந்த உதைப்பந்தாட்டத்தில் விளையாடி இருந்தாலும் சிலர் மட்டும் இன்றுவரை பேசப்படுவதற்கு அவர்கள் சார்ந்த சமூக நிலைப்பாடுதான் காரணமாக இருந்தன. கூடவே அரசியல் சிந்தாந்த நிலைப்பாடுகளும் காரணம்.
குறிப்பாக பிரேசில் நாட்டு பல வீரர்கள் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் நிலையில் இருந்து வந்து தமது ஆரம்ப கால வாழ்வு வாழ்விடத்தை மறக்காது அந்த மக்களுக்காக தொடர்ந்தும் சேவை செய்வதற்கு மத்தியில் போத்துக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ சற்று அதிகம் உயர்ந்து நின்றாலும்…
இதற்கு அவர் பல்தேசியக் கம்பனிகளின் சமூகச் சீரழிவிற்கான செயற்பாகள் பற்றி விடயங்களில் எடுத்துக் கொண்ட நிலைப்பாடு முக்கிய காரணம் ஆகின்றது.
இது பிரேசில் தென் அமெரிக்க ஏன் எமக்கு தெரியாத பல்வேறு வீரர்களிடம் செனக்கல் வீரர்கள் உட்பட பலரிடமும் இருப்பது சிறப்பு.
கொண்டாடப்படுவர்கள் ஒரு செய்தியை சொல்லும் போது அது அதிகம் மக்களை சென்றடையும் ஏற்புடமையாக்கும் என்பது…..
கொக்கா கோலாவின் தீமைகள் என்ன என்பதை பல தளங்களில் நாம் சொல்லி வந்தாலும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன் அந்த மேசையில் இருந்த இரு கொக்கோ கோலா(Coca Cola)ப் போத்தலைத் தள்ளி வைத்து விட்டு தண்ணீரை அருந்துங்கள் என்ற செய்தி பாரிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தித்தான் இருக்கின்றது.
இதில் பலரைவுயும் விட பிடல் காஸ்ரோவிடம்… ‘சே’யிடம்…. தனக்கு இருந்த கொள்கை உடன்பாடும் நட்பும் சித்தாந்த அடிப்படையிலான உறவும் எல்லோரையும் விட அவர் அடித்த கோல்களை விட வென்ற உலகக் கோப்பையை விட உயர்த்திருகின்றது மரடோனாவை(Diego Maradona).
இடையில் ஏற்பட்ட ஒழுக்கக் குறைபாடுகளினால் விமர்சனங்களில் இருந்து புத்துயிர்ப்பு பெற்று வந்த அந்த வீரர் இந்த இறுதிப் போட்டியில் பானர்களில்(banners) அதிகம் வெளி வந்து அடையாளப்படுவதை அவர் சார்ந்திருந்த கொள்ளை அரசியல் கொள்கைகளை மறுப்பவர்கள் எவராலும் தடுக்கவும் முடியவில்லை.
இதுதான் அந்த கொள்கையின் பலமும் வெற்றியும் கூட.
1850 இற்கும் 1950 இற்கும் இடையில் அதிகம் இத்தாலிய, ஸ்பானிய 80 விகித குடியேற்ற வாசிகளினாலும் 20 சத விகித பழங்குடியினரால் தோராயமாக உருவான ஆஜன்ரீனாவின் வெற்றியை கொண்டாடுவதற்கு இதுதான் முக்கிய காரணம்.
மற்றைய எந்த அணியையும் விட அதிகமாக தேசமாக தமது நாட்டு வீரர்களை அணியில் கொண்ட நாடாக நின்று வென்றிருக்கின்றது.
தென் அமெரிக்க நாடுகளைத் தவிர ஏனை நாடுகளின் அணிகளில் அந்த நாட்டின் வீரர்கள் என்பதை விட பல்தேசிய வீரர்கள் அதிகம் உள்வாங்கப்பட்டிருப்பதை நாம் அவதானிக்க முடியும்.
அது குடியேற்றவாசிகள் அல்லது தமது அணியிற்கான விலைபேசல் வாய்ப்பளித்தல் என்ற வகையில் என்று நடைபெற்றிப்பது என்பது…
எமது பாடசாலை காலத்தில் பாடசாலை அணிகளில் திறமையான வீரர்கள் கற்றல் திறமைகளுக்கு அப்பால் அளவுகளில் வேறுபட்டாலும் தமது பாடசாலை மாணவராக திடீரென உள்வாங்கப்பட்டிருந்தது மகாஜனாவின் ‘முயல்’ இல் இருந்து யாழ் இந்துவின் ‘நீக்ரோ’ வீரர் வரை உண்மையானதுதான்.
இந்த உலக உதைப் பந்தாட்டப் போட்டி எனது பாடசாலை நினைவுகளையும் இழுத்துத்தான் வந்திருக்கின்றது.
உலகக் கோப்பையில் இரண்டாம் இடத்தில் வந்த பிரான்ஸ் நாடு தனது பனால்ரி அடியை அடித்த போது எனக்குள் ஒரு சந்தேகம் வந்தது பிரான்ஸ் கறுப்பினத்தவர்களின் நாடா என்று…?
ஏன் எனில் பனால்ரி அடித்த அனைவரும் ஏன் விளையாடிய ஓரளவிற்கு அனைவரும் கறுப்பினத்தவர்களாக இருந்தனர்.
அதுவும் அண்மையில் நிறத் துவேசம் அதிகம் செல்வாக்கு செலுத்தும் ஒரு நாட்டின் வீரர்கள் எவ்வாறு இவ்வாறு இருக்கின்றார்கள் என்று என்பதற்குள் இருக்கும் வர்க்க சேர்க்கையை புரிந்து கொள்ளவும் முடிகின்றது.
இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி இளம் வீரர் பிரான்ஸ் இன் முன்னணி வீரர் கைலியன் எம்பாப்பே(Kylian Mbappé) இற் வேகத்திற்கும் இளமையின் விளிம்பில் நிற்கும் லியோனல் மெஸ்ஸி(Lionel Messi) இன் விவேகத்திற்கும் இடையே நடைபெற்ற போட்டியாகவே நான் பார்க்கின்றேன்.
இந்த உதைபந்தாட்ட உலகக் கோப்பையின் வெற்றி வேகத்தை விட விவேகம் வென்றுள்ளதான் செய்தியைத் தாங்கி முடிவற்றுள்ளது.
இந்த விவேகத்தைததான் மேர்சி போட்டிகள் அனைத்திலும் காட்டி வந்தார் சுமம்பவர்களும் போல் அடித்து பெருமையைச் சேர்பவர்களும் தன்னைத் தவிர்த்த எனையவர்களாகவும் தனது அணியின் வீரர்களை இணைத்துக் கொண்டு விளையாடினால் அதுதான் அவர்கள் தேசமாக வெற்றிய தமதாக்கிக் கொண்டனர்.
பிரான்ஸ் அடித்த பெரும்பாலான கோல்கள் அது பனால்ரியாக இருக்கலாம் மேலதிக நேரத்தில் அடித்த கோலாக இருக்கலாம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் அடித்த கோல்களாக இருக்கலாம் எல்லாம் ஆஜன்ரீனாவின் கோல் காப்பாளர்(Keeper) எமிலியானோ மார்டினெஸ்(Emiliano Martinez) ன் விரல்களை சீண்டாமல் போக முடியவில்லை என்பது அவரின் ஆட்டத் திறமையை சிறப்பாக மெச்சியாக வேண்டும் என்ற நிலையிற்கு என்(ம்)னைத் தள்ளியுள்ளது.
ஒரு நடனத்துடன் எமிலியானோ கோல் தடுப்புகளை(சிறப்பாக பனால்ரி கோல்களை) ஆரம்பிக்கும் இந்த காப்பாளர் ஒரு கவிதைதான் பலரைப் போலவே நானும் ரசித்தேன்.
அவரின் இந்த அசாத்தியத் திறமையின் வெளிப்பாடின்றி இந்த வெற்றி சாத்தியமா என்ற கேள்விகளை எமக்குள் ஏற்படுத்தியும் இருக்கின்றது
இதனையும் மீறிய கோல்கள் இந்த பிரான்ஸ் இளம் கறுப்பின வீரர்களின் வேகமாக என்னால் பார்க்க முடிகின்றது.
இதற்கு அப்பால் அந்த விவேகம் என்னை மெய் சிலிர்க்க வைக்கின்றது.
அதுவும் நாமும் இந்த வயதிலும் இந்த விளையாட்டை விளையாட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் பந்துகளை மற்றவர்களிடம் கொடுத்து தட்டிவிடுதல் என்ற வகையிலான ஆட்டம் ஆஜன்ரீனாவின் ஆட்டம்.
இதில் மேர்சியின் தலைமைத்துவம் அவரின் பண்பு மிகவும் உன்னதமாக வெளிப்பட்ட அந்த மேலதிக நேரத்தில் மேர்சி(Lionel Messi) தன்னிடம் இருந்த பந்தை பிரான்ஸ் வீரரிடம் பறிகொடுத்த பின்பு இன்னும் இரண்டு தட்டில் பிரான்ஸ் இன் கோலானது என்பது மேர்சியின் விளையாட்டின் அருமையை சொல்லி நிற்கின்றது.
இந்த பந்தை மேர்சி(Lionel Messi) பிரான்ஸ் வீரரிடம் பறி கொடுக்காவிட்டால் பனால்ரி என்ற நிலையிற்கு மூன்று இற்கு மூன்று என்ற அளவிற்கு ஆட்டம் சென்றிருக்க வாய்ப்பு இல்லாமல் போய் ஆஜன்ரீனா மூன்று, பிரான்ஸ் இரண்டு என்று ஆஜன்ரீனா மேலதிக நேரத்திலேயே ஆட்டத்தின் வெற்றியை தனதாக்கிக் கொண்டிருக்கும்.
பல செய்திகளை தனதாக்கி இந்த விளையாட்டிற்குள் இருக்கும் சமூக விஞ்ஞான அரசியல் உறவுகளையும் மனித நேயங்களையும் கொண்டாட்டங்களையும் வலிகளையும் இரணங்களையும் தழுவியதாக முடிந்திருக்கும் போட்டி.
உலகக் கோப்பை உதை பந்தாட்டத்தை எதிர்காலத்திலும் நாம் வட அமெரிக்காவில்(கனடா மெக்சிகோ அமெரிக்கா இணைந்து நடத்தும்) காண்பதற்கு இன்றும் நாலு வருடங்கள்(2026) காத்திருக்கத்தான் வேண்டும்.